ஈஷா சமையல்

பஞ்ச ரத்ன டால்

தேவையான பொருட்கள்

1/4 கப் துவரம் பருப்பு

1/4 கப் உளுத்தம் பருப்பு

1/4 கப் பயத்தம் பருப்பு

1/4 கப் கடலை பருப்பு

1/4 கப் கொள்ளு (சிலர் கொள்ளு பயன்படுத்துவதற்கு பதிலாக மைசூர் பருப்பு என்னும் சிவப்பு வண்ணத்திலுள்ள பருப்பை உபயோகிப்பார்கள். கொள்ளு ஒரு சிறந்த மாற்றம்)

3 தக்காளி

2 காய்ந்த மிளகாய்

1/2 டீஸ்பூன் ஜீரகம்

1 ஸ்பூன் நெய்

1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

1/2 டீஸ்பூன் ஜீரக தூள்

1/2 டீஸ்பூன் தனியா தூள்

2 டீஸ்பூன் மிளகாய் தூள்

100 கிராம் கொத்தமல்லி தழை

1 இன்ச் இஞ்சி

உப்பு தேவையான அளவு

செய்முறை

5 வகை பருப்புகளையும் நன்றாக தண்ணீர் விட்டு களைந்து விடவும்.

முதல் நாள் இரவே பருப்பை ஊற வைக்கவும்.

மறுநாள் ஊற வைத்த பருப்பை குக்கரில் போட்டு, 4 பங்கு தண்ணீர் விட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் நெய் மற்றும் 1/2 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

இஞ்சி மற்றும் தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து, 2 டீஸ்பூன் நெய் ஊற்றி, சூடானவுடன் அதில் ஜீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் நறுக்கிய இஞ்சியை சேர்த்து வதக்கவும்.

பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து 15-20 வினாடிகள் மிதமான சூட்டில் வதக்கி விடவும்.

இதில் தனியாத்தூள் மற்றும் ஜீரகப்பொடி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

பின்னர் மிளகாய்தூள் சேர்த்து, அதில் வேகவைத்த பருப்பையும் சேர்க்கவும்.

மிதமான சூட்டில் 4-5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும் அல்லது நன்றாக சேர்ந்து வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி விட்டு, அதில் நறுக்கிய பச்சை கொத்துமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு: பருப்பு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, இந்த பூமிக்கும் நல்லது. புரத சத்தும் மற்றும் வேறு பல சத்துக்களும் கொண்டது. அது மட்டுமல்ல, இதை விளைவிக்க, இறைச்சிக்கு தேவையான தண்ணீர் அளவை விட 43% நீர் குறைவாக தேவை. இதனால் பூமியில் நீர் நிலை சேமிக்கப்படுகிறது.