நடப்புகள்

சத்குருவை தொடருங்கள்

கடந்த சில வாரங்களின் கண்ணோட்டம்

சத்குருவுடன் சிறப்பு தைப்பூச பௌர்ணமி சத்சங்கம்

18
டிசம்பர்

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தைப்பூச நாளன்று, சத்குருவுடன் 'முழுநிலவில் அருள் மடியில்' பௌர்ணமி சத்சங்க தொடரின் இறுதி சத்சங்கம் நிகழ்ந்தது. அதில், பெங்களூருவில் புதிதாக அமையவுள்ள ஈஷா யோக மையத்திற்கு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்படும் என்ற பெரும் அறிவிப்பை வெளியிட்டார் சத்குரு. தொடர்ந்து சத்குரு, மார்கழி மாதமானது மனித உடல் மற்றும் மனதில் ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க தாக்கம் பற்றி விளக்கினார். இந்த சத்சங்க தொடரின் சிறப்பம்சமாக வாயுக்கள் செயல்படும் விதம் பற்றி விளக்கி வரும் சத்குரு, இம்முறை வியான பிராணன் பற்றி விவரித்தார். இவ்வாயுவை செயல்படுத்துவது ஆன்மீக பாதையில் உள்ள ஒருவருக்கு எவ்வாறு உறுதுணையாக இருக்கும் என்பது பற்றி விரிவாக பேசினார் சத்குரு. நிறைவாக, மனித உடலமைப்பில் உள்ள பூமி தன்மையை செயல்படுத்துவதன் மூலம் வியான பிராணனை செயல்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த செயல்முறையில் மக்களை ஈடுபடுத்தி வழிநடத்தினார் சத்குரு.

ஐநா உலக உணவு திட்டத்தின் தலைவர் டேவிட் பெஸ்லே உலகளாவிய அளவில் பசியை போக்குவது பற்றி சத்குருவுடன் கலந்துரையாடினார்.

22
டிசம்பர்

குருவின் மடியில்

28
டிசம்பர்

அமெரிக்காவில் உள்ள ஈஷா இன்ஸ்டிடியூட் ஆப் இன்னர் சயின்ஸ்-ல் வருடாந்திர குருவின் மடியில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சத்குரு, ஒருவர் தனது வாழ்வு நிலையற்றதாக இருப்பதை உணர்வதன் ஆற்றல் மற்றும் நமது சுற்றுச்சூழலை விழிப்புணர்வோடு கையாள்வது குறித்து பேசினார். ‌2022ம் ஆண்டை மண்ணை காப்பதற்காக தாம் அர்ப்பணித்துள்ளதாகவும் குறிப்பிட்டார் சத்குரு. பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு இடத்தில் வாழும் அளப்பரிய மதிப்பு பற்றி பேசிய சத்குரு, 2023ம் ஆண்டில் தாம் பிரதிஷ்டைகள் நிகழ்த்துவதில் அதிக கவனம் செலுத்தவிருப்பதாகவும் பகிர்ந்துகொண்டார்.

இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு சத்குரு பேட்டி

29
டிசம்பர்

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் சந்தித்து வரும் ஏற்றத் தாழ்வுகளை குறிப்பிட்டு பேசிய சத்குரு, இரண்டாம் அலையின் கடும் தாக்கம் பல மதிப்பு மிக்க உயிர்களை பலி கொண்டதையும், மக்கள் மனநிலையில் ஏற்படுத்திய கடும் பாதிப்பையும் குறித்தும் பேசினார்.‌ கடந்த காலத்தில் எத்தனை சவால்களை சந்தித்து இருந்தாலும், நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் 2022 ஆண்டை ஒருவர் எவ்வாறு உற்சாகத்துடன் எதிர்கொள்ள முடியும் என்பது பற்றியும் பேசினார் சத்குரு.

சத்குருவுடன் புத்தாண்டு சத்சங்கம்

31
டிசம்பர்

இந்த உலகம் எவ்வாறு ‌ஒரு வாழும் உயிரினமாக இருக்கிறது ‌என்று விரிவாக விளக்கி சத்சங்கத்தை துவங்கினார் சத்குரு. பல லட்சக்கணக்கான உயிர் வடிவங்களை ‌நமது காலுக்கடியில் உள்ள மண் தாங்கிக்கொண்டு எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டதாக இருக்கிறது என்பதிலிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டார் சத்குரு. தொடர்ந்து பேசிய சத்குரு, அசைவற்று இருப்பதை அறியாமல் இருப்பதே மனிதர்களை பாதிக்கக்கூடிய பெரும் நோய் என்பது பற்றியும் விளக்கினார்.

சத்குருவுடன் எரிக் சோல்ஹெம் கலந்துரையாடல்

1
ஜனவரி

ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் உலக வளங்கள் மையத்தின் World Resources Institute (WRI) தலைமை ஆலோசகராக இருப்பவர் எரிக் சோல்ஹெம். இவருடன் ஆன்லைனில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, சுற்றுச்சூழல் பற்றி தற்போது நிலவும் கருத்துக்களை மாற்றி, மண்ணை காப்பது அனைத்திலும் முதன்மையானதாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் சத்குரு. மண்ணை ஒரு பொருளாக நடத்தாமல், வாழும் உயிரினமாக நாம் அணுக வேண்டும் என்றும் குறிப்பிட்டார் சத்குரு. சத்குரு துவங்கவிருக்கும் விழிப்புணர்வான உலகம் இயக்கத்திற்கு தனது வரவேற்பை தெரிவித்த எரிக், தனது ஆதரவை வழங்குவதாகவும் அறிவித்தார்.

சத்குருவுடன் ருத்ராட்ச தீட்சை

3
ஜனவரி

சத்குருவிடமிருந்து சக்தி வாய்ந்த தீட்சையை பெறுவதுதானே புத்தாண்டுக்கு ஒரு சிறந்த துவக்கமாக அமைய முடியும்! கடந்த ஆண்டு மஹாசிவராத்திரி அன்று சத்குரு பிரதிஷ்டை செய்த ருத்ராட்சங்கள் பதிவு செய்திருந்த லட்சக்கணக்கான மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது, ருத்ராட்சத்தை பெற்ற மக்களுக்கு ஆன்லைன் மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தீட்சை அளித்த சத்குரு, ஒருவர் ருத்ராட்சத்தை எப்படி பயன்படுத்திக் கொள்வது மற்றும் பராமரிப்பது என்பது குறித்து விளக்கினார். ருத்ராட்சம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பேசிய சத்குரு, ஒருவர் விடுதலை அடையும் பாதையில் இருக்கிறார் என்பதை ருத்ராட்சம் எவ்வாறு குறிக்கிறது என்பது குறித்தும் ‌பேசினார்.