பிற மொழிகளில் வாசிக்க:
English | Hindi

அன்பு

அன்பு என்பது இனிக்கும் வார்த்தைக்கோ

மென்மையான தீண்டலுக்கோ

பொங்கும் உணர்ச்சிக்கோ மட்டுமல்ல.

அன்பு தான் நேர்மை, வீரம் மற்றும்

தியாகத்திற்கு அடிக்கல்.

அன்பில் நனைந்த இதயங்கள் கொண்டோரைத் தவிர

தங்கள் நலனிற்கு மேல் பிறர்

நலனைப் பேணுவோர் வேறு உண்டோ.

அன்பில் ஆழ்ந்தோரைத் தவிர

அச்சுறுத்தல்களையும் அபாயங்களையும்

எதிர்த்தோர் வேறு உண்டோ.

தங்களுக்கு முக்கியமான அனைத்தையும் தங்களையும்

அன்பின் கோவிலில் மனமுவந்து தியாகம் செய்தோர்

அன்பர்களைத் தவிர வேறு உண்டோ.

அன்பு, மனித குணங்கள் அனைத்திலும்

மிக மென்மையான, மிக உறுதியான குணம்.

- சத்குரு

Share This