தாக்கத்தினை ஏற்படுத்தவல்ல ஒரு குழுவுடன், சத்குரு மண் காப்போம் குறித்து கலந்தாலோசிக்கிறார்
15 அக்
ஈஷா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் சயின்ஸஸ், மெக்மின்வில், டென்னஸியில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மண் மற்றும் மனித நல்வாழ்வு குறித்து சத்குரு உணர்ச்சி ததும்பப் பேசினார். மண் அழிவினால் எழும் தொடர் பிரச்சனைகளை அவர் பட்டியலிட்டார்: விவசாயிகள் தங்கள் குழந்தைகளை நகரத்துக்கு அனுப்புகின்றனர், இந்திய இளைஞர்களிடையே தற்கொலைகள், அச்சுறுத்தும் உணவுப் பற்றாக்குறைகள். மேலும், பின்வரும் ஒரு மகிழ்ச்சியான செய்தியையும் அவர் குழுவினருடன் பகிர்ந்துகொண்டார். மண் காப்போம் கொள்கை பரிந்துரைகள் இந்தியாவில் எவ்வளவு நல்லவிதமாக எதிர்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதோடு, கர்நாடக மாநிலம் பெரிய அளவில் மரப்பயிர் விவசாயத்தை நடைமுறைப்படுத்துவதையும் அவர் கூறினார். மேலும், அந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பேசும்போது, தென் அமெரிக்காவில் எதிர்கால உணவு உற்பத்தி முன்னேற்றம் மற்றும் வடிவமைப்பில் விவசாயிகளுக்கு உதவுவதற்கு சோதனைக்கூடங்களைத் திறப்பது குறித்துக் கூறினார்.

பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கு அல்ல: சத்குருவுடன் ஒரு பிரத்யேகமான கேள்வி-பதில் நிகழ்ச்சி
17 அக்
ஒரு சிறிய அறிமுகவுரைக்குப் பிறகு, சத்குரு பார்வையாளர்களிடம் இருந்து எழுந்த கேள்விகளுக்குள் பிரவேசித்தார். தேவி தான் நிகழ்வின் மையக்கரு என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம், லிங்கபைரவியை மாந்திரீகத்துக்கு பயன்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு முதலில் பதில் வழங்கினார் சத்குரு. இது நிகழ்வதற்கு ஏன் ஒருபோதும் வாய்ப்பில்லை என்பதற்கு விளக்கமளித்த பிறகு, தியானலிங்கமும், லிங்கபைரவியும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விதத்தில் எப்படி அடிப்படையிலேயே வித்தியாசப்படுகிறது என்பதையும் சற்று ஆழமாக விவரித்தார். பெண்தன்மையைப் பாதுகாத்து பராமரிப்பதன் முக்கியத்துவம், சர்ப்பங்கள், நாகா மற்றும் ஆழமான புரிதல் குறித்தும் அவர் உரையாடினார்.

GQ பத்திரிக்கையுடன் சத்குருவின் நேர்காணல்
21 அக்
GQ பத்திரிக்கைக்கான இந்த உரையாடலில், பல்வேறு நடப்புப் பிரச்சனைகள் குறித்து, தனது தனித்துவமான கண்ணோட்டத்தை சத்குரு வழங்கினார். உரையாடலுக்கு சுவை சேர்க்கும்விதத்தில், அவரது குழந்தைப் பருவத்தின் நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டதுடன், தற்காலக் கல்விமுறையானது சாதகர்கள் மற்றும் தேடுதல் கொண்டவர்களைக் காட்டிலும், நம்பிக்கையாளர்களை உற்பத்தி செய்யும் விதமாக இருப்பதை அவர் வெளிப்படுத்தினார். மேலும், அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கு, மண், பெருந்தொற்று, உக்ரைன் போர் மற்றும் முக்கியமான உலக விஷயங்கள் குறித்தும் சத்குரு பேசினார்.

சினெர்ஜி மாநாடு 2022ல் சத்குருவுடன் கேள்வி-பதில்
27 அக்
ஃப்ளோரிடா, ஆர்லண்டோவில் நிகழ்ந்த ITServe Alliance’s Synergy Annual Conference மாநாடு 2022ல், சத்குருவிடம் தனிப்பட்ட தங்களது கேள்விகளைக் கேட்கும் வாய்ப்பு பங்கேற்பாளர்களுக்கு கிடைத்தது. குழந்தைகள் மற்றும் திருமணம் என்ற தலைப்புகளில் தொடங்கி, மனித உறவுகளுக்கு அடிப்படையான ஒரு பிரச்சனைப் பற்றி பேசிய சத்குரு, நட்பின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். நேர்காணலின் பிற்பகுதியில், உரையாடல் வேறுபக்கம் திரும்பியது. மின்சார வாகனங்கள் மீது அதிகரிக்கும் நமது சார்பு நிலை, மற்றும் அது எதிர்காலத்தில் எப்படி பிரச்சனைகளுக்கு வழிகோலும் என்று உரையாடினர். இறுதியாக, வர்த்தகம் மற்றும் வாழ்க்கை இரண்டிலும் காணப்படவேண்டிய தொலைநோக்குப் பார்வையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு சத்குரு உரையாடலை நிறைவு செய்தார்.

“இலட்சிய கிராமம்” குறித்து ஸ்டான்ஃபோர்ட் பேராசிரியர், சத்குருவுடன் உரையாடல்
31 அக்
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில், குழந்தை மருத்துவம், மயக்கவியல், அறுவை சிகிச்சை & வலி மருத்துவம் ஆகிய துறைகளின் பேராசிரியர் டாக்டர். கன்வல்ஜித் சன்னி ஆனந்த் மற்றும் சத்குரு மேற்கொண்ட உரையாடலில், இரண்டு பெரும் தலைப்புகளில் கவனம் செலுத்தினர்: பொருளாதாரம் மற்றும் வாழ்வியல் சூழல்கள். கிராமப்புற இந்தியாவில் குழந்தைகளின் அவல நிலையை அழுத்தமாக எடுத்துரைத்த சத்குரு, குழந்தைகளின் வளர்ச்சி குறைபாட்டிற்கு மண்ணின் சத்துக்குறைவினால் உணவில் போதுமான நுண்ணூட்டம் மற்றும் வைட்டமின் இல்லாமல் போனது எப்படி காரணமாகிறது என்பதையும் விளக்கினார். விவசாயிகளிடையே ஒரு சமுதாய உணர்வை மீண்டும் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை அவர் விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், இதனைத் தொடர்ந்து டாக்டர். சன்னியும், குறைந்த வருவாய் கொண்ட பின்னணியிலிருந்து வரும் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவு மற்றும் சத்துணவு வழங்கும் திட்டத்தின் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயன்ஸஸில், சத்குருவுடன் ஒரு மாலைப்பொழுது
5 நவ
ஓர் ஆழமிக்க உரையில், சத்குரு விழிப்புணர்வின் இயல்பைப் பற்றி முக்கியமாக எடுத்துரைத்தார். நாம் வெளியுலகில் மிகவும் அதிகமான கவனம் செலுத்துவதால், நமது உள்தன்மையை ஆராய்ந்தறிவதற்கு புதிய கருவிகள் அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், யோகா மிக நீண்ட காலமாக நிலைத்திருப்பது ஏன் என்பதையும், வாழ்க்கையை எப்படி முழுமையாக வாழ்வது மற்றும் ஒட்டுமொத்த உலகத்துக்கும் மாற்றத்துக்கான கருவிகளை வழங்குவதற்கு தகவல்தொடர்பு தொழில்நுட்பம் நமக்கு எப்படி உதவுகிறது என்பது குறித்தும் பேசினார்.

ஆன்லைனில் ருத்ராட்ச தீட்சை
23 நவ
சத்குரு வழங்கிய ருத்ராட்ச தீட்சை நிகழ்வில், உலகெங்கிலும் இருந்து மக்கள் ஆன்லைனில் பங்கேற்றனர். ருத்ராட்சத்தை முறைப்படி பயன்படுத்தவும், பராமரிக்கவும் தேவையான வழிகாட்டலைப் பெற்றுக்கொண்ட பிறகு, பங்கேற்பாளர்கள் தங்களது கிரகிக்கும் திறனை மேம்படுத்திக்கொள்வதற்கான ஒரு செயல்முறையையும், ஒரு குறிப்பிட்ட உச்சாடணத்தையும் கற்றுக்கொண்டனர். ருத்ராட்ச தீட்சையின் முக்கியத்துவத்தையும், குறிப்பாக எளிதில் மனம் அலைபாயக்கூடிய, கவனம் சிதறக்கூடிய அல்லது வாழ்க்கையில் தங்களது பாதையிலிருந்து விலகக்கூடிய மக்களுக்கு ருத்ராட்ச தீட்சை எப்படி நன்மை பயக்கிறது என்றும் சத்குரு விளக்கினார்.