விருப்பப்படி கூறிக்கொள்ளுங்கள் -
காதல், நட்பு, நோக்கம், கடவுள் என.
புலப்படாத ஒன்றில்
மாயையை தேடுகிறீர்கள் - வாழ்வில் உதவுமென,
அர்த்தங்களை கண்டறிய!
தேடுதலை தொலைத்தால்
புலப்படுமே அர்த்தங்களற்ற அந்த இருப்பு.
படைப்பெனும் பிரம்மாண்டத்தில்
அர்த்தங்களெனும் களங்கம் இல்லாமல்
பயணித்திட!