இளமை துடிப்பு பொங்கும் இளைஞனாக இருந்தபோதே இமயமலை வரை தனது இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டிருக்கிறார் சத்குரு. 41 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே காட்டாற்று வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை இன்னும் இளமையாக வாழ்ந்து காட்டும் விதமாக தனது இருசக்கர வாகனத்தில் மலைச்சிகரங்களின் மடியில் பயணத்தைத் தொடர்கிறார் சத்குரு. செப்டம்பர் 27 அன்று நொய்டாவில் துவங்கிய பயணத்தில் தங்களது இருசக்கர வாகனத்துடன் மேலும் 10 பைக் ஓட்டிகள் சத்குருவுடன் இணைந்தனர். சுமார் 60 மக்கள் பேருந்துகளில் அவர்களை தொடர்ந்தனர்.
பயண திட்டத்தின் ஒரு பகுதியாக சத்குரு, உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரு. புஷ்கர் சிங் தாமி அவர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது அவர்கள் ஆன்மீகம் என்றாலே உத்தரகாண்ட் என மக்களின் நினைவுக்கு வருமாறு மாநிலத்தை உலகிற்கு எவ்வாறு வழங்க முடியும் என்பது குறித்து கலந்துரையாடினார்கள்.
சுவாமி ராம்தேவ் அவர்கள் சத்குருவிற்கு சிறப்பான வரவேற்புடன் தங்குமிடம் அளித்து உபசரித்தார்.
சத்குரு முன்செல்ல, ரிஷிகேஷில் இருந்து குப்தகாசி வரையான கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகளினூடே செல்லும் சாலையின் வழியே பயணித்து குழுவினர் ருத்ரபிரயாகை அடைந்தனர். அலக்நந்தா மற்றும் மந்தாகினி நதிகள் சங்கமித்து புனித கங்கையாக பிரவாகமெடுக்கும் இடமே ருத்ரபிரயாக். அங்கே சற்று ஓய்வெடுத்த பிறகு மீண்டும் பயணம் தொடர்ந்தது.
அடுத்து, பங்கேற்பாளர்கள் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கேதார்நாத் ஆலயத்தை அடைந்தனர். இந்திய ஆன்மீகத்தின் கோட்டை முகப்பாக விளங்கும் பிரம்மாண்டமான இந்த இருப்பில் பங்கேற்பாளர்களுடன் சத்குரு சிறிது நேரம் செலவிட்டார். அடுத்ததாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த கலாச்சாரத்தில் முக்கியமான யாத்திரைத் தலமாக விளங்கும் பத்ரிநாத்தை குழுவினர் அடைந்தார்கள்.
பயணம் முழுவதுமே உற்சாகமும் வேடிக்கையுமாக தொடர, அதில் விறுவிறுப்பை சேர்க்கும் விதமாக தவிர்க்க முடியாத நிலச்சரிவுகளும், அதில் சரிந்து விழுந்த பாறைகளும் தங்கள் பங்கிற்கு அபாயத்தைக் கொண்டு வந்து சேர்த்தன. ஜோஷிமத் செல்லும் வழியில் அபாயத்தை மிக நெருக்கத்தில் சத்குரு சந்திக்க நேர்ந்தது. தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் நிலப்பரப்பில் எதிர்பாராத விதமாக எங்கிருந்தோ திடீரென நிலச்சரிவு ஏற்பட, குழுவினருக்கு அதிர்ஷ்டமும் துணைவர, சூழ்நிலை வெற்றிகரமாக நிர்வகிக்கப்பட்டது. கவனமாக பயணம் செய்து அனைவரும் காயமின்றி பாதுகாப்பாக அந்த பகுதியைக் கடந்தனர்.
அக்டோபர் 7 அன்று, பொக்கிஷமான நினைவுகளை தங்களுடன் சுமந்துகொண்டு இதுவரை சந்தித்திராத ஒரு விறுவிறுப்பான பயணத்தை மேற்கொண்ட திருப்தியுடன் மலைகளிடம் இருந்து குழுவினர் விடை பெற்றார்கள். இந்த பிரம்மாண்டமான மலைகளையும் புனித தலங்களையும் அனுபவித்தறியும் நோக்கில் மேலும் பல குழுக்களாக தியான அன்பர்கள் அவர்களது பயண திட்டத்தின் வழியை பின் தொடர்ந்தனர்.
சுற்றுச்சூழல் மாற்றம் எனும் சிக்கலான சவாலினை எதிர்கொள்வதற்கான எளிமையான தீர்வை முன்வைத்து நிகழ்வில் பேசினார் சத்குரு. சூழலியலில் மண்ணின் வளம் எவ்வாறு முக்கிய பங்காற்றுகிறது என்பது குறித்தும், கரிம வளத்தை மீண்டும் மண்ணிற்கு கொண்டு வருவதே இந்த பூமிப் பந்தை காப்பாற்றும் சிறந்த வழி என்றும் தனது உரையில் விளக்கினார் சத்குரு. நிறைவாக, சூழலியல் குறித்த விழிப்புணர்வான அணுகுமுறையே இன்றைய காலகட்டத்தின் தேவை என்றும், இந்த முயற்சி சாதாரண மக்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்றும் தனது செய்தியை பதிவு செய்தார் சத்குரு.
24 மணி நேரம் தொடர்ந்து நிகழ்ந்த பிரம்மாண்டமான இந்த நிகழ்வில் முக்கிய பேச்சாளராக பங்கேற்றார் சத்குரு. இதில் முக்கிய தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி மற்றும் திரைத் துறையில் முக்கிய நட்சத்திரமான அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் சத்குரு பேசுகையில், உலகளாவிய அளவில் ஜனநாயக முறையை பின்பற்றும் நாடுகளில் வாக்காளர்கள் மத்தியில் பெருமளவு கொண்டுவரப்பட வேண்டிய விழிப்புணர்வு குறித்தும், முக்கியமான பிரச்சனைகளான மண் வளம், நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்தும் தனது உரையில் குறிப்பிட்டார்.
சத்குரு பங்கேற்ற நிகழ்வை 34 ஆண்டுகள் ஐஏஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. பிரகாஷ் சர்மா அவர்கள் தொகுத்து வழங்கினார். தற்போது "சப்ஜிவாலா" எனும் விளைபொருள் உற்பத்தி நிறுவனத்தை அவர் துவங்கியுள்ளார். இமாலய பயணத்தின்போது சத்குருவின் அனுபவத்தைப் பற்றி அவர் கேட்டறிந்தார். தொடர்ந்த அவர்களது உரையாடலில், பொறுப்பான சுற்றுச்சூழல் சுற்றுலா, சுற்றுச்சூழலியல் அபாயங்களை தவிர்த்தல் மற்றும் நாட்டின் குடிமக்கள் எவ்வாறு விழிப்புணர்வான உலகை கட்டமைப்பதில் உதவ முடியும் ஆகிய தலைப்புகள் இடம்பெற்றன.