நவராத்திரியின் முதல் மூன்று நாட்களுக்கு, குங்கும அலங்காரத்தில் தேவி அருள்பாலித்தாள். துர்கையின் அம்சமான இந்த ஆக்ரோஷமான தெய்வீக ரூபம், அதிகாரம் மற்றும் பொருள் சார்ந்த நல்வாழ்வைக் குறிக்கிறது.
நவராத்திரியின் முதல் நாளில் தேவிக்கு மலர்கள் அர்ப்பணம்
நவராத்திரியின் நான்காம் நாளில் மஞ்சள் அலங்காரத்தில் ஜொலிக்கும் தேவி. தேவியின் பெண் தன்மை மிளிரும் நவராத்திரியின் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் நாட்களில் லட்சுமி (ரஜஸ்) ரூபத்தில் அருள்பாலிக்கும் தேவி.
நவராத்திரியின் இறுதி மூன்று நாட்களும் சந்தன அலங்காரத்தில் அருள்பாலிக்கும் லிங்கபைரவி. தேவியின் சரஸ்வதி (சாத்வ) ரூபம், பொருள்தன்மையின் வரம்புகளை கடந்து செல்வதைக் குறிக்கிறது.
தானிய சமர்ப்பணம் - தேவியின் அருள் வேண்டி, உயிர்சக்தியை குறிக்கும் தானியங்கள் நவராத்திரி நாட்களில் தினமும் தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது
லிங்கபைரவி ஆலயத்தை அலங்கரிக்கும் அழகிய தீபங்கள்
சங்கரன் மேனன் மற்றும் ஈஷா சமஸ்கிருதி மாணவர்கள் இணைந்து கர்நாடக வயலின் இன்னிசை நிகழ்ச்சி வழங்கினார்கள்.
நவராத்திரியின் ஒவ்வொரு இரவும் நடைபெற்ற நெஞ்சையள்ளும் கலைநிகழ்ச்சிகளை அனைவரும் ரசித்து மகிழும் வகையில் நேரலையில் ஒளிபரப்பானது
ஈஷா சமஸ்கிருதி முன்னாள் மாணவர்கள் வழங்கிய நடன நிகழச்சி
கலாஷேத்ரா நுண்கலை கல்லூரியின் முன்னாள் மாணவியும், ஈஷா சமஸ்கிருதியின் நடன ஆசிரியையுமான திவ்யா நாயர் அவர்களின் பரதநாட்டியம்
சிறு வயதிலிருந்தே பாரம்பரிய இசையில் ஊறித்திளைத்த ஈஷா சமஸ்கிருதி மாணவர்களின் இசை அர்ப்பணிப்புகளில் இயல்பாகவே ஒரு ஆழமான பக்தியுணர்வு வெளிப்படுகிறது
தனித்தன்மை மிளிரும் வண்ணமயமான ஈஷா சமஸ்கிருதி மாணவர்களின் பாரம்பரிய நடனம்
தங்கள் ஆசிரியர்களை அடியொற்றி மேடையேறும் ஈஷா சமஸ்கிருதி மாணவர்கள், தங்கள் திறனாலும் பக்தி உணர்வாலும் நவராத்திரி இரவுகளுக்கு தனித்த ஒளி தருகிறார்கள்
நவராத்திரி நிகழ்ச்சிகளின் நிறைவாக ஈஷா சமஸ்கிருதி மாணவர்களின் துள்ளல் இசை "தாள வாத்திய மேளம்"
தேவி தண்டம்: பெண் தன்மையில் வெளிப்படும் தெய்வீகத்திற்கு பக்தி செலுத்துவதே நவராத்திரியின் சாரம்