ஈஷா சமையல்

க்ரீமீ ஜாமுன் ஆல்மண்டு (பாதாம்) டிப்

தேவையான பொருட்கள்

100 கிராம் பாதாம்

80 கிராம் ஜாமுன் (மலபார் பிளம்)

2 மேஜைக்கரண்டி சர்க்கரை அல்லது தேன்

1 தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி

1.5 தேக்கரண்டி மிளகு

ஒரு சிட்டிகை உப்பு

எலுமிச்சம் பழச்சாறு சிறிதளவு


செய்முறை

  1. பாதாம் கொட்டைகளை 2 நிமிடங்கள் வரை கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு எடுத்து, குளிர்ந்த நீரை அவற்றின் மேல் விடவும்.
  2. பின்னர் பாதாம் கொட்டைகளின் தோலை உரிக்கவும்.
  3. அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, மிக்சியில் நன்றாக அரைக்கவும்.
  4. பிறகு ஒரு மஸ்லின் துணி அல்லது ஜல்லடை உதவியுடன், அதனை வடிக்கட்டி, பாதாம் பால் எடுக்கவும்.
  5. ஜாமுனின் கொட்டைகளை அகற்றிவிட்டு, மிக்சியில் சேர்க்கவும்.
  6. பாதாம் பால், ஜாதிக்காய் பொடி, மிளகு, உப்பு, சர்க்கரை/தேன் ஆகியவற்றையும் ஜாமுனுடன் சேர்க்கவும்.
  7. எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து 1 நிமிடம் குறைந்த வேகத்தில் அடிக்கவும்.
  8. தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  9. எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து ருசி பார்க்கவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும்.

டிப்ஸ்: இந்த உப்பு, புளிப்பு சுவையுடன் கூடிய டிப், எல்லாவகையான உணவுக்கும் தொட்டுக்கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான ஸைட் டிஷ். இதனை வெள்ளரிக்காய், செலரி, குடமிளகாய், செரி தக்காளி, ப்ரொக்கோலி மற்றும் கேரட் போன்ற காய்களுடன் சேர்த்து ருசிக்கலாம்.