எளிதில் கிடைக்காத அரிய
தேனைத் தேடுகையில்
உங்களுக்கு வேண்டியதை எந்தப்பூ தரும்
என்று உங்களுக்குத் தெரியும்
அவ்வளவு அற்புதமாகப் பறப்பது
மாயாஜாலம் போலத் தோன்றும்,
அதற்கு சிரமப்பட்டு உழைப்பீர்கள்
உயிரின் தன்மையையும்
அதன் ஜாலத்தையும் அறியாதவர்கள்
சொர்க்கத்தைத் தேடி மேலே பார்ப்பார்கள்
ஆனால் தெரியுமா, அனைத்துமே
பூமித்தாயின் நெஞ்சில் இருக்கிறது
என்றென்றும்
தேன்தேடி சிட்டாகப் பறந்திடுங்கள்