சத்குரு எக்ஸ்குளூசிவ்

சக்தி சலனக்கிரியா: இந்த தனித்துவமான பயிற்சி எதனால் உங்களை முற்றிலும் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லமுடிகிறது

ஈஷாவில், மேல்நிலை வகுப்பாக வழங்கப்படும் தனித்துவமான ஒரு யோகப் பயிற்சியாகிய சூன்ய தியானத்தில் கற்றுக்கொடுக்கப்படும் சக்தி சலன கிரியாவின் பின்புலத்தில் இருக்கும் தோற்றங்களை(origins) சத்குரு வெளிப்படுத்துகிறார். பதஞ்சலி யோக சூத்திரங்களின் ஒருமித்த அடித்தளங்களின் மீது கட்டமைக்கப்பட்ட இந்த கிரியா, படிப்படியான ஆன்மீக வளர்ச்சிக்கும், உள்நிலை மாற்றத்துக்கும் மிகக் கவனமாக சத்குருவினால் வடிவமைக்கப்பட்டது. பக்தியை வலியுறுத்தி, விரும்பியவாறு வடிவமைக்கப்பட்ட இந்த கிரியா, சக்தி மற்றும் விழிப்புணர்வின் புதிய பரிமாணங்களுக்கு எப்படி தனிமனிதரை மேம்படுத்துகிறது என்பதை அவர் விளக்குகிறார்.

சக்தி சலன கிரியாவை யார் வடிவமைத்தது?

கேள்வி: நமஸ்காரம், சத்குரு. எங்களுக்குக் கற்றுத்தரப்படும் சக்தி சலன கிரியா மிகவும் சிக்கலான ஒரு செயல்முறை. நீங்கள் இதை எங்கிருந்து கற்றீர்கள் என்று நான் வியந்துகொண்டிருந்தேன். பதஞ்சலியின் யோக சூத்திரங்களில் இருந்து கற்றுக்கொண்டீர்களா?

சத்குரு: இங்கு பயிற்சி செய்யப்படும் சக்தி சலன கிரியா, ஒரு தனித்துவமான கட்டமைப்பு கொண்டது. மற்ற இடங்களில் இதைப்போன்ற பயிற்சிகள் இருக்கலாம், ஆனால் ஈஷாவில் நாம் செய்யும் கிரியாக்களைப்போல் யாரும் செய்வதில்லை. இது ஏனென்றால், யோக முறையானது அடிப்படைகளை மட்டும்தான் வழங்குகிறது; பயிற்சியை எப்படி செய்வது என்று அது குறிப்பிடுவதில்லை.

உடலமைப்புக்குள் எது, என்ன செய்கிறது என்று மட்டும்தான் யோக சூத்திரங்கள் விவரிக்கின்றன. அதன் அடிப்படையில், மற்றும் உடலமைப்புக்குள் எதை உருவாக்குவதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைச் சார்ந்து, அதற்கேற்றபடி ஒரு குறிப்பிட்ட கிரியாவை நீங்கள் வடிவமைக்கிறீர்கள். நாத கிரியா, முத்ர கிரியா, மற்றும் மகத் கிரியா ஆகியவை மற்ற ஒரு சில இடங்களில் பயிற்சி செய்யப்படக்கூடும், ஆனால் சக்தி சலன கிரியாவின் மற்ற பகுதிகள் வேறு எங்கும் பயிற்சி செய்யப்படுவதில்லை. அது வேரூன்றியிருக்கும் அடிப்படைகளைப் பற்றி அறிந்திருக்கும் மக்கள் இருக்கலாம், ஆனால் பயிற்சியானது தன்னளவில் தனித்துவமான கட்டமைப்பு கொண்டது.

ஈஷாவில் நாம் செய்யும் கிரியாக்களைப்போல் யாரும் செய்வதில்லை.

ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தைக் கட்டுவதற்கு அதற்குரிய தனிப்பட்ட விவரங்களை வழங்காமல், கட்டமைப்பின் அடிப்படைகளை வழங்கும் பொறியியல் புத்தகங்களைப் போலவே, நாம் கட்டமைத்திருக்கும் பயிற்சி முற்றிலும் புதிது அல்ல. ஏனென்றால், பொறியியலின் அடிப்படைகள் ஒன்றுதான். அதைப்போல், இன்னர் எஞ்ஜினியரிங்கின் அடிப்படைகள், உடல் எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில் உள்ளது. இது நமது புதிய கண்டுபிடிப்பு அல்ல – நாம் ஒன்றைப்பற்றி விழிப்புணர்வடைந்து, கண்டுபிடிப்பது.

பதஞ்சலி சூத்திரங்களின் திறந்த - முனை இயல்பு

இன்றைக்கு உலகில் பயிற்சி செய்யப்படும் பெரும்பாலான யோகாவும், உள்ளிருந்து உணர்ந்ததைவிட, மற்றவர்களிடம் இருந்து கற்றதாகவே இருக்கிறது. இதனை யோகா என்று உண்மையில் கருதமுடியாது. ஏனென்றால், யோக சூத்திரங்களில் கற்றுக்கொடுத்தல் என்பதே இல்லாத வகையில்தான் அவைகள் எழுதப்பட்டன. அதேநேரத்தில், வாழ்வைப்பற்றி எவரும் எப்போதும் கற்றுக்கொள்ளக்கூடிய அனைத்தையும் யோக சூத்திரங்கள் கொண்டுள்ளன.

யோக சூத்திரங்களில் கற்றுக்கொடுத்தல் என்பதே இல்லாத வகையில்தான் அவைகள் எழுதப்பட்டன. அதேநேரத்தில், வாழ்வைப்பற்றி எவரும் எப்போதும் கற்றுக்கொள்ளக்கூடிய அனைத்தையும் யோக சூத்திரங்கள் கொண்டுள்ளன.

அங்கே கட்டுமானக் கற்கள் உள்ளன, ஆனால் ஒவ்வொருவரும் தாங்களாகவே கட்டிடம் கட்டிக்கொள்ள வேண்டும் என்பதைப் போன்றது இது. அதனால்தான் அவைகள் சூத்திரங்கள். அதாவது, நூல் இழைகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு மாலையை உருவாக்குவதற்கு, நீங்கள் பல்வேறு மலர்கள், முத்துக்கள், மணிகள் அல்லது வைரங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம், ஆனால் ஒரு நூலிழை இல்லாமல், மாலை என்பது இல்லை. இருப்பினும், அதில் என்ன கோர்க்கப்படுகிறதோ அதற்காகத்தான் நீங்கள் ஒரு மாலையை அணிகிறீர்கள், அதன் நூல் இழைக்காக அல்ல. நூல் முக்கியமானது, ஆனால் அதனுடன் எதையாவது கோர்க்கவில்லை என்றால், அது முக்கியத்துவம் இல்லாதது.

நீங்கள் நூலிழையுடன் ஒரு மாலை உருவாக்கினால் தவிர, நூலிழைக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை அறிந்துகொள்ளாமல், மக்கள் நூலிழையை மட்டும் அணிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். அனுபவரீதியான அறியாமை மற்றும் ஆன்மீக அறிவியல்களின் காரண அறிவுரீதியான தேடலின் காரணமாக, இந்த விதமான முட்டாள்தனம் உலகத்தில் நிகழ்ந்துவருகிறது.

உங்கள் வளர்ச்சிக்கு கிரியா எப்படி முன்னேற்றமளிக்கும் உறுதுணையாக இருக்கிறது

கேள்வி: சத்குரு, நான் தினமும் தவறாமல் செய்யும் கிரியாக்களுடன், அதிகபட்சமாக உயிரை உணர்வதற்கு வேறு என்னவெல்லாம் நான் செய்யவேண்டும்?

சத்குரு: நீங்கள் வாழவேண்டும்! வாழ்வதற்கு என்ன தேவைப்படுகிறது? வெளியில் சென்று வாழ்வதல்ல, உள்ளே வாழ்வது. மக்கள் வாழ்வதற்கு, தினமும் பார்ட்டியில் கூடிக்கொண்டாடுவதன் மூலம் வெளியில் வாழவேண்டும் என்று நினைக்கின்றனர். “தினசரி பார்ட்டி” தத்துவம் சிறிது காலம் மட்டுமே வேலை செய்யும். நான் பார்ட்டிகளுக்கு எதிர்ப்பாக இல்லை, ஆனால் அது அதிக நடைமுறையானது அல்ல. மேலும் சிறிது காலம் கழித்து, தினசரி பார்ட்டி என்பது சலிப்பூட்டுவதாக ஆகிவிடும். ஆகவே, நீங்கள் என்ன செய்யவேண்டும்? கிரியா செய்வது உத்வேகம் மட்டுமே அளிக்கிறது, அதுவே ஒரு முடிவல்ல.

உங்கள் சக்திகளை மேம்படுத்துவது கிரியாவின் நோக்கமாக இருக்கிறது என்பதுடன் அது வித்தியாசமான பரிமாணங்களில் இயங்கமுடிகிறது. சக்தி சலன கிரியா வகுப்பில், முதல்முறையாக அதைக் கற்றுக்கொள்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் வகையில் நாம் அதனைக் கற்றுக்கொடுக்கிறோம். ஒரு மரத்தில் ஏறுவதற்கு நீங்கள் யாருக்காவது கற்றுக்கொடுப்பதாக இருந்தால், ஒரு ஐந்து வயது குழந்தையை சிறிதளவு உயரம் மட்டுமே ஏற அனுமதிப்பீர்கள், ஆனால் ஒரு பத்து வயது குழந்தையை சற்று அதிக உயரம் ஏற அனுமதிப்பீர்கள். ஒரு பரிமாணத்தை நீங்கள் நிறைவு செய்வதற்கு, ஒரு குறிப்பிட்ட அளவு காலம் தேவைப்படும் விதமாக, கிரியா உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தில் அது வழங்கும் சாத்தியத்தை, சிலர் விரைவில் நிறைவுசெய்கின்றனர்; மற்றவர்களுக்கு, ஒரு பிறவிக்காலம் தேவைப்படுகிறது.

உங்கள் சக்திகளை மேம்படுத்துவது கிரியாவின் நோக்கமாக இருக்கிறது என்பதுடன் அது வித்தியாசமான பரிமாணங்களில் இயங்கமுடிகிறது.

கிரியாவின் முழு ஆழத்தையும், பரிமாணத்தையும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் நீங்கள் அடைந்து, அங்கேயே உறுதியாக நின்றால், அது ஒரு புதிய சாத்தியத்தைத் திறந்துவிடும் வகையில் ஒரு உள்கட்டமைப்பான இயக்கவியலும்கூட(inbuilt mechanism) அதில் உண்டு. “மென்பொருள்” எந்த விதமாக வடிவமைக்கப்படுகிறது என்றால், ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அது உங்களை நிறுத்திவைத்திருக்கும் என்பதுடன், உங்கள் உடலியலும், உளவியலும் போதுமான அளவுக்கு உறுதியாக இருப்பதை அது உணரும்போது, உங்களை அடுத்த தீவிர நிலைக்கு அது நகர்த்திச் செல்லும்.

இந்த செயல்முறை அதுவாகவே இயல்பாக வெளிப்படுவதற்குக் காத்திருக்க உங்களுக்கு விருப்பமில்லை என்றால், அப்போது முழுநேர சாதனாவுக்காக ஒரு குறிப்பிட்ட காலத்தை ஒதுக்குவதை நீங்கள் தேர்வு செய்யலாம். ஒரு வாரம் அல்லது பதினைந்து நாள் சாதனாவுக்காக, அது ஒரு வருடத்துக்கு இரண்டு முறையாக இருக்கலாம் – உங்கள் வாழ்க்கைமுறைக்கு பொருத்தமாகவும் ஏற்றதாகவும் இருக்கும்படி – நீங்கள் ஈஷா யோகா மையத்துக்கு வந்து தங்கியிருக்கலாம். ஒரு வருடத்துக்கு ஒரு சில நாட்கள் சாதனாவுக்கு மட்டுமே இருக்கவேண்டும், வேறு எதற்காகவும் அல்ல – ஒரு குறுகிய கால அளவுக்கு 24 மணி நேர சாதனா. இந்த நேரத்தை நீங்கள் முதலீடு செய்தால், அதற்கே உரிய வேகத்தில் அது முதிர்வதற்கு அனுமதிப்பதைக் காட்டிலும், மிக வேகமாக வெளிப்பாடு காண்பது நிகழமுடியும்

கிரியா பயிற்சியில் பக்தியின் ஆற்றல்

பக்தியின் தன்மையில் இருப்பது மிகவும் சாதகமான சூழல். நீங்கள் தினமும் உட்கார்ந்துகொண்டு கிரியாவை ஒரு உடற்பயிற்சி போலக்கூட செய்யமுடியும். “என் வாழ்வின் இறுதி நாள் வரைக்கும், நான் இதனைச் செய்வேன்”, என்பதைப்போன்ற உறுதிமொழிகள் எடுக்காதீர்கள். இன்றைக்கு செய்வதற்கு மட்டும் உறுதிகொள்ளுங்கள். இந்த நாள் உங்கள் இறுதி நாளாக இருக்கலாம் என்பதைப்போல் பாருங்கள். நாம் அதை விரும்பவில்லை, ஆனால் இது உங்கள் இறுதி நாளாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளது.

கிரியாவை ஒரு உடற்பயிற்சி போல செய்வதைக்காட்டிலும், ஒருவிதமான பக்தி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வது மிக முக்கியமான விஷயம்.

இது உங்களின் இறுதி நாளாக இருக்கமுடியும் என்பதைப்போல நீங்கள் உங்கள் கிரியாவை மேற்கொண்டால், நீங்கள் அதிவேகமான வெளிப்பாடு காண்பீர்கள். அடுத்த 82 ஆண்டுகளுக்கு நீங்கள் கிரியாவைச் செய்வீர்கள் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு அதிக காலம் இருப்பதாக உள்நிலை இயக்கவியல் நினைத்துக்கொள்ளும். ஆனால் இன்றைக்கு இறுதி நாள் என்பதைப்போல நீங்கள் கிரியாவை பயிற்சி செய்தால், அது சிறிது விரைவுபடுத்தும். மற்றும் நீங்கள் உறுதியாகவும், போதிய தகுநிலையிலும் இருப்பதை நாம் கண்டால், நாம் தலையிட்டு, முற்றிலும் வித்தியாசமான வழியில் அதனை நுட்பமாக மாற்றம் செய்வோம்.

கிரியாவில் செய்வதற்குப் பல விஷயங்கள் உண்டு. ஆனால், கிரியாவை ஒரு உடற்பயிற்சி போல செய்வதைக்காட்டிலும், ஒருவிதமான பக்தி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வது மிக முக்கியமான விஷயம். அதை நீங்கள் ஒரு உடற்பயிற்சிபோல் செய்தால், உங்களுக்கு ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும். ஆனால் நீங்கள் வெடித்தெழ வேண்டுமென்றால், உங்களது உள்நிலைக் கட்டமைப்புகளை நீங்கள் கரைக்கவேண்டும் – அப்போது மிக எளிதாக அது வெடித்துக் கிளம்பும்.