நடப்புகள்

தியானலிங்க பிரதிஷ்டையின் 25 ஆண்டு நிறைவு தினத்தின் ஒரு துடிப்பான கொண்டாட்டம்

தியானலிங்கம், பல ஞானமடைந்த மனிதர்களின் கனவாக இருந்துள்ளது. ஒரு தியானலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும் நோக்கத்துடன் அவரது குருவினால் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மூன்று பிறவிக்காலங்களை இந்த முயற்சிக்கு அர்ப்பணித்த பிறகு, இந்தக் கனவை சத்குரு நனவாக்கினார். தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 1999ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று உலகத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டபொழுது, இந்த மகத்தான சாதனை முழுமை பெற்றது.

கோயம்புத்தூரில் இருக்கும் ஈஷா யோக மையத்தில், பிரம்மச்சாரிகளால் அர்ப்பணிக்கப்பட்ட “அஉம் நமஹ் ஷிவாயா” மந்திர உச்சாடணத்துடன், தியானலிங்க பிரதிஷ்டை தினத்தின் 25 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் ஆரம்பமானது.

இந்த நன்னாளில், தியானலிங்கத்தின் ஆற்றல் மிகுந்த சக்தியில் நனையவும், தமக்குள் தியானத்தன்மையை உணரவும் திரளான பக்தர்கள் வருகை தந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் நேரடி ஒளிபரப்பு வாயிலாக கொண்டாட்டங்களில் இணைந்தனர்.

காலை 6 மணியில் தொடங்கி, இந்து மதம், புத்த மதம், கிருத்துவ மதம், சீக்கிய மதம், இஸ்லாமிய மதம், மற்றும் சூஃபி மதம் என்று பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் வாழ்க்கை முறைகளிலிருந்து மந்திரங்கள், கீர்த்தனைகளுடன் தியானலிங்க வளாகம், ஒலி மீட்டிய அதிர்வுகளால் நிறைந்தது.

பைலகுப்பே, செரா மே மொனாஸ்டிக் யுனிவர்சிட்டியில் இருந்து வந்திருந்த துறவியர், தியானலிங்கத்தின் முன்னிலையில் புனித புத்தமத உச்சாடணங்களை அர்ப்பணித்தனர்.

கோயம்புத்தூரில் இருந்து ஃபிரான்ஸிஸ்கன் சகோதரியர், தியானலிங்க திருத்தலத்தில் பாடலிசைத்து அர்ப்பணித்தனர்.

ஆசிரமவாசிகளால் வழங்கப்பட்ட சூஃபி அர்ப்பணங்கள், பன்மத உச்சாடணங்களுக்கு வேறொரு பரிமாணத்தை இணைத்தது.

தியானலிங்கத்துக்கு ஒரு பாராயணம் அர்ப்பணித்த இஸ்லாமிய விருந்தினர், இந்த பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் குறித்து, “சாந்தமும், நிசப்தமும், அமைதியும் நிறைந்த ஒன்றை நான் உண்மையிலேயே உணர்ந்தேன்”, என்று கூறிவிட்டு, மேலும் தொடர்ந்த அவர், “எண்ணம் அல்லது நம்பிக்கை முறையின் பிரிவினை இல்லாமல் மக்கள் வரக்கூடிய இதுபோன்ற மிகச் சில இடங்களே உள்ளன”, என்றார்.

ஆகாஷ் மூலக்கூறினைக் குறிக்கும் பஞ்சபூத ஸ்தலமாகிய பழமையான சிதம்பரம் கோவிலிலிருந்து தீட்சிதர்கள், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வேத மந்திரங்களாகிய “ஸ்ரீ ருத்ரம்” ஓதினர்.

கோயம்புத்தூரின் குருத்வாரா சிங் சபாவின் அங்கத்தினர்கள், குரு க்ரந்த சாஹிப்-ல் இருந்து ஆழ்ந்த பக்திபூர்வமான குர்பானி மந்திரங்களை வழங்கினர்.

தியானலிங்க பிரதிஷ்டை தினத்தன்று, அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைச் சாத்தியமாக்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நாம் நன்றி செலுத்துகிறோம்.

மாலைநேர நாத ஆராதனா மற்றும் குண்டேச்சா சகோதரர்களின் இசை அர்ப்பணிப்புடன் கொண்டாட்டம் நிறைவடைந்தது. இந்துஸ்தானி சாஸ்திரீய இசையின் பழமையான வடிவங்களுள் ஒன்றாகிய துருபத் இசையில் நிபுணத்துவம் அடைந்தவர்களாகப் புகழ்பெற்ற, அவர்கள் இந்திய அரசாங்கத்திலிருந்து கௌரவமிக்க பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட எண்ணற்ற பரிசுகளைப் பெற்றுள்ளனர்.

உமாகாந்த் குண்டேச்சா, தியானலிங்கத்தின் முன்னிலையில் இந்த தனித்துவமான அனுபவம் குறித்த அவரது உணர்வுகளின் பிரதிபலிப்புகளைப் பகிர்ந்துகொண்டார்: “தியானலிங்கத்தின் முன்பாக, சக்திநிலை சட்டென்று அதிகரிப்பதுடன், நான் வேறொரு உலகத்திற்கு பயணப்படுகிறேன். இங்கு பாடுவது எப்போதும் கௌரவமும், ஆசிர்வாதமும் ஒருங்கே அமையப்பெறுவது.”

தியானலிங்கத்தில் நாள்முழுவதும் நிகழ்ந்த இசை அர்ப்பணங்கள் குருபூஜையுடன் நிறைவடைந்தது.

அனைவருக்கும் ஆழமான தியான அனுபவம் வழங்குவதைத் தொடர்ந்திருக்கும் இந்தத் திருத்தலத்தின் நீடித்த தாக்கத்துக்கு, தியானலிங்க பிரதிஷ்டை தினத்தின் 25 ஆண்டு நிறைவு கொண்டாட்டமானது ஒரு நிரூபணமாக இருந்தது. இந்த சிறப்பான தருணத்தைக் கொண்டாடுவதற்காக மக்கள் கூடிய நிலையில், அந்த சூழலில் நன்றிப்பெருக்கும், பக்தியும், ஆன்மீகப் பாதைக்கான புத்துயிரூட்டப்பட்ட உறுதிப்பாடும் நிறைந்திருந்தது. அனைத்து எல்லைகளையும் கடந்து பரிணமிக்கும் மனிதர்களின் சாத்தியத்துக்கு, தியானலிங்கம் ஒரு காலவரம்பற்ற நினைவூட்டலாக நிற்கிறது.

இந்தத் தருணத்தில், அமித் த்ரிவேதி வழங்கும் “ஷிவ ஷிவ” என்ற ஒரு சிறப்பு இசை அர்ப்பணிப்பை சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா வெளியிட்டது. தியானலிங்கம் – ஒரு வாழும் குருவாக மற்றும் முக்திக்கான வாசலாக வீற்றிருப்பதற்கு, இந்தப் பாடல் ஒரு அஞ்சலியாகவும், நன்றியுணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. எல்லா இணையதளங்களிலும் ஹிந்தி, தெலுங்கு, மற்றும் கன்னடத்தில் இப்போது செவிகொடுங்கள்!! isha.co/shivashiva