
சத்குருவின் கனவுத் திட்டமான “மனிதன் ஒரு வளம் அல்ல,” என்ற கலந்துரையாடும் நிகழ்வின் சமீபத்திய பதிப்பில், மனிதர்கள் தொடர்புடைய பணியிடத்தின் சவால்களை எதிர்கொள்வதன் புதிய கண்ணோட்டங்களைப் பெறுவதற்காக, ஈஷா யோகா மையத்தின் ஸ்பந்தா ஹாலில், ஜூன் 14 முதல் 16 வரைக்கும், ஆர்வமும், எதிர்பார்ப்பும் மிகுந்த வர்த்தகத் தலைவர்களும், ஹெச் ஆர் துறையினரும், மற்றும் பலரும் ஒன்றுகூடினர். சம்பிரதாயக் கருத்துக்களை எதிர்த்து, தனிமனிதர்களின் தனித்துவமான தன்மைகள் மற்றும் ஆற்றலைப் பேணி வளர்ப்பதன் மூலம், அவர்களை வல்லமைப்படுத்துவதற்காக, சத்குரு அகாடெமியின் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய இந்த முன்னெடுப்பு, மனிதவளங்கள் என்ற கண்ணோட்டத்திலிருந்து மனிதசாத்தியங்கள் என்பதற்கான நகர்தலுக்கு நடைமுறை வழிகளை வழங்குகிறது.
மூன்று தினங்களுக்கும் மேலாக, குழு செயல்பாடுகள் மற்றும் தனிப்பட்ட வெளிப்பாடுக்கு இடையில், மனித ஆற்றலை எப்படி வெளிக்கொணர்வது என்பதைக் காண்பதற்காக, சிறந்த பேச்சாளர்கள் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த முக்கிய தலைவர்களுடன், பங்கேற்பாளர்கள் உரையாடலில் ஈடுபட்டனர்.
முக்கியமான வள மேலாண்மை தலைவர்களுள் ஒருவரும், டாடா குழுமத்தின் ஆலோசகர் மற்றும் இயக்குனர் மற்றும் சிறந்த விற்பனையாகும் புத்தக ஆசிரியருமாகிய ஹரிஷ் பட், டாடாவின் ஊக்கமூட்டும் உதாரணங்களாக, மக்களை மையப்படுத்தும் கலாச்சாரத்தைப் பகிர்ந்துகொள்கையில், “கலாச்சாரம் & நோக்கம்: டாடாவின் கதை,” குறித்துப் பேசினார்.
வழிகாட்டக்கூடிய சிறந்த தேர்ந்தெடுத்தல்கள், மொழி, மற்றும் சடங்குகள் வாயிலாக, ஒரு நீடித்த கலாச்சாரத்தைக் கட்டமைப்பதற்கான சிறந்த கட்டமைப்பை வழங்கிய பங்கஜ் பன்சாலி, ஹெச் ஆர் டெக்னாலஜி கம்பெனி பீப்பிள் ஸ்ட்ராங் அன்ட் டிஜிடல் ரெக்ரூட்மென்ட் ப்ளாட்பார்ம் Taggd இன் இணை நிறுவனரும், க்ரூப் சி இ ஓ, தனது உரையில் , “கலாச்சாரம் என்பது கட்டமைக்கப்படவேண்டிய ஒரு தசைபலம்” என்று கூறுகிறார்.
இராணுவத்தில் பணிபுரியத் தொடங்கிய நாளிலிருந்து இடைவிடாத முயற்சியின் மூலம் பண்படுத்தப்பட்ட தனிமனிதர்கள் இணைந்து வாழ்ந்து, சண்டையிட்டு, மற்றும் அவசியமானால் ஒன்றாக உயிர்துறக்கும் நிலையில், நிலையான குழு கலாச்சாரத்தை லெப்டினென்ட் ஜெனரல் எஸ் கே உபாத்யா வலியுறுத்தினார். ஒவ்வொரு ராணுவவீரரும் தங்களது படைப்பிரிவின் கடந்தகால வீரதீரத்தையும், எதிர்பார்ப்புகளின் சுமையையும் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்தி, ஆரம்ப நாளிலிருந்து ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையை திறம்படத் தூண்டும் இந்தக் கலாச்சாரத்தைக் கட்டமைப்பதில், வரலாற்றின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டார்.
இரண்டு நாட்கள் ஒருங்கிணைப்புக் கலாச்சார ஆய்வுக்குப் பிறகு, நிகழ்ச்சி அறிவிப்பாளர் அஷுதோஷ் பாண்டே ஒரு அமர்வினை வழி நடத்தினார். பங்கேற்பாளர்களது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தாக்கத்தை முன்னேற்றுவதற்கான ஒரு ஒருங்கிணைந்த உறுதியை வளர்த்தெடுக்கும், தலைமைத்திறனை மேம்படுத்துவதற்கு, நேர்மையான சுய மதிப்பீடுடன் தொடங்குவதற்கு, அவர்களை ஊக்குவித்தார்.
மூன்றாவது நாளன்று, மௌமிதா சென் சர்மா, சுவாமி உலாஸா, மற்றும் விக்ரம்ஜெட் ராய் உள்ளிட்ட ஈஷா குழுவினர், எவரும் தனிப்பொறுப்பாளராக இல்லாமல், ஒவ்வொருவரும் பொறுப்பாளராக இருந்து, பொறுப்புணர்வு, உறுதி மற்றும் நோக்கத்தினால் வழிகாட்டப்படும், தனித்துவமான ஈஷா கலாச்சாரத்தை விளக்குவதற்கு முனைந்தனர். இந்த உறுதிப்பாடு மற்றும் நோக்கத்தை, முதற்கண் அனுபவித்து உணர்வதற்கு, ஈஷாவுக்கு வருகை தாருங்கள்.