பிற மொழிகளில் வாசிக்க:
English | Hindi

நினைவுகள்

என்னை நினைவில் மட்டும் வைத்துக்கொள்வீர்களா

அல்லது என்னை உள்வாங்கிக் கொள்வீர்களா.

அல்லது நீங்களாக ஒரு கதம்பத்தை உருவாக்குவீர்களா,

நான் கோடான கோடிக்கணக்கில் உதிர்க்கும்

இறந்த தோல் செல்களைக் கொண்டு எனை

உருவாக்குவதுபோன்ற முயற்சியில் இறங்குவீர்களா

நீங்கள் பழம்பொருள் சேகரிக்கும் ரகமாக இருந்தால்

அதுவே உங்களுக்குப் போதுமானதாக இருக்கும்.

நான் சென்றபிறகு, என் நினைவுகளும் நிழற்படங்களும் குரலும்

ஆனந்தம் அல்லது துயரத்தின் கண்ணீரைக் கொணரலாம்

ஆனால் நீங்கள் அனுமதித்தால் நான் உங்களை

அடையாளம் தெரியாதபடி ஊடுருவி சின்னபின்னமாக்குவேன்

ஏனெனில் உங்களை ஒரு தனிநபராக்கும் உங்கள் நினைவுகளை

நான் அழிப்பேன். கசப்பானவற்றையும் இனிப்பானவற்றையும்தான்.

என் நோக்கம் உங்களுக்கு இனிமை சேர்ப்பதல்ல

நிச்சயம் கசப்பை சேர்ப்பதல்ல,

ஒரு சுவடை விட்டுச்செல்வதல்ல

உயிரெனும் ஒரு இருப்பை விட்டுச்செல்வதே.

Share This