
சிந்தனையைத் தூண்டும் இந்தப் பதிவில், பாலியல் கொடுமைகளின் பிரச்சனையைக் குறித்துப் பேசும் சத்குரு, மனிதகுலம் எதிர்கொண்டிருக்கும் எல்லாப் பிரச்சனைகளும் விழிப்புணர்வு இல்லாமையிலிருந்து முளைக்கின்றன என்ற உண்மையை சுட்டிக்காட்டுகிறார். உலகளாவிய விழிப்புணர்வை வளர்த்தெடுப்பதற்கும், எல்லா விதமான துஷ்பிரயோகங்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைக்கும், நாம் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தமுடியும் என்ற வல்லமையளிக்கும் கண்ணோட்டத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். முக்கியமாக, ஒவ்வொரு உயிரும் வளமுடன் வளர்வதற்கான ஒரு ஆதரவான சூழலை உருவாக்குவதற்கு, எல்லா மனிதர்களுக்கும் பொறுப்பு இருக்கின்றது.
கேள்வி: நாங்கள் வளர்ந்துவந்தபோது, ஒரு தோழி துன்புறுத்தப்பட்டதைக் கண்டிருந்த நிலையில், அதன் ஆழமான தாக்கத்தை நான் புரிந்துகொள்கிறேன். நமது குழந்தைகளை பாலியல் அத்துமீறலிலிருந்து பாதுகாப்பதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
சத்குரு: ஆயிரக்கணக்கான வருடங்களாக, பாலியல் கொடுமைகள் சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள், அல்லது ஆண்களுக்கு எதிராக நடந்தாலும்கூட, அதனை நம்மால் தடுக்க இயலாமல்தான் இருந்துவந்துள்ளது. ஓரளவுக்கு நாம் சட்டங்கள் மற்றும் அதிகமான சமூக விழிப்புணர்வுடன் அதை கட்டுப்பாட்டுக்குள் நிறுத்த முடியும், ஆனால் எந்த சமூகமும், எப்போதும் அதிலிருந்து முழுமையாக விடுபட முடிந்ததில்லை. ஒப்பீட்டளவில் மற்ற நாடுகளைக்காட்டிலும், இந்தியாவில் பாலியல் துன்புறுத்தல் பிரச்சனை எப்போதும் பெரிதுபடுத்தப்படுகிறது.
இந்தியாவில் பாலியல் கொடுமைகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாக சதவிகித அடிப்படையில் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால் பெரும் மக்கள்தொகையின் காரணத்தால், எண்ணிக்கைகள் அதிகமாக உள்ளன. ஆகவே, அது ஒரு சமூகம் அல்லது மற்றொரு சமூகம், மற்றும் ஒரு நாடு அல்லது மற்றொரு நாடு குறித்தது அல்ல. துரதிருஷ்டவசமாக இரு உலகளாவிய மனிதகுலத்தின் பிரச்சனை.
உங்கள் தேவைகளையும், உந்துதல்களையும் நிர்ப்பந்தமாக இல்லாமல், சற்று அதிக விழிப்புணர்வுடன் கையாளும் உயர்ந்த விழிப்புணர்வுள்ள மனிதர்களாக உருவெடுப்பதுதான் தீர்வாக இருக்கிறது. ஒரு விழிப்புணர்வான உலகை உருவாக்குவது வெகுதொலைவில் இருப்பதாகத் தோன்றலாம், ஆனால் அது அப்படி அல்ல. ஒரு நேர்மையான விழிப்புணர்வுள்ள மனிதகுலத்தை உருவாக்குவதற்கு ஒரு வாய்ப்பு உண்டென்றால், அது இப்போதுதான் முடியும். கடந்த காலங்களில் பல மகத்தான உயிர்களும் வந்துள்ளனர், ஆனால் அவர்கள் பேசியபொழுது, ஒரு சில மக்கள் மட்டும்தான் அவர்கள் கூறுவதைக் கேட்கமுடிந்தது. அவர்கள் எவ்வளவு மகத்தானவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு ஒரு மைக்ரோஃபோன் இல்லாத காரணத்தால், ஒரு சிலரால் மட்டுமே கேட்கமுடிந்தது. கிருஷ்ணன் பேசியபொழுது, அர்ஜூனன் மட்டும்தான் அதைச் செவிமடுத்தான்.
இன்றைக்கு, தொழில்நுட்ப முன்னேற்றங்களின் காரணத்தால், இங்கே அமர்ந்துகொண்டு, ஒட்டுமொத்த உலகத்திடமும் பேசும் நல்வாய்ப்பு நமக்கு இருக்கிறது. இது போன்ற ஒரு நேரத்தில், மனிதகுலம் முழுவதையும் நேர்காணக்கூடிய ஒரு ஆற்றல் நமக்கு இருக்கும்பொழுது, நாம் அதை செய்யவில்லை என்றால், நமது இதயங்களில் நாம் போதிய அன்பில்லாமல் இருப்பதாகத்தான் அர்த்தம். மனிதகுலத்தை மாற்றமடையச் செய்வதற்கு நாம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இது பாலியல் கொடுமைகள் தொடர்புடைய விஷயங்களுக்கு மட்டுமல்லாமல், மனிதர்கள் தங்களுக்கும், இந்த பூமியின் மற்ற ஒவ்வொரு உயிருக்கும் எதிராகச் செயல்படும் பலவாறான வன்முறைகளுடனும்கூட தொடர்புடைய மாற்றமாக இருக்கிறது.
நம்மால் இயன்ற அளவுக்கு நாம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறோம். நீங்கள் அதன் ஒரு பாகமாக இருக்க விரும்பினால், தயவுசெய்து எழுந்து நின்று, உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். விழிப்புணர்வான உலகம் உருவாக்கும் இயக்கம் என்றால், அது இதைப்பற்றியதுதான். மன ஆரோக்கியத்தை நாம் குவிமையப் புள்ளியாகச் செய்வது ஏனென்றால், மக்களால் பிரச்சனையுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், தீர்வுடன் அவர்கள் தொடர்பு கொள்ளமாட்டார்கள். அதனால்தான் நாம் ஒரு குறிப்பிட்ட விதமான பிரச்சனையை முன்னிலைப்படுத்துகிறோம்.
பாலியல் பலாதகாரம் என்பது, ஒருவரது புலன்களை விழிப்புணர்வுடன் பயன்படுத்துவதற்கான தனிப்பட்ட திறனின்மை குறித்த ஒரு கேள்வியாகவும் இருக்கிறது. சிலர் பாலுறவை தீமையானது என்று முத்திரை குத்தியுள்ளனர், மற்றவர்களோ அதன் பின்னால் முட்டாள்தனமாகச் சென்றனர்; ஆனால் உண்மையில், அது மிக இயற்கையான, உங்களின் ஒரு சிறு பகுதியாகத்தான் இருக்கிறது.
அது தீயதாக முத்திரை குத்தப்பட்டுள்ள காரணத்தால், மக்களின் மனங்களில் அது பெரிதாக வளர்ந்துவிட்டது. பாலுறவு என்பது இனப்பெருக்க உறுப்புகளில் இல்லாமல், ஆனால் உங்கள் தலையில் இருந்தால், அது தவறான இடத்தில் இருக்கிறது. அது தவறான இடத்தில் இருக்கும்போது, எல்லா விதமான வக்கிரங்களையும் அது உருவாக்குவதுடன், அதன் விளைவாக கொடுமைப்படுத்தும் சூழ்நிலைகளும் எழக்கூடும்.
உடல்ரீதியான பாலியல் தேவைகள் எளிதாகக் கையாளக்கூடியது. மக்களின் மனங்களில்தான் விஷயங்கள் பைத்தியக்காரத்தனமாகப் போகிறது. மனிதர்கள் விழிப்புணர்வுடன் இருப்பார்களேயானால், அவர்கள் எல்லாவற்றையும் அதற்குரிய இடத்தில் நிறுத்துவார்கள். உயர்ந்த விழிப்புணர்வுள்ள ஒரு மனிதகுலம் நமக்குத் தேவைப்படுகிறது. ஒரு விழிப்புணர்வான் உலகத்தை உருவாக்கும் முயற்சி செய்வதற்குக்கூட, இப்போது இருப்பதைக்காட்டிலும் ஒரு மேலான வாய்ப்பு இதற்கு முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை. நாம் இதனை நிகழச்செய்வோம்.