ஈஷா சமையல்

டேட்ஸ் & நட்ஸ் சாக்லேட் லட்டு

2 பேருக்கு

தேவையான பொருட்கள்

1¼ கப் மென்மையான, விதை நீக்கப்பட்ட பேரீட்சம்பழம்
3 மேசைக்கரண்டி பூசணி விதைகள்
¼ கப் நறுக்கிய வால்நட் பருப்பு
½ மேசைக்கரண்டி பாதாம் வெண்ணெய் (அல்லது விருப்பமான வேறு பருப்பு அல்லது விதையிலிருந்து பெறப்பட்ட வெண்ணெய்)
¼ கப் (ஆர்கானிக்) கோகோ பவுடர்
1 சிட்டிகை உப்பு
¼ தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் (விரும்பினால்)

விரும்பினால் அலங்காரத்திற்கு

கூடுதலாக கோகோ பவுடர், பொடியாக நறுக்கிய நட்ஸ் அல்லது தேங்காய் பவுடர்

செய்முறை

  • மிக்சியில், விதை நீக்கப்பட்ட பேரீட்சம்பழம், கோகோ பவுடர், பூசணி விதை, வால்நட் பருப்பு, பாதாம் வெண்ணெய் (அல்லது பிற பருப்பு/விதை வெண்ணெய்), உப்பு மற்றும் வெண்ணிலா எசன்ஸ் (விரும்பினால்) சேர்க்கவும்
  • ஒட்டிக்கொள்ளும் பதம் வரும்வரை இந்த கலவையை நன்கு அரைக்கவும். அது மிகவும் வறட்சியாகவோ அல்லது நொறுங்கலாகவோ இருந்தால், கூடுதலாக பாதாம் வெண்ணெய் அல்லது பேரீட்சம்பழத்தைச் சேர்த்து, மீண்டும் நன்கு அரைக்கவும்.
  • சுமார் 1½ மேசைக்கரண்டி அளவுக்கு கலவையை வெளியே எடுத்து, மெதுவாக உங்கள் கைகளால் உருண்டையாக உருட்டிக்கொள்ளுங்கள். அதை தனியே எடுத்து வைக்கவும். இதேபோல் திரும்பவும் செய்து இன்னும் கூடுதலாக உருண்டைகளைப் பிடித்து வையுங்கள்.
  • உருண்டைகளை அப்படியே பரிமாறலாம் அல்லது கோகோ பவுடர் மற்றும் / அல்லது உங்கள் விருப்பப்படி நறுக்கிய நட்ஸ் மற்றும் / அல்லது தேங்காய்த் தூளில் உருட்டி, பின்னர் பரிமாறலாம்.