கலந்துரையாடல்

சத்குருவின் தினசரி வழக்கம் மற்றும் தனிப்பட்ட விருப்பங்கள்: ஒரு சிறப்பு நேர்க்காணல்

காமியா ஜனி, கர்லி டேல்ஸ் இணையதளத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் தலைவர், பிரபலம் மற்றும் பயண பத்திரிக்கையாளர், சமீபத்தில் ஈஷா யோக மையத்தில் சத்குருவை நேர்காணல் செய்யும் வாய்ப்பினை பெற்றார். அவர்களின் மகிழ்ச்சியான, இயல்பான உரையாடலின் இந்தப் பகுதியில், “இதுவா, அதுவா” வேடிக்கை விளையாட்டு மூலம் அவரது தினசரி வழக்கம் மற்றும் விருப்பங்கள் உள்ளிட்ட, சத்குரு குறித்த தனிப்பட்ட அம்சங்களுக்குள், காமியா பயணிக்கிறார். சத்குருவின் அதிகம் அறியப்படாத பக்கங்களை அறிந்துகொள்வதற்கு மேற்கொண்டு தொடருங்கள்.

சத்குருவின் தினசரி நடைமுறை என்ன?

காமியா ஜனி: உங்களுடைய தினசரி வழக்கம் குறித்து நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

சத்குரு: ஒரு வழக்கம் என்பது என்ன?

காமியா ஜனி: உங்களுக்கென்று வழக்கமான நடைமுறை இல்லையா? (சத்குரு சிரிக்கிறார்)

சத்குரு: தினமும் நான் வெவ்வேறு இடத்தில் இருக்கிறேன். நான் என்ன செய்துகொண்டிருப்பேன் என்பது ஊகிக்க முடியாதது. ஆகவே, என் வாழ்க்கையில், தினசரி வழக்கம் என்ற ஒரு விஷயமே இல்லை.

காமியா ஜனி: ஆனால் தினசரி அளவில் நீங்கள் நிச்சயமாக செய்கின்ற சில பயிற்சிகள் இருக்கவேண்டுமே.

சத்குரு: எனது நாளைத் தொடங்குவதற்கு முன்பு, என் சக்திகளை மறு சீரமைப்பு செய்வதற்காக நான் ஒரு பயிற்சி செய்கிறேன். நான் எழுந்திருக்கும்போது, குறைந்தபட்சம் இருபது வினாடிகள் நிமிர்ந்து உட்காருவதுடன், அந்த நாளுக்கு நான் தயாராக இருக்கிறேன்.

காமியா ஜனி: செய்யவேண்டிய பட்டியல் போன்ற எதையும் நீங்கள் செய்வதில்லையா?

சத்குரு: இல்லை (இருவரும் சிரிக்கின்றனர்)

காமியா ஜனி: அந்த தினத்தை ஒருங்கிணைப்பதில் அது உதவுகிறதா அல்லது எந்த ஒன்றும் அதன் போக்கில் செல்வதற்கானதா?

சத்குரு: இல்லை, அது ஒரு கொள்கை அல்ல. உங்களைச் சுற்றிலும் நிகழ்பவை அனைத்துடனும் ஒரு விழிப்புணர்வான பதிலாற்றுதலாக இருக்கிறது. நீங்கள் ஒரு கொள்கையை உருவாக்கினால், நீங்கள் காலத்திற்கும் இடத்திற்கும் தகுந்தாற்போல் இல்லாமல் இருப்பீர்கள்.

நான் என்ன கூற விரும்புகிறேன் என்று ஆயத்தத்துடன் வந்தால், நீங்கள் ஏதாவது கேட்டால், நான் வேறு எதையாவது கூறுவேன், ஏனென்றால் ஏற்கனவே அது என் தலையில் உள்ளது. ஆகவே, நான் எந்த ஒரு எண்ணமும் அல்லது உணர்ச்சியும் இல்லாமல், வெறுமனே அனைத்தையும் பார்த்துக்கொண்டும், உள்வாங்கிக்கொண்டும், என் தலையில் முழு வெறுமையுடன் சுற்றிக்கொண்டிருக்கிறேன். என்ன வருகிறதோ அதற்கு பதிலாற்றுகிறேன். நான் எதையும் தயார்செய்வதில்லை.

"இதுவா, அதுவா" விளையாட்டு

காமியா ஜனி: நாம் ‘இதுவா, அதுவா’ என்ற ஒரு வேடிக்கை விளையாட்டு விளையாடலாம். நான் உங்களுக்கு தேர்ந்தெடுப்பதற்கானவைகளை கொடுப்பேன்… மசாலா தோசையா, இட்லி சாம்பாரா?

சத்குரு: நீங்கள் மகாராஷ்ட்ராவில் இருந்து வருகிறீர்களா அல்லது அதற்கு வடக்கிலிருந்தா? உங்கள் மனதில் ஒரு மசாலா தோசை மற்றும் இட்லி என்பது என்னவாக இருக்கிறதோ, அதிலிருந்து என் நாக்கில் அது என்னவாக இருக்கிறது என்பது வித்தியாசமானது. இட்லி குறித்த என் உணர்வு அது தெற்கில் எப்படி இருக்கிறது என்பதிலிருந்து வருகிறது, நீங்கள் மேலே செல்லச்செல்ல, அவை மெல்ல கடினமாகிக்கொண்டே இருக்கிறது. டெல்லியில், நீங்கள் அதை ஒரு கோல்ஃப் பந்து போல அடிக்கலாம் (இருவரும் சிரிக்கின்றனர்). மசாலா தோசை உங்கள் வாயில் கரையவேண்டிய ஒரு விஷயம், வடக்கே செல்லச்செல்ல, அது கனமான தோல் போல ஆகிறது. அதை நீங்கள் சப்பாத்தி போல் மெல்லவேண்டியுள்ளது. (காமியா சிரிக்கிறார்) ஆகவே, நான் அந்த மாதிரி தேர்ந்தெடுக்கமாட்டேன்; அதைச் செய்வது யார் மற்றும் எப்படி செய்கின்றார் என்பதை சார்ந்தது அது. (இருவரும் சிரிக்கின்றனர்)

காமியா ஜனி: உங்களது தினத்தை நீங்கள் எதனுடன் தொடங்குவதற்கு விரும்புகிறீர்கள், தேநீர் அல்லது காபி?

சத்குரு: நிச்சயம் காபி தான். நான் தேநீர் போல் தோன்றுகிறேனா? (காமியா சிரிக்கிறார்)

காமியா ஜனி: மைசூர் அல்லது கோயம்புத்தூர்?

சத்குரு: எதற்காக?

காமியா ஜனி: நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும், உங்களது பிறந்த இடம் அல்லது நீங்கள் தங்கியிருக்கும் இடம்.

சத்குரு: நான் வாழ்வதற்கு கோயம்புத்தூரை தேர்ந்தெடுத்துள்ளேன், ஆனால் மைசூரு நான் செல்வதற்கான இடம். (இருவரும் சிரிக்கின்றனர்)

காமியா ஜனி: பைக் ஓட்டுவது மற்றும் கோல்ஃப் விளையாடுவது என்று இந்த இரண்டு விஷயங்கள் குறித்தும் நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் – ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு ஒரு மணி நேரம் மட்டும் கிடைத்தால், நீங்கள் ஒன்றை மட்டும் தேர்வு செய்யவேண்டும்.

சத்குரு: நான் கோல்ஃப் மைதானத்துக்கு பைக் ஓட்டிச் செல்வேன். (காமியா சிரிக்கிறார்)

காமியா ஜனி: தியானம் அல்லது மேடைப் பேச்சுக்கள்?

சத்குரு: இமாலயப் பகுதியின் ஆசிரமங்களுள் ஒன்றில் இது நிகழ்ந்தது. மும்பையிலிருந்து இரண்டு இளவயது நண்பர்கள், ஆன்மீக சாதனா செய்வதற்கு அங்கு சென்றனர். மூன்று நாட்களுக்குப் பின், இளைஞர்களுள் ஒருவன் முற்றிலும் மனமுடைந்தவனாக தோட்டத்தில் அமர்ந்திருந்தான். மற்றொருவன் அவனிடம் சென்று, “ஏய், இங்கே என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? எனக்கு இப்போது புகைபிடிக்க விருப்பமாக உள்ளது”, என்றான். மற்றொருவனும், “எனக்குக்கூடதான்; நான் புகைக்க முடியாத காரணத்தால் உண்மையாகவே உற்சாகம் இல்லாமல் இருக்கிறேன்”, என்றான். பிறகு அவர்கள், “அதனால் என்ன பிரச்சனை? நாம் புகைக்கலாமா என்று குருவிடத்தில் சென்று கேட்போம்”, என்றவாறு குருவைத் தேடிச் சென்றனர்.

மறுநாள் மீண்டும் அந்த இளைஞன் தளர்வாக அமர்ந்திருந்தான். மற்றொரு நண்பன் அங்கே புகைபிடித்தவாறு வந்தான். அதைக் கண்டு சோர்வாக அமர்ந்திருந்தவன் திகைத்தவனாகக் கேட்டான், “ஏய், நீ புகைக்கிறாய்! என்ன நிகழ்ந்தது? நான் தியானம் செய்யும்பொழுது புகைக்கலாமா?” என்று குருவிடம் கேட்டேன். அவர் 'இல்லை, கூடாது” என்று கூறினார்,' ஆனால் இப்போது நீ எப்படி புகைக்கிறாய்? நீ விதியை பின்பற்றவில்லையா?” என்று குழம்பியவனாகக் கேட்டான். அந்த மற்றொருவன் கூறினான், “அது உன்னுடைய பிரச்சனை.” நான் குருவிடம் கேட்டேன், “நான் புகைபிடிக்கும்பொழுது தியானம் செய்யலாமா?” என, குருவும், “ஆம்”, என்றார். (இருவரும் சிரிக்கின்றனர்) ஆகவே, மேடைப் பேச்சும், தியானமும் எனக்கு இரண்டு வெவ்வேறு விஷயங்கள் அல்ல. (இருவரும் சிரிக்கின்றனர்)

காமியா ஜனி: சரி, கடற்கரைகள் அல்லது மலைகள்?

சத்குரு: நான் கடற்கரைகளையும் நேசிக்கிறேன், ஆனால் மலைகள் – நான் மலைகளுக்கு அடிமைப்பட்டுள்ளேன்.

காமியா ஜனி: சாமுண்டி மலைகள் அல்லது வெள்ளியங்கிரி மலைகள்?

சத்குரு: ஹ்ம்ம்…. வெள்ளியங்கிரி மலைகள் வளம் மிகுந்தவை. சாமுண்டி, அது போல் அழகானது மற்றும் என் வாழ்க்கையில் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது ஒரு சிறிய மலை, உண்மையில் ஒரு மலை அல்ல. வெள்ளியங்கிரி ஒரு மலை. (சிரிக்கிறார்)

காமியா ஜனி: சாமுண்டி, ஒரு வித்தியாசமான ஆன்மீக அனுபவம் உங்களுக்குக் கிடைத்த இடமாக இருக்கிறது.

சத்குரு: ஆமாம்

காமியா ஜனி: ஆனால் அது நீங்கள் அடிக்கடி செல்லும் இடம்தானா? நீங்கள் அங்கு செல்வதுண்டா?

சத்குரு: இல்லை, உண்மையில் நான் செல்வது கிடையாது. மற்றவர்கள் செல்கின்றனர். நான் அமர்ந்த ஒரு இடத்தை அவர்கள் அடையாளக்குறியிட்டு, மக்கள் அங்கே செல்கின்றனர். நான் செல்வதற்கு என்ன இருக்கிறது அங்கே?

காமியா ஜனி: ஆமாம், அது சரிதான். நீங்கள் கைப்பேசியில் அழைக்கும் நபரா அல்லது செய்திகள் (texting) அனுப்பும் நபரா?

சத்குரு: ஹ்ம்ம். இப்போதெல்லாம், ஏறக்குறைய எல்லா வேலையும், செய்தியிலேயே செய்யப்படுகிறது. பெருமளவுக்கு, ஒரு சில அழைப்புகளைத் தவிர்த்து. ஒரு நாளில் சில நேரங்களில் எனக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது, அது பெருமளவுக்கு உரைசெய்தியாக இருக்கிறது; தினசரி அவர்கள் எத்தனை உரைசெய்திகள் அனுப்புகின்றனர் என்று எனக்குத் தெரியாது. (இருவரும் சிரிக்கின்றனர்)

காமியா ஜனி: நன்றி, சத்குரு.