நடப்புகள்

சத்குருவைத் தொடருங்கள்

கடந்த சில வாரங்களின் சத்குரு நிகழ்வுகள் பற்றிய ஒரு தொகுப்பு!

உலகளாவிய காஷ்மீரி பண்டிட் மாநாடு 2023ல் சத்குருவின் உரை

25 பிப்ரவரி

காஷ்மீரி பண்டிட்களின் சிறப்புமிக்க மாநாட்டில் உரையாற்றிய சத்குரு, காஷ்மீரில் பல நூற்றாண்டுகளாக அத்துமீறல்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் ஆளாகியிருக்கும் சமூகத்திற்கான தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்தினார். எதிர்காலத்தில் காஷ்மீரி பண்டிட்டுகளின் சமூகம் எவ்விதத்தில் முன்னேற முடியும் என்பது குறித்தும் அவர் பேசினார்.

பெங்களூரு சத்குரு சந்நிதியில் தன்னார்வலர்கள் சந்திப்பு

26 பிப்ரவரி

முக்கிய தன்னார்வலர்களின் குழுவைச் சந்தித்த சத்குரு, பெங்களூரிலும் பெங்களூரைச் சுற்றியும் உள்ள மக்களுக்கு, ஆன்மீக சாத்தியத்தையும் நல்வாழ்வையும் வழங்கிடும் ஒரு சக்திமையமாக, பெங்களூரு சத்குரு சந்நிதியை எவ்வாறு நாம் உருவாக்கலாம் என்பதைப் பற்றி எடுத்துரைத்தார்.

25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான உச்சிமாநாட்டில் சத்குரு

4 மார்ச்

நிகழ்ச்சி மேடையில் நடிகர் சித்தாந்த் சதுர்வேதி சத்குருவுடன் இணைந்து, உண்மையின் தன்மை, நன்மைக்காக பொய்களைச் சொல்வது சரியா, கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம், காதலில் விழுவது, காதல் முறிவுகளைச் சமாளிப்பது மற்றும் hookups எனப்படும் பாலியல் அணுகுமுறை சரியா என்பன போன்ற பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடினார்.

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியில் OLA தொழிற்சாலையில் சத்குரு

4 மார்ச்

OLA Cabsன் தலைமை நிர்வாக அதிகாரியான பவிஷ் அகர்வால், OLA தொழிற்சாலைக்கு சத்குருவை அன்புடன் வரவேற்றார். அங்கு பெரும்பான்மையாக உள்ள பெண் பணியாளர்களைக் கொண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தங்கள் நிறுவனம் உற்பத்தி செய்கிறது என்பதை அவர் பெருமையுடன் காண்பித்தார். இளம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதும் திறமைக்கு வாய்ப்பளிப்பதும், தேசத்தை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கான ஒரு உறுதியான வழி என்பதை, தனது உரையில் சத்குரு பதிவுசெய்தார்.

குஜராத்தின் பாலன்பூரில் சத்குருவை வரவேற்ற பனாஸ் பால் பண்ணையாளர்கள்

11 மார்ச்

ஆசியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளரும், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் ஒரு பிரிவுமான பனாஸ் பால் பண்ணையை பார்வையிட சத்குரு அழைக்கப்பட்டிருந்தார். அவரை பனாஸ் பால் பண்ணையின் தலைவரும், குஜராத் சட்டப் பேரவைத் தலைவருமான சங்கர் சௌத்ரி வரவேற்றார். அங்கு இணைந்திருந்த விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய சத்குரு, விவசாயத்தை யோகாவுடன் தொடர்புபடுத்திக்கூறி, நம் குழந்தைகள் நன்றாக வாழ, வளமான மண்ணை விட்டுச்செல்ல வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

குஜராத்தில் நடாபெட் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு சத்குரு வருகை

11 மார்ச்

குஜராத்திலுள்ள நடாபெட்டில் சீமா தர்ஷன் எனப்படும் பாரம்பரிய நிகழ்வையும், Zero Point எனப்படும் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டையும் பார்வையிட்ட சத்குரு, அங்கு அவர் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அதிகாரிகளையும் Nadabet Operations குழுவையும் சந்தித்தார். தேசத்திற்காக கடமையாற்றும் தன்னலமற்ற அவர்களின் சேவைக்கும் அர்ப்பணிப்புக்கும் தனது இதயப்பூர்வமான நன்றியையும் பாராட்டையும் அவர் தெரிவித்தார்.

சத்குருவை சந்தித்த UP வாரியர்ஸ் கிரிக்கெட் அணி

12 மார்ச்

மகளிர் பிரீமியர் லீக் முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கும் நிலையில், அதுவரை தோல்வியை சந்தித்திராத மும்பை இந்தியன்ஸ் உடனான போட்டிக்கு முன்பாக, UP வாரியர்ஸின் கிரிக்கெட் வீராங்கனைகளுடன் கலந்துரையாட சத்குரு அழைக்கப்பட்டிருந்தார். அவர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்த சத்குரு, அடுத்த தலைமுறை விளையாட்டு வீராங்கனைகளை ஊக்கப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், மும்பையில் நடந்த அந்த கிரிக்கெட் போட்டிக்கும் சத்குரு வந்து பார்வையிட்டார். இதில் மும்பை இந்தியர்களின் தொடர்ச்சியான வெற்றிப்பயணத்தை UP வாரியர்ஸ் முடித்து வைத்து, வெற்றிவாகை சூடினர்.

பெங்களூரு சத்குரு சந்நிதியில் முதல் சப்தரிஷி ஆவாஹனம்

18 மார்ச்

சப்தரிஷி ஆவாஹனம் என்பது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவன் தனது சீடர்களான சப்தரிஷிகளுக்கு கற்பித்த ஒரு சக்திவாய்ந்த செயல்முறையாகும்.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலின் உபாசகர்களால் இந்த செயல்முறை அதன் புனிதம் மாறாமல் பாதுகாக்கப்பட்டு, கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வெளியே நடத்தப்படாத இந்த செயல்முறை, முதன்முறையாக பெங்களூரு சத்குரு சந்நிதியில், சத்குரு மற்றும் ஸ்ரீசுத்தூர் மடத்தின் ஜகத்குரு சிவராத்திரி தேஷிகேந்திர மஹாஸ்வாமிஜி, ஸ்ரீ அபிநவ கவிசித்தேஸ்வர சுவாமிஜி, ஸ்ரீ பசவமூர்த்தி மதரா சென்னைய்யா சுவாமிஜி ஆகியோர் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது.

மைசூருவில் JSS அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சத்குருவின் உரை

20 மார்ச்

மைசூருவிலுள்ள புகழ்பெற்ற JSS அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சத்குரு உரையாற்றினார். பட்டம்பெறும் பொறியாளர்கள் தங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வேளையில், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் ஆழமிக்க பார்வைகளைப் பகிர்ந்த சத்குரு, தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். ஒரு காலத்தில் மாயாஜாலமாகத் தோன்றிய பல விஷயங்களை இன்று இயல்பாக மாற்றியுள்ள பொறியியல் திறன் பற்றி பேசிய சத்குரு, தற்போது அவர்களின் கைகளில் இருக்கும் பொறுப்பையும் வாய்ப்புகளையும் பற்றி எடுத்துரைத்தார்.