ஈஷா லீடர்ஷிப் அகாடமியின் “Brand Insight – Decoding Branding” கலந்துரையாடலுடன் கூடிய பயிற்சிப் பட்டறை, பங்கேற்பாளர்கள் தங்கள் பிராண்டுகளை உருவாக்க கற்றுக்கொள்ளும் விதத்தில் நுட்பமாக வடிவமைக்கப்பட்டு, தங்கள் வணிகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு திறவுகோலாக இருக்கும் வகையில் நிகழ்ந்தேறியது.
நேரில் வந்து பங்கேற்கும் Brand Insightன் முதல் நிகழ்ச்சி, 2023 மார்ச் 3 முதல் 5 வரை கோவை ஈஷா யோக மையத்திலுள்ள நாளந்தா ஹாலில் நடத்தப்பட்டது. நிறுவனங்களின் பிராண்டு மேலாளர்கள், வணிக உரிமையாளர்கள் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரிகள் உட்பட நாற்பத்தாறு பங்கேற்பாளர்கள் தங்களின் பிராண்டுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்தியாவின் சிறந்த பிராண்டு வல்லுநர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள ஒன்றுகூடி இருந்தனர்.
பிரத்யேகமாக இந்திய வணிகங்களுக்காக சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ள Brand Insight நிகழ்ச்சி, branding செய்வதற்கான கருவிகள் பற்றியும் அதன் ஆற்றல் பற்றியும் விழிப்புணர்வு இல்லாததால், இந்திய வணிகங்கள் தங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்த முடியாமல் போய்விட்டது என்ற முக்கிய உணர்தலிலிருந்து உருவாகியுள்ளது.
கலந்துரையாடலுடன் கூடிய ஒரு பயிற்சிப் பட்டறையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 3 நாள் நிகழ்ச்சி, இலகுவான தன்மையுடன் கூடிய ஒரு தீவிரத்துடன் வழக்கமான ஈஷா பாணியில் நடத்தப்பட்டது. கவனத்துடன் வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சியின் சூழலில், இந்தியாவின் முன்னணி பிராண்டு வல்லுனர்களும் அனுபவசாலிகளும் ஒன்றிணைந்து பங்கேற்பாளர்களுக்கு ஒரு பிராண்டை உருவாக்கும் அறிவியலைப் புரிந்துகொள்ள உதவினார்கள். இந்த நிகழ்ச்சியானது ஒரு புகழ்பெற்ற வணிக நிறுவனத் தலைவரும் பிராண்டு உருவாக்கத்தின் முன்னோடியுமான அனிஷா மோத்வானி அவர்களால் திறமையாக வடிவமைக்கப்பட்டு, தொகுத்து வழங்கப்பட்டது.
Branding என்பது உங்கள் படைப்பை சந்தைக்கு கொண்டுசெல்வதற்கு முன்பு நீங்கள் செய்யும் ஒன்று. உங்கள் பிராண்டை பல லட்சம் வழிகளில் சந்தைக்கு கொண்டுசெல்ல முடியும். பிராண்டிங் நீடித்திருக்கும் ஒன்று, சந்தைப்படுத்தல் அந்தந்த சூழலுக்கானது. - அனிஷா மோத்வானி; பிராண்டு, டிஜிட்டல் & இன்னோவேஷன் நிபுணர்
பிராண்டிங் குறித்த சத்குருவின் தனித்துவமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி நிகழ்ச்சியை தொடங்கிய அவர், அடுத்த மூன்று நாட்கள் உதாரணங்களை கொண்டு ஆய்வுகள், செய்முறை வகுப்புகள், நிபுணர்களின் விரிவுரைகள் மற்றும் சக பங்கேற்பாளர்களுடன் சுவாரஸ்ய கலந்துரையாடல்கள் ஆகியவற்றுடன் "செயல் மூலம் கற்றல்" என்ற ஆழமிக்க பயிற்சிகளுடன் எப்படி இருக்கப் போகிறது என்பதையும் பகிர்ந்துகொண்டார். தனது பல வருட அனுபவத்திலிருந்து, இந்த செயல்முறையை சரியாகப் பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பங்கேற்பாளர்களுக்கு சிறப்பான அறிவுரைகளை அவர் வழங்கினார்: “சந்தைப்படுத்துதலில் உள்ளீடுகள் அறிவியலை அடிப்படையாகக் கொண்டவை, வெளியீடு என்பது ஒரு கலை, மற்றும் அதன் விளைவாக கிடைப்பதே வணிகமாகும்."
ஒவ்வொரு நிகழ்விலும், பங்கேற்பாளர்கள் இந்தியாவின் முன்னணி பிராண்டு வல்லுநர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர். கவனம் ஈர்க்கும் ஒரு பிராண்டை உருவாக்கி, அதை ஒரு நீடித்திருக்கும் பிராண்டாக நிலைநிறுத்தி, அதைத் திறம்பட சந்தைப்படுத்தல் அம்சமாக மாற்றுவதற்கான பயணத்திற்கு வல்லுநர்கள் வழிகாட்டினர்.
"பிராண்டுகள் மூன்று விஷயங்களைச் செய்ய அனுமதிக்கிறது: ஏதாவது ஒன்றை முன்னிறுத்தி நிற்பது, போட்டியில் முன்னிற்பது மற்றும் உறுதியாக நிற்பது. நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்தவுடன், பிராண்டுகள் அதை தங்கள் செயலில் பிரதிபலிக்க வேண்டும்.- S. சுப்ரமண்யேஷ்வர், விளம்பர மார்க்கெட்டிங் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமான MullenLowe Lintas குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி; தலைமை வியூக அதிகாரி – ஆசியா பசிபிக் மற்றும் MullenLowe குழுமத்தின் உலகளாவிய திட்டமிடல் சபையின் தலைவர்.
"வெற்றிகரமான சில நிறுவனங்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், அவை உண்மையில் தங்களின் நோக்கத்தில் வாழ்கின்றன. அவர்கள் தங்களின் நோக்கத்தில் வாழும்போது, அவர்களின் பணியாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை. தானாக அவர்களுக்குத் தெரியும்.” - அல்பனா பரிதா, Composite fiber helmets உற்பத்தியாளரான Tiivra Ventures Private Limited நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி
"நதிகளை மீட்போம் இயக்கம், எளிய மற்றும் நம்பகத்தன்மை கொண்ட அம்சங்களை முன்னிறுத்தி, மக்களின் இதயங்களையும் மனதையும் தொடுவதற்கான வழிமுறைகளுடன் உணர்வுபூர்வமாக கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு சக்திவாய்ந்த இயக்கம். அது ஒரு பிராண்டு மட்டுமல்ல, மிகக் குறுகிய காலத்தில் ஒட்டுமொத்த மக்கள் இயக்கமாக உருவாக முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு." - யூரி ஜெயின், முன்னாள் உலகளாவிய துணைத்தலைவர், Unilever; திட்ட ஒருங்கிணைப்பாளர், ஈஷா அவுட்ரீச்
“பிராண்டிங்கில் இரண்டு பகுதிகள் உள்ளன. தர்க்க அறிவிலான விஷயம் உள்ளது, இந்த தர்க்க அறிவு மாயாஜாலமாக மாறவேண்டும். நீங்கள் அதை அதிக தர்க்க அறிவுடன் செய்தால், அது சலிப்பாக மாறும். ஒரு படைப்பாளியின் வேலை, தங்களின் மாயாஜாலத்தை தர்க்கத்துடன் சேர்த்து அதை சுவாரஸ்யமாக்குவது. - சௌரப் மிஸ்ரா, இணை நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரர், பிராண்டிங், Azendor Consulting
“முதலில், ஒரு தனித்துவமான நிலையில் மக்களின் பார்வைக்கு நில்லுங்கள், பின்னர் பொருத்தமான, சுவாரசியமான மற்றும் ஏதாவது ஒரு வழியில் பயனுள்ளதாக இருக்கும் ஒரு வழியைக் கண்டறியுங்கள். அதுதான் முக்கியமானது." - நாராயண் தேவநாதன், தலைமை திட்டம் & தகவல் தொடர்பு அதிகாரி, இந்தியாவுக்கான தேசிய அறக்கட்டளை, ஒரு சுதந்திரமான நிதி வழங்கும் அமைப்பு.
"நீங்கள் வணிகத்தை தினமும் திரும்பத் திரும்ப நீண்ட காலம் செய்யும்போது உங்கள் பலம் என்ன என்பதைக்கூட நீங்கள் உணரவில்லை. எனவே, ஒரு கேள்விப் பட்டியலைத் தயாரித்து, ‘இது சரியாகத் தெரிகிறது, ஆனால் இது உண்மையா?’” என்று கேளுங்கள் - அட்டிகா மாலிக், திட்ட ஆலோசனை பங்குதாரர்; முன்னாள் COO மற்றும் CSO, விளம்பர நிறுவனம் Cheil India, தென் மேற்கு ஆசியா
"ஒவ்வொரு முறையும் ஒரு வேலை உங்களுக்கு வழங்கப்படும்போது, உங்களுக்குள் அதைப்பற்றிய சுருக்கமான விளக்கமும் உங்களிடமே கேட்டுக்கொள்ள வேண்டிய சில கேள்விகளையும் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, இதனால் 'எனக்கு பிடிக்கும்' அல்லது 'எனக்கு பிடிக்கவில்லை' என்பதைத் தாண்டிய ஒரு செயல்முறையாக அது மாறும்.” - சோனல் டப்ரல், தென்கிழக்கு ஆசிய விளம்பர நிறுவனமான Ogilvyன் கிரியேட்டிவ் டைரக்டர், முன்னாள் தலைமை கிரியேட்டிவ் அதிகாரி; சர்வதேச விளம்பர சங்கத்தின் (IAA) இந்த ஆண்டின் சிறந்த கிரியேட்டிவ் ஏஜென்சி தலைவர்.
நிகழ்ச்சி முழுவதும் சத்குருவின் நுண்ணறிவுமிக்க கருத்துகளும், பிராண்டிங்கின் பல்வேறு நுணுக்கங்கள் குறித்த வீடியோ பதிவுகளும் சரியான தருணங்களில் பங்கேற்பாளர்களுக்கு காண்பிக்கப்பட்டன.
3 நாள் பயணம் முழுவீச்சில் நடக்கும் தருணத்தில், இந்த நிகழ்ச்சி உண்மையில் எவ்வளவு ஆழமானது என்பதை பங்கேற்பாளர்கள் உணர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வல்லுநர்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருந்தது மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையில் சக பங்கேற்பாளர்களுடன் இணைந்து செய்முறை பயிற்சிகளை மேற்கொள்வது, பங்கேற்பாளர்களுக்கு புதிய சாத்தியங்களையும் பார்வைகளையும் திறந்துள்ளது.
"ஒரு ஓவியம், ஆயிரம் வார்த்தைகளுக்கு இணையானது" என்ற பழமொழியை உறுதிசெய்யும் விதமாக, திறமையான கலைஞர்கள் தங்களது ஓவியங்கள் மற்றும் படங்கள் மூலம் நிகழ்ச்சியை உயிரோட்டமாக்கினர்.
முக்கிய கற்றல்களை வழங்கும் விதமாகவும், உதாரணங்களின் மூலம் உண்மையான பிராண்டுகளில் அவற்றை முயற்சித்துப் பார்ப்பதற்கான செய்முறை வகுப்புகளுடன் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதிபேர் Zoho வையும், மற்ற பாதிபேர் பெங்களூரு iD Fresh Food ஐயும் வைத்து முயற்சித்துப் பார்த்தனர். ஆனால் அங்கே ஒரு சுவாரஸ்ய திருப்பம் இருந்தது! இந்தப் பயிற்சிக்கு அவர்களின் வழிகாட்டிகள் வேறு யாருமல்ல, iD Fresh Food (India) நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ராகுல்காந்தியும், தொழில்நுட்ப நிறுவனமான Zoho Corporationன் சந்தைப்படுத்தல் துணைத்தலைவர் பிரவல் சிங்கும் ஆவர். ஒரு பிராண்டிற்குத் தேவையான சாராம்சத்தைப் புரிந்துகொள்வதற்கு, ஒவ்வொரு நாளும் பிராண்டையே சுவாசித்து வாழும் வல்லுநர்களின் பார்வையிலிருந்து கற்றுக்கொள்வதை விட சிறந்த வழி வேறு என்ன இருக்கும்!
உள்நிலை மாற்றத்திற்கான யோகக் கருவிகள் இல்லாமல் ஈஷாவில் எந்தவொரு நிகழ்ச்சியும் நிறைவடைவதில்லை, Brand Insightம் இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு நாளும் யோகாவுடன் தான் நிகழ்ச்சி துவங்கியது, அதைத் தொடர்ந்து நாளந்தா ஹாலில் அமைதியான சூழலில் சுவையான சாத்வீக காலை உணவு இருந்தது.
சத்குரு வழங்கியுள்ள வழிகாட்டுதலுடன் கூடிய தியானங்களும் இருந்தன. நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தீவிர பயிற்சிகளுக்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் அமைதியையும் புத்துணர்ச்சியையும் பெற இது உதவியது.தனக்கே உரித்தான நுட்பமும் நகைச்சுவையும் மிக்க அதே சமயம் பிராண்டிங் குறித்த தனது ஆழமிக்க பார்வைகளையும், தற்போதைய சந்தையில் வெற்றிபெற நாம் எந்த வகையான பிராண்டை உருவாக்க வேண்டும் என்பதையும் சத்குரு விளக்கினார்.
இறுதியாக, யூரி ஜெயின் சில முக்கிய கருத்துகளுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்: “ஒரு சக்திவாய்ந்த பிராண்டை உருவாக்க, உங்களுக்கு உத்வேகமும் ஈடுபாடும்மிக்க தலைவர்கள் தேவை. பிராண்டிற்கான செலவும் விளம்பரமும் முக்கியமல்ல. ஒரு பிராண்டின் முழு திறனையும் அடைவதற்கு, உங்களின் சொந்தத் திறனை முழுமையாக நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.”