ஈஷா சமையல்

மொறுமொறு
கறிப்பலா சாலட்

தேவையானவை

கறிப்பலா சமைக்க:

900 கிராம் கறிப்பலா / பலாக்காய் - சிறு துண்டுகளாக சதுரமாக நறுக்கியது

2 தேக்கரண்டி ஆலிவ் ஆயில்

1 தேக்கரண்டி ஆர்கனோ

¾ தேக்கரண்டி ஓமம்

1 தேக்கரண்டி சீரகம்

1 தேக்கரண்டி மிளகுத்தூள் அல்லது மிளகாய் தூள் (விருப்பத்திற்கேற்ப)

½ தேக்கரண்டி உப்பு

1½ ஆரஞ்சுகளின் சாறு

2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

2 தேக்கரண்டி சோயா சாஸ் அல்லது திரவ அமினோஸ்

சாலடிற்கு:

5 கப் கீரைகள் / லெட்டூஸ் கீரை

1 அவகாடோ

1 கப் நறுக்கிய தக்காளி (செர்ரி தக்காளி அல்லது வழக்கமானவை)

⅔ கப் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்

⅓ கப் பூசணி விதைகள்

டிரசிங்கிற்கு:

2 கப் கொத்தமல்லி இலை

¼ கப் எலுமிச்சை சாறு

2 தேக்கரண்டி தேன் அல்லது மேப்பிள் சிரப்

½ தேக்கரண்டி பொடித்த கொத்தமல்லி விதைகள்

½ தேக்கரண்டி கல் உப்பு

¼ தேக்கரண்டி புதிதாக உடைத்த கருப்பு மிளகுதூள்

½ கப் எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெய்

செய்முறை

கறிப்பலா சமைக்க:

  • 1 ½ ஆரஞ்சு சாறு எடுத்துக்கொள்ளவும்.
  • மரினேடிற்கு, மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள், உப்பு, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறு மற்றும் சோயா சாஸ் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் ⅔ கப் தண்ணீரில் கலக்கவும்.
  • 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை ஒரு பெரிய பாத்திரத்தில் மிதமாக சூடாக்கவும்.
  • கறிப்பலாவையும் மரினேடையும் சேர்க்கவும். நன்கு கிளறவும், பின்னர் குறைந்த சூட்டில் வைக்கவும். பாத்திரத்தை மூடி, 45 நிமிடங்கள் இளஞ்சூட்டில், தங்க பழுப்பு நிறம் வரும் வரை, கீழே ஒட்டாமல் இருக்க அவ்வப்போது கிளறிவிட்டு வேகவைக்கவும். சூடு ஆறும்வரை காத்திருக்கவும்.

சாலட் செய்ய:

  • கீரையை கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும்.
  • அவகாடோ பழத்தை பாதியாக வெட்டி அதன் விதையை நீக்கிவிட்டு, பழத்தின் தோலினை நீக்கவும், பிறகு சிறு துண்டுகளாக வெட்டவும்.
  • செர்ரி தக்காளி அல்லது வழக்கமான தக்காளியை எடுத்து அதையும் துண்டுகளாக நறுக்கவும்.
  • கொத்தமல்லி இலைகளை கழுவி, தண்ணீரை வடிகட்டி, தோராயமாக நறுக்கவும்.
  • ஒரு பெரிய கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து, சாலட் டிரஸ்ஸிங்குடன் சமமாக தூவவும், நன்கு கலக்கும் வரை பாத்திரத்தை சுண்டி கலக்கவும்..

அலங்காரத்திற்கு:

  • மிக்சியில் கொத்தமல்லி இலைகள், எலுமிச்சை சாறு, தேன்/மேப்பிள் சிரப், கொத்தமல்லி தூள், மிளகு மற்றும் உப்பு சேர்க்கவும்; ஒன்று சேரும்வரை அரைக்கவும்.
  • பின்னர் அதில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி மென்மையாகும் வரை அரைக்கவும்.

உதவிக்குறிப்பு: வழுவழுப்பான டிரசிங்கிற்கு, 1 அவகாடோ அல்லது ½ கப் தயிர் சேர்த்து கலக்கவும்.

பரிமாற:

ஒரு பெரிய கிண்ணத்தில் சாலடை வைத்து, டிரசிங்கை அதன் மீது ஊற்றவும், மெதுவாக கிளறுங்கள். சாலட்டின் மேல் சமைத்த கறிப்பலா துண்டுகளைப் போடுங்கள். அப்படியே உண்டு மகிழுங்கள்!