மலைச் சிகரங்களின் உறைபனி உருகி
உயிரின் சாரம் வழிந்தோடும்போது
மண்ணின் அதிசயமான பிளவுகளிலிருந்து
வளமான கனிமங்களின் ஓடைகள் கசிந்தோடும்
அனைத்துயிரும் செழிப்பதற்கு அசாத்தியமான இடங்களில்
வியப்பூட்டும் நீர்நிலைகளை நமக்கு
அள்ளிக்கொடுத்திருக்கிறாள் நம் பூமித்தாய்.
ஆனால் வாழ்வை குழப்பிடும் மானிடர்கள்
நாம் உண்ண வேண்டியவற்றையும்
கழிவுகளாக வெளியேற்றவேண்டியவற்றையும் கலந்து
நாம் சுவாசிக்கும் காற்றிலும் நாம் பருகும் தண்ணீரிலும்
நாம் உண்ணும் உணவிலும்
நம் மூலமான மண்ணிலுமே
தம் கழிவுகளை வெளியேற்றத் தேவையிருக்கும்
பிரம்மாண்ட கட்டமைப்புகளை கட்டமைக்கின்றனர்.
ஒவ்வொரு தனிமனிதரும்
பூமியில் தம் காலடிச்சுவடுகளை பதித்திட விரும்பி
உயிரையும் அதன் மூலத்தையும் மாசுபடுத்துவது
வருங்காலத்தில் வெகுசீக்கிரத்தில்
மானிடரின் இந்த விளையாட்டிற்கு
ஒரு முற்றுப்புள்ளியை உருவாக்கக்கூடும்