ஈஷா சமையல்

பருப்பு & தக்காளி போலோக்னீஸ்

(5 பேருக்கு)

தேவையான பொருட்கள்

1 கப் கருப்பு உளுந்து (அல்லது உங்கள் விருப்பப்படி வேறு ஏதேனும் ஒரு பருப்பு)
750 கிராம் தக்காளி (2 கப் தோலுரித்து நறுக்கப்பட்ட தக்காளிகள்)
1 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு
2 சிவப்பு குடை மிளகாய்
¼ கப் வால்நட் பருப்பு
1½ மேசைக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
1 தேக்கரண்டி உலர்ந்த ஒரிகனோ
1 தேக்கரண்டி உலர்ந்த தைம்
1 ½ தேக்கரண்டி கல் உப்பு
புதிதாக அரைத்த கருப்பு மிளகு (சுவைக்காக)
150 கிராம் தக்காளி விழுது
3 கப் காய்கறி சூப்
400 கிராம் பாஸ்தா

அலங்காரத்திற்காக (விரும்பினால்)

தட்டையான இலையுள்ள வோக்கோசு அல்லது திருநீற்றுப் பச்சிலை (நறுக்கியது)

செய்முறை

  • கருப்பு உளுந்து அல்லது பருப்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • தக்காளியைக் கழுவி, சுமார் 1 நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு. பின்னர் அவற்றை குளிர்ந்த நீரில் கழுவவும். தோல்களை உரித்து, காம்புபகுதியை அகற்றி, மையத்திலுள்ள விதைகளையும் சதைப்பகுதியையும் அகற்றிவிட்டு, தக்காளியை நடுத்தர அளவிலான துண்டுகளாக நறுக்கவும்.
  • தக்காளி துண்டுகளை ஒரு பெரிய வாணலிக்கு மாற்றி, மிதமான சூட்டில் வேக வைக்கவும். ½ தேக்கரண்டி உப்பு சேர்க்கவும். தொடர்ந்து கிளறி, சுமார் 5 நிமிடங்கள் வரை அல்லது மென்மையாகும் வரை சமைக்கவும். பின்னர் தக்காளித் துண்டுகளை கரண்டியால் மசித்து விடவும். அதில் 1 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து, மீண்டும் கிளறவும். அதை தனியாக எடுத்துவைக்கவும்.
  • குடை மிளகாயைக் கழுவி, அவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • வால்நட் பருப்பை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • பெரிய வாணலி அல்லது கடாயில், ஆலிவ் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதில் நறுக்கிய குடைமிளகாயையும் ஒரு சிட்டிகை உப்பும் சேர்க்கவும். அவ்வப்போது கிளறியபடி, சுமார் 5 நிமிடங்கள் வேகவைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும்.
  • தைம், ஒரிகனோ, 1½ தேக்கரண்டி உப்பு மற்றும் சுவைக்காக மிளகு சேர்க்கவும். தொடர்ந்து கிளறி, சுமார் 1 நிமிடம் வேகவைக்கவும்.
  • தக்காளி விழுது சேர்த்து கிளறி 2-3 நிமிடங்களுக்கு பொன்னிறமாக ஆகும்வரை தொடர்ந்து கிளறவும்.
  • காய்கறி சூப்பில் இதை ஊற்றவும், அதை நன்றாக கலக்கவும். இதைத் தொடர்ந்து ஊறவைத்த கருப்பு உளுந்து அல்லது பருப்பு மற்றும் நறுக்கப்பட்ட வால்நட்களை சேர்த்து, அவற்றை நன்கு கிளறவும்.
  • கலவை ஒரு கொதி வரும்வரை சூடாக்கவும்; பின்னர் மிதமான சூட்டில் வைத்து 20 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அவ்வப்போது கிளறிவிட மறக்கவேண்டாம்.
  • அடுத்து, மசித்த தக்காளியைச் சேர்க்கவும். அவ்வப்போது கிளறி, மற்றொரு 15-20 நிமிடங்களுக்கு, பருப்பு மென்மையாக ஆகும்வரை வேகவைக்கவும், ஆனால் குழையாதவாறு பார்த்துக்கொள்ளவும். இந்த கலவையில் தண்ணீர் வற்றிப்போனால், கருகிப் போகாமல் இருக்க சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
  • சாஸ் வேகும் நேரத்தில், ஒரு சட்டியில் தண்ணீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் பாஸ்தாவை சேர்த்து வேகும் வரை சமைக்கவும். தண்ணீரை வடிகட்டவும். பின்னர் பயன்படுத்துவதற்காக அரை கப் பாஸ்தா நீரை எடுத்து வைக்கவும்.
  • இப்போது, போலோக்னீஸ் சாஸை ருசிபார்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு சேர்த்து சுவையைச் சரிசெய்யவும். சாஸ் மிகவும் புளிப்பாக இருந்தால், அதில் ஒரு சிட்டிகை வெல்லம் அல்லது சர்க்கரையைச் சேர்த்து சுவையை சமன்செய்யலாம்.
  • பரிமாறும் முன், பாஸ்தாவை போலோக்னீஸ் சாஸுடன் சேர்த்து, பாஸ்தா சாஸில் நன்கு கலக்கும்வரை அவற்றைக் கிளறவும்.
  • விரும்பினால், புதிதாக நறுக்கிய வோக்கோசு அல்லது திருநீற்றுப் பச்சிலையால் அலங்கரிக்கவும். சூடாக பரிமாறி ருசித்து மகிழலாம்.