நடப்புகள்

வெற்றியின் திறவுகோல்: இன்சைட் 2023ன் பிரதிபலிப்புகள்

ஒவ்வொரு வெற்றிக் கதையும் ஒரு தனித்துவமான DNA-ன் துணையுடன் பொறிக்கப்படுகிறது. இதை வெளிப்படுத்துவதற்கு நவம்பர் 23ல் இருந்து 26 வரை, உலகெங்கிலும் இருந்து வந்திருந்த வர்த்தகத் தலைவர்கள் இன்சைட்: வெற்றி நிகழ்வின் DNA விழாவில் ஒன்றுகூடினர். ஈஷா யோக மையத்தில் சத்குரு அகாடமியால் தொகுத்து வழங்கப்பட்ட, 12வது பதிப்பாகிய, இந்த 4 - நாள் ஆழமான அனுபவம், தொழிற்சாலை நிபுணர்கள் மற்றும் சத்குருவிடம் இருந்து வெளிப்பட்ட நுண்மாண் அறிவின் வாயிலாக வர்த்தக விரிவாக்கம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி குறித்த நுணுக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டியது.

இந்த ஆண்டின் பேச்சாளர்களாகவும், வளமான அனுபவப் பகிர்வாளர்களாகவும், ராஜீவ் சந்திரசேகர், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறையின் மாநில அமைச்சர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் மாநில அமைச்சர்; மிதுன் சாச்சேத்தி, நிறுவனர் & நிர்வாக இயக்குனர், கேரட்லேன்; அபிஷேக் கங்குலி, துணை நிறுவனர், அஜிலிடஸ் ஸ்போர்ட்ஸ் (முன்னாள் நிர்வாக இயக்குனர் ப்யூமா இந்தியா & தென்கிழக்கு ஆசியா); பவிஷ் அகர்வால், நிறுவனர், ஓலா; Dr. கிருஷ்ணா எல்லா, தலைவர் & நிர்வாக இயக்குனர், பாரத் பையோடெக் இன்டர் நேஷனல் லிட்; மற்றும் விநோத் கே. தாசரி, தலைவர், தெரசா மோட்டார்ஸ் மற்றும் வினிதா ஹெல்த் (முன்னாள் தலைமை செயல் அதிகாரி, ராயல் என்ஃபீல்ட்; முன்னாள் நிர்வாக இயக்குனர் & தலைமை செயல் அதிகாரி, அசோக் லேலண்ட்) ஆகியோர் இருந்தனர்.

ஒரு உத்வேகத்துடன் தொடங்கிய இந்தப் பதிப்பில், “எழுச்சியுறும் பாரதத்தின் மலர்ச்சி” என்பது பேசுபொருளாக இருந்தது. இத்தகைய சவாலான தருணங்களில் ஆக்கப்பூர்வமாக முன்னேறுவதற்கும், பாரதத்தின் எதிர்காலத்தைத் துடிப்புடன் வடிவமைக்கவும், தொழில்முனைவோருக்குத் தேவையான திறமைகளை வழங்குவதற்கான நோக்கமே நிகழ்ச்சியின் உள்ளடக்கமாக இருந்தது. பல்வேறு நிகழ்வுகளின் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் விரிவுரைகளுக்கு இதுவே மேடை அமைப்பதாக இருந்தது.

உலகெங்கிலும் இருந்து வந்திருந்த 245 பங்கேற்பாளர்களை வரவேற்ற நிகழ்வில், 6 புகழ்பெற்ற பேச்சாளர்கள், 28 அனுபவப் பகிர்வாளர்கள், மற்றும் சத்குரு அவர்கள் இடம்பெற்றனர். துடிப்பான சக்தியுடனும், வெளிப்படையான உற்சாகத்துடனும் தொடங்கிய நிகழ்வில், பங்கேற்பாளர்கள் கற்றல் மற்றும் தலைமையின் களிப்பூட்டும் புதிய களத்துக்குள் அடியெடுத்து வைத்தனர்.

இன்சைட் 2023-ன் துவக்க அமர்வில், பாரதத்தின் உள்ளார்ந்த தொழில்முனையும் ஆர்வத்தைக் கோடிட்டுக் காட்டுவதுடன் சத்குரு, அவரது உரையைத் தொடங்கினார். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்கூட, உலகின் மொத்த உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களில் 25 சதவிகிதத்தை உற்பத்தி செய்வதற்கு பாரதம் பொறுப்பேற்றிருந்த அதன் சரித்திர காலத்திய செல்வச்செழிப்பான தகவலைக் கூறி அவர் கவனம் ஈர்த்தார். பாரதம் ஒருபோதும் வேலை வாய்ப்பின் களமாக இருந்ததில்லை, ஆனால் ஆழமாக வேரூன்றிய தொழில்முனையும் திறமைகளுடன் இருந்ததை சத்குரு அழுத்தமாக பதிவு செய்தார். இந்தத் திறமைகளை மீட்டெடுப்பது காலத்தின் தேவை என்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும், வர்த்தக முயற்சிகளில் தோல்வியடையும் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு வலையை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை சத்குரு வலியுறுத்தினார். அப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பு வலையானது மக்களிடையே ஒரு சாகசத்தன்மையைத் தூண்டிவிடுவதற்கு அவசியமாக உள்ளது. அப்படியான ஒரு பாதுகாப்பு வலை இல்லையென்றால், மக்கள் துணிந்து செயல்படுவதில் விருப்பமில்லாமல் போகலாம். இது தொழில்முனையும் ஆர்வத்தை அணைத்துவிடலாம் என்றும் அவர் எச்சரித்தார். குறைவாக வேலைசெய்யும் நோக்கம் கொண்டவர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் இடையில் ஒரு தெளிவான கோடு வரைந்த சத்குரு, உண்மையான தொழில்முனைவோர் எப்போதும் அதிகமாக செயல்படும் வழிகளைத் தேடுவதனால், அவர்களது முழுமையான ஆற்றலை வெளிக்கொணர்கின்றனர் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

திரு. ராஜீவ் சந்திரசேகர், தொழில்முனைவோர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துக்கான மத்திய அமைச்சர் அவர்களுடன் சத்குரு மேற்கொண்ட சிந்தனையைத் தூண்டும் உரையாடலில், ஒரு தார்மீக, சரிசமமான உலகத்துக்கான கவனத்துடன் இருப்பவர்களின் நோக்கம் எப்போதுமே, “ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்”, என்றே இருந்துள்ளதாக சத்குரு வெளிப்படுத்தினார். அப்படிப்பட்ட ஒரு உலகத்தை நனவாக்குவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அத்தியாவசியமான பங்கினை சத்குரு வலியுறுத்தினார். இந்தியா அதன் பிரஜைகளின் நலனுக்காக இந்தத் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துகிறது என்பதையும் உரையாடல் தொட்டுச் சென்றது.

இந்தியாவில் அதாவது நேசத்துடன் அழைக்கப்படும் பாரதத்தில், செயற்கை நுண்ணறிவானது பல்வேறு வழிகளிலும் பயன்படுத்தப்படும் விவரக்குறிப்புகளை திரு. ராஜீவ் சந்திரசேகர் உதாரணங்களுடன் விளக்கினார். விவசாயம், ஆட்சிமுறை, மருத்துவக் கவனிப்பு, மற்றும் மொழிமாற்றம் உள்ளிட்ட அதற்கான துறைகளை வரிசைப்படுத்தினார்.

இத்தகைய தொழில்நுட்பங்களை ஒரு பிரச்சனையாகப் பார்ப்பதைவிட, மகத்தான சாத்தியங்களாக நோக்கும் சத்குரு, அதனை முறைப்படி பயன்படுத்தவில்லை என்றால் அதுவே மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கக்கூடும் என்றும் எச்சரித்தார். வேகமாக வளர்ந்துவரும் டிஜிட்டல் யுகத்துக்கான தகுநிலையை உறுதி செய்வதற்கு, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை புதுப்பிப்பதற்கான அவசரத் தேவையையும், முக்கியத்துவத்தையும் அடிகோடிட்டு உரையாடலை ஒரு பொருத்தமான தருணத்தில் திரு. ராஜீவ் சந்திரசேகர் முடித்துவைத்தார்.

Dr. கிருஷ்ணா எல்லா, பாரத் பயோடெக்கின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், அவரது தொழில்முனைப் பயணத்தை ஒளிவுமறைவின்றி பகிர்ந்துகொண்டார். அவரது விவசாய பெற்றோர்களிடம் தொழில்முனையும் இழைகளைக் கற்றதிலிருந்து, கோவாக்ஸின் தடுப்பூசி கண்டுபிடிப்பு உள்ளிட்ட, பயோடெக்கில் புதுமைகளை ஆரம்பித்துவைத்தது வரை அவர் தனது பாதையின் தடங்களை பின்னோக்கினார். அவரது உரையின்போது, மூலதன திறமை, உள்ளுணர்வின் தலைமை, மற்றவர்களுக்கு உதவும் நோக்கம், மற்றும் அசையாத நேர்மறைத்தன்மை மூலமாக வலிமையான வர்த்தக அடித்தளங்களைக் கட்டமைப்பதன் முக்கியத்துவத்தை அடிகோடிட்டார்.

“எந்தப் பிரச்சனையையும் எளிய மொழியில் சிந்தியுங்கள் – உலகத்திலேயே சிறந்த தீர்வை நீங்கள் காண்பீர்கள்”, என்ற அவரது அறிவுரையால், Dr. எல்லா பலனளிக்கும் தீர்வுகளை வெளிக்கொணர்வதற்கு, பிரச்சனைகளை வேறு கோணத்தில் விளங்கிக்கொள்வதற்கு பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தினார். கிராமப்புற இந்தியா, ஆப்பிரிக்கா, மற்றும் பல நாடுகளில் அவர்களின் தடுப்பூசி முன்னெடுப்பை பிரதிபலிக்கும் விதமாக, சர்வதேச பயோ ஃபார்மாசூட்டிகல் பரப்பில் பாரத் பயோடெக்கின் முன்னணி பங்களிப்பையும் அவர் கோடிட்டுக் காட்டினார். “ஒவ்வொரு குழந்தையும் நமது குழந்தை” என்ற மந்திரத்தை உள்ளடக்கிய அவரது இதயபூர்வமான கண்ணோட்டம், பார்வையாளர்களிடம் வலிமையாக எதிரொலித்து, அவர்களுக்கு ஊக்கமூட்டியது.

இரண்டாவது நாளன்று, ப்யூமா இந்தியாவின் முன்னாள் நிர்வாக இயக்குனரும், தற்போது அஜிலிடஸ் ஸ்போர்ட்ஸ்-ன் தலைமைச் செயல் அதிகாரியுமான அபிஷேக் கங்குலி, இந்தியாவிலேயே மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் பிராண்ட் உருவாக்கும் இலக்குடன் பயணத்தைத் தொடங்கியதாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் விளையாட்டுக் கலாச்சாரத்திற்கு பங்களிப்பதற்கும், இந்திய ஸ்போர்ட்ஸ் பிராண்டுகளின் உலகளாவிய பிம்பத்தை மாற்றுவதற்குமான, அவரது விருப்பத்தை பூர்த்தி செய்வதற்கான அவரது மாறாத பேரார்வத்தையும் ஒரு அமர்வின்போது வெளிப்படுத்தினார். மேலும் கங்குலி, நிறுவன கலாச்சாரத்தின் மீதான அவரது கண்ணோட்டத்தைத் தெளிவாக எடுத்துக்கூறினார். குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும்படியான ஒரு சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இதன்மூலம், ஒவ்வொருவரின் பங்களிப்பையும் மதிக்கும் ஒரு திறமையான ஒருங்கிணைப்புக்கான தேவையை அவர் முக்கியத்துவப்படுத்தினார்.

பிராண்ட்-ல் புதுமையைப் புகுத்துவது குறித்து உரையாடல் திரும்பியபோது, கங்குலி ஒரு சுவாரஸ்யமான கண்ணோட்டத்தை முன்வைத்தார். “உற்பத்திப் பொருட்கள் ஆலையில் செய்யப்படுகின்றன, பிராண்ட்கள் நுகர்வோரின் மனங்களிலும், இதயங்களிலும் உருவாக்கப்படுகிறது”, என்றார். உண்மையான பிராண்ட் புதுமையும், நுகர்வோரின் திருப்தியும் தரமான பொருட்களை உருவாக்குவதைக் குறித்து மட்டுமல்லாமல், ஒரு வலிமையான, தொடர்புபடுத்தக்கூடிய பிராண்ட் பிம்பத்தைக் கட்டமைப்பதையும் குறித்தது என்ற கங்குலியின் நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது. ப்யூமா இந்தியாவின் தலைமையிலிருந்து அவர் பெற்ற வளமான அனுபவத்திலிருந்து, இந்த மதிப்புமிக்க ஆழமான பார்வை தொகுக்கப்பட்டுள்ளது.

ஓலாவின் நிறுவனர், பவிஷ் அகர்வால் சத்குருவுடன் மேற்கொண்ட உரையாடலில், பாரதத்தில் மின்சார வண்டியின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பது குறித்தும், தொழில்முனைவோருக்கு அது உருவாக்கும் பெரும் வாய்ப்புகள் குறித்தும் பேசினர். இந்தியாவில் பயணத்தைப் புரட்சிகரமாக்கியதற்காக அறியப்படும் அகர்வால் இப்போது, “பாரதீய” நெறிமுறைகளுடன் பொருந்தி, இசைந்துபோவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பின்னி இணைப்பதற்குப் பொறுப்பேற்றிருக்கிறார்.

செயற்கை நுண்ணறிவு பரப்பை அசைத்துப் பார்க்கக்கூடிய, ஒரு பாரத முன்னோடித் திட்டத்தை உருவாக்குவதன் அளவற்ற வல்லமையை பவிஷ் அகர்வால் எடுத்துக்காட்டினார். பாரதப் பிரஜைகளின் குறிப்பான தேவைகளைத் தீர்ப்பதற்கு, தற்போதைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை வலியுறுத்தினார். கோட்பாடில்லாமல் தேடுதலையும், ஆராய்ந்துணர்தலையும் உற்சாகப்படுத்தும் ஆழமாக வேரூன்றிய கலாச்சாரம் என்பதால், உலகளாவிய புதுமைகளில் இந்தியாவின் நன்மைகளை ஏற்றுக்கொண்ட பவிஷ் அகர்வால், சாதனைக்கான பரந்த சாத்தியங்களை நாட்டின் விழுமியக்கோவை திறந்துவிடுவதாக நம்புகிறார்.

அகர்வாலின் கருத்துகளுக்கு பதிலளித்த சத்குரு, செயற்கை நுண்ணறிவு முக்கியமாக “தானியங்கி கணக்கீடு” செய்யும் கருவிதான் என்பதைக் குறிப்பிட்டு அதன் இயல்பை விளக்கினார். கணினிகள் அப்படிப்பட்ட கடின வேலைகளை எடுத்துக்கொள்ளும் நிலையில், மனிதர்கள் அவர்களது ஆற்றலை வெளிப்படுத்துவதற்கும் உயர்நிலைத் தேடல்களுக்கு அவர்களது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துவதற்கும் அது உதவமுடியும் என்பதை வெளிப்படுத்தினார். மேலும் ஒருபடி அதிகமாக, தொழில்நுட்ப ஆர்வலர்கள் கற்பனைக்கும் அதிகமான செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்று அவர் எதிர்பார்ப்பதாகவும், அதனால் மனிதராக இருப்பதன் மதிப்பைப் போற்றுவதற்கு மனிதர்களுக்கு அது உச்சபட்ச வழிகோலும் என்றும் வெளிப்படுத்தினார்.

மிதுன்சாச்சேத்தி, கேரட்லேன் நிறுவனர், அவரது பெற்றோரின் தங்க நகை வியாபாரத்தில் ஆரம்பக்கல்வி பயின்றதிலிருந்து, அவரது சொந்த அடையாளத்தைத் தொழிலில் உருவாக்கியது வரை அவரது ஊக்கமூட்டும் பயணத்தைப் பகிர்ந்துகொண்டார். ரூ. 75 இலட்சம் முதலீட்டுடன் தொடங்கி, கேரட்லேனை ஒரு ஆன்லைன் சந்தை வியாபாரமாக கட்டமைத்த சாச்சேத்தி, பின்னாளில் ரூ. 5,000 கோடி இலாபத்தில் அரிதான சாதனையுடன் வெளிப்பட்டார்.

அவரது வெற்றிக்கு ஆணிவேராக இருந்தது, சரியான வழிகாட்டியிடம் இருந்து சரியான நேரத்தில் பெற்ற அறிவுரைதான் என்பதை அவர் குறிப்பிட்டார். மேலும், ஒரு நிலையான வெற்றியைத் தக்கவைப்பதற்கு, ஒரு உறுதியான நிறுவனக் கலாச்சாரத்தைப் பண்படுத்தவேண்டியதன் தேவையை அவர் அடிகோடிட்டார். அவரது தொழிலாளர்களை சக நண்பர்களாக மாற்றுவதனால், நேர்மறை கூட்டுறவையும் மற்றும் கூட்டு வளர்ச்சியையும் முன்னேற்றும் ஒரு சூழலை அவர் வளர்க்கிறார்.

வினோத் கே. தாசரி, வினிதா ஹெல்த் அண்ட் ட்ரீசா மோட்டார்ஸ்-ன் தலைவர், தலைமை மற்றும் இன்னல்கள் குறித்த அவரது ஆழமான உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார். அழுத்தமான மற்றும் பின்னடைவான சூழல்களுக்கு மத்தியில் ஒரு நேர்மறையான மனோபாவத்தை தக்கவைத்துக்கொள்வது குறித்த அறிவுறுத்தல்களை அவரது தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை அவர் கூறினார். நிறுவனங்களின் பணிப்பகிர்வு குறித்த அவரது கண்ணோட்டத்தை அவர் தெளிவுபடுத்துகையில், ஒரு சராசரி நிறுவனம் அதன் தொழிலாளர்களைச் சார்ந்திருக்கிறது, ஒரு நல்ல நிறுவனம் அவர்களது மனங்களிலும், மற்றும் ஒரு மகத்தான நிறுவனம் அவர்களுடைய இதயங்களிலும் இடம்வகிக்கும் என்கிற ஒரு உள்ளுணர்வான புரிதலை அவர் வழங்கினார்.

வினோத் கே. தாசரி, பின்னர் தனது கவனத்தை தொழில்துறையிலிருந்து தனிப்பட்ட பங்களிப்புகளுக்கு மாற்றினார். வாழ்க்கையின் உச்சபட்ச நோக்கமாக இருப்பது தர்மம் என்கிற அவரது நம்பிக்கையை இதயப்பூர்வமான பணிவுடனும், ஆனந்தத்துடனும் தெரிவித்தார். வர்த்தகப்பரப்பில், பெரும் வெற்றியை அடைந்தபிறகு அவரும், அவரது மனைவியும் ஒரு இலாப நோக்கமில்லாத, அனைவரையும் இணைத்து அன்பான கவனிப்பை வளர்த்தெடுக்கும் இலக்குடன் எப்படி ஒரு மருத்துவமனையை உருவாக்கினர் என்பதைப் பகிர்ந்துகொண்டார். அவரது பரோபகார முயற்சிகளை, ஆழமான உணர்தலில் எழும் வாழ்வின் உண்மையான நோக்கம் என்று கூறியதுடன், அவரது மைய விழுமியங்களை எதிரொலிக்கும் விதமாக, “அதுதான் சரியான விஷயம், அதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்”, என்பதையும் அழுத்தமாகக் கூறினார்.

இன்சைட் லீடர்ஷிப் இன்டென்சிவ் நிகழ்வின் மூன்றாம் நாள், முதன்மை பங்கேற்பாளர்களுக்கு யோகா மற்றும் தியான அமர்வுடன் தொடங்கியது. மேம்பட்ட தகவல், வர்த்தக விரிவாக்கம், தனிப்பட்ட வளர்ச்சி, மற்றும் திறன் மேம்பாடு இவைகளை சமன்படுத்துவது குறித்த நிகழ்வின் முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டும் நாளாக இது விளங்கியது.

ஒரு புத்துணர்வான வெளிப்புற அமர்வில், சத்குரு அனைத்தையும் உள்ளடக்கிய, தொழில்முனைதல் மற்றும் தலைமையிலிருந்து ஆன்மீகம் மற்றும் தலைவிதி வரை பல தலைப்புகளிலான விஷயங்களை விளக்கியதுடன், வாழ்வின் மிக ஆழமான கேள்விகள் சிலவற்றுக்கும் பதிலளித்தார்.

தனிப்பட்ட வளர்ச்சிக்கும், வியாபார முன்னேற்றத்துக்கும் நடைமுறைவாதம் மற்றும் உணர்திறனின் முக்கியத்துவத்தை அவர் அடிகோடிட்டார். தொழில்முனைவோர் எப்போதும் எதிர்காலத்தை நோக்குவதிலேயே தங்கிப்போகின்றனர், ஆயினும் ஒருவரது தற்போதைய சூழ்நிலையின் நிலையான கிரகிப்பில்தான் உண்மையான முன்னேற்றத்துக்கான இரகசியம் இருக்கிறது என்பதை அவர் வெளிப்படுத்தினார். நீண்டகால இலக்குகளில் அதிகப்படியான கவனம் செலுத்துவதற்கு மாறாக, அடுத்து வரவிருக்கும் படியில் திடமாக நிற்பதன் புரிதல், அதிக தாக்கம் உண்டாக்கும் செயல்களுக்கு வழிகோலுகிறது.

ஒரு ஆழமான ஊக்கமளிக்கும் உரையாடலில், வெங்கட் ராசா, கிராமப் புத்துணர்வு இயக்கம் மற்றும் உழவர் உற்பத்தியாளர் சங்கம் இவற்றின் திட்ட இயக்குனர், மற்றும் ஹேமா அண்ணாமலை, இணை நிறுவனர் மற்றும் துணைத் தலைவர், க்ரீன் கலர் அக்ரிடெக் பிரைவேட் லிட்., தங்களது விலைமதிப்பில்லா அனுபவங்களையும், உழவர் உற்பத்தியாளர் சங்கங்களுடன் பணிபுரிவது குறித்த ஆழ்ந்த புரிதல்களையும் பகிர்ந்துகொண்டனர்.

வெங்கட் ராசா கொண்டிருக்கும் பாரதத்தின் விவசாயப் பெருமக்களின் வாழ்க்கை மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கிய ஆழமான உறுதிப்பாடு, அவரது தாத்தாவின் வயல்களுக்கான நேசத்தில் வேரூன்றியுள்ளது. உழவர் உற்பத்தியாளர் சங்கங்களின் பாகமாக இருப்பதற்கு தங்களிடம் இருப்பது அனைத்தையும் வழங்கிய விவசாயிகளுக்கு அவர் நன்றிக்கடன்பட்டிருப்பதை வெளிப்படுத்தினார். இருப்பினும், அவர்களது பணியைச் சுற்றிலும் மட்டும் உரையாடல் மையம்கொள்ளாமல், தனிமனிதர்கள் அவர்களது ஆதரவை உழவர் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு எப்படி வழங்கமுடியும் என்பதையும் ஆராய்ந்தது.

ஹேமா மற்றும் வெங்கட் இருவருமே, அக்ரி-டெக் உடன் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். இது வர்த்தக வெற்றியை மட்டும் உறுதிப்படுத்தாமல், விவசாயிகளுக்கான மதிப்புக்கூட்டலையும் உறுதி செய்வதாக அவர்கள் ஆலோசனை தெரிவித்தனர். விவசாய செயல்முறைக்கு தரமான உள்ளீடு வழங்குவதனால், உழவர்களின் மேம்பாட்டுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் ஆதரவாளர்கள் பங்களிக்கமுடியும். விவசாயிகளின் பிழைப்பு மட்டுமல்லாமல் அவர்களின் வளமும் உறுதிசெய்யப்படுவதே நோக்கமாக உள்ளது. இதுதான் உழவர் உற்பத்தியாளர் சங்கங்களுடனான அவர்களின் ஓய்வறியா பணியின் இதயத்தில் நிற்கும் தொலைநோக்காக உள்ளது.

இன்சைட் 2023 நிகழ்வின் இறுதியில், அறிதலின் செழுமை, வெளிப்படையான ஆழ்ந்த பார்வைகள், நகைச்சுவை மற்றும் ஊக்கமூட்டும் தகவல்களை அள்ளித்தந்த பெருமைமிக்க விருந்தினர்களுக்கு, பங்கேற்பாளர்கள் தங்களது மட்டில்லா பாராட்டினைத் தெரிவித்தனர். ராஜீவ் சந்திரசேகர், Dr. கிருஷ்ணா எல்லா, பவிஷ் அகர்வால், அபிஷேக் கங்குலி, வினோத் தாசரி, மிதுன்சாசேதி, மற்றும் நிச்சயமாக சத்குரு அவர்கள், ஆகியோர் இந்தப் பாராட்டுக்கு உரியவர்களாக இருக்கின்றனர்.