
சத்குரு: ஒரு புனித யாத்திரை என்பது, புனிதமான அல்லது சக்திவாய்ந்த இடங்களுக்குப் பயணிப்பவர்களுக்கானது மட்டுமல்ல. வாழ்க்கையே ஒரு யாத்திரைதான். நீங்கள் அதனை ஒரு யாத்திரையாக ஆக்கிக்கொள்ளலாம் அல்லது ஒரு உல்லாசப்பயணமாக, ஒரு சாகசமாக ஆக்கலாம் அல்லது ஒரு சலிப்புமிக்க ஆக்கிரமிப்பு நிலமாக இருக்கலாம். அது நாம் தேர்ந்தெடுக்கும் ஒன்று. எப்படியிருந்தாலும், இந்த பூமி மீது உட்கார்ந்துகொண்டு, நாம் அனைவரும் பயணித்துக்கொண்டுதான் இருக்கிறோம். மேலும் நாம் விலகிச் சென்றுகொண்டிருக்கிறோம்; நாம் அழியக்கூடிய மனிதர்களாக இருக்கிறோம்.
ஒரு இயற்பியல் நிலைப்பாட்டிலிருந்துகூட, நாம் எப்போதும் நகர்ந்துகொண்டுதான் உள்ளோம். தற்போது பூமியானது மணிக்கு 1600 கிலோமீட்டர் வேகத்தில் அண்டவெளியின் வழியே மிகுந்த விசையுடன் பாய்ந்துகொண்டிருக்கிறது, ஆனால் நாம் அதை உணர்வதுகூட இல்லை. நாம் நம்முடைய தாயின் கருவறையிலிருந்து வெளிப்பட்டபிறகு, பூமி என்கிற ஒரு மிகப்பெரும் கருவறையின் உறையால் மூடப்பட்டிருக்கிறோம். சிலர் அதைப் புறந்தள்ள முயற்சிக்கலாம் அல்லது விளக்கமளிப்பதன் மூலம் அதை அலட்சியப்படுத்தலாம். ஆனால் நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு, ஆர்கான், ஹைட்ரஜன், மற்ற வாயுக்களுடன் கூடிய பூமியின் வளிமண்டலம் ஒரு கருவறையாகத்தான் இருக்கிறது.
நீங்கள் ஒரு உயரம் அதிகமான நிலப்பரப்புக்குச் செல்லும்போது, சற்றே சிரமத்தை உணரக்கூடும். ஏனெனில் இந்த கருவறை – பூமிப்பந்து – உங்களை ஒரு குறிப்பிட்ட அழுத்தத்துடன் பிடித்துவைத்துள்ளது. அந்த அழுத்தம் அதிகரிக்கும்போதோ அல்லது குறையும்போதோ, உங்கள் உடலமைப்பின் மீது அது வித்தியாசமான தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. தாயின் கருவறையில் இருப்பதைப்போல், சரியான விதத்தில் அழுத்தம் தேவைப்படுகிறது. நீங்கள் அதை உண்மையில் உணராத அளவுக்கு அங்கே மென்மையான உதவி இருக்கிறது. அதுதான் மிக அழகான விஷயம். யாராவது உங்களை மிகவும் இறுக்கமாகப் பற்றினால், அது நல்லதல்ல. நீங்கள் கட்டுப்படுத்தப்படுவதை உணராதவிதமாக உங்களை அவர்கள் பற்றிக்கொண்டிருப்பது முக்கியமானது.
பல வழிகளிலும், அதுதான் லிங்கபைரவி தேவி போன்ற ஒரு சக்திவடிவத்தை உருவாக்குவதற்கான நோக்கம். உங்களால் உணரக்கூட இயலாத ஒருவிதத்தில் அவள் உங்களைப் பிடித்துக்கொண்டு இருக்கிறாள். அவளை அங்கீகரிக்கும் தேர்வு உங்களுக்கு இருக்கிறது, ஆனால் அவள் உங்கள் அங்கீகாரத்தைக் கோருவதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பெற்றுக்கொள்ளும் தன்மையில் இருப்பது மட்டும்தான். தினமும் உங்கள் தாய் உங்களிடம், “என்னை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி”, என்று கூறுமாறு கேட்டார்களா? இல்லை, அது உங்கள் விருப்பத்தேர்வு.
நீங்கள் எவ்வளவு நன்றியுணர்ச்சியுடன் வாழ்கிறீர்கள் என்பது உங்களைப் பற்றித்தான் அதிகம் எடுத்துரைக்கிறது, உங்களது தாயை அல்ல. நம்மில் பலரும் இதனை வெறுமனே ஒரு குடும்ப உறவாக அல்லது சமூகக் கட்டமைப்பாக மட்டும் பார்க்கிறோம், ஆனால் அது அதைக்காட்டிலும் மகத்தானது. இங்கே உங்களது இருப்பின் ஆதாரமூலமாக உங்கள் தாய் இருந்துள்ளார்.
அதைப்போலவே, நம்மைப் பிடித்துவைத்திருக்கும் மற்ற பல்வேறு பரிமாணங்கள் உள்ளன. அவை அனைத்தும் நம்மைப் பிடித்து வைத்திருக்கவில்லை என்றால், நாம் உயிருடன்கூட இருந்திருக்கமாட்டோம். ஆனால், வழக்கமாக மக்களைக் கட்டுப்படுத்தும் எல்லைகளைத் தாண்டி உயர்வதற்கு, நீங்கள் சற்று அதிகம் பிடித்துக்கொள்ளப்படுவது அவசியம். இல்லையென்றால், பிழைப்பு மட்டும்தான் நிகழும். கை கால்கள் நான்குடனும், மூளையில் நன்றாக செயல்படும் சில செல்களுடனும், நீங்கள் பிழைத்திருக்க முடியும், ஆனால் நீங்கள் செழிப்படைய மாட்டீர்கள்.
செழிப்படைவது என்றால் பங்கு வர்த்தகத்தில் பணம் ஈட்டுவது என்று பொருளல்ல – அது வெறும் பிழைப்பு. உங்களிடம் ஒரு நூறு கோடி ரூபாய் இருந்தாலும்கூட, மற்றவர்களின் நஷ்டத்தில் நீங்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். வேறு யாரோ ஒருவர் வெறுமனே பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்; அதை நான் மதிக்கிறேன்.
உங்களது தேடல்கள் பிழைப்பைத் தாண்டிச்செல்லும், உங்கள் வாழ்க்கைக்குள் லிங்கபைரவி தேவி அல்லது ஒரு புனித யாத்திரையின் பிரவேசம் நிகழ்கிறது. நீங்கள் பிழைப்பைக் கவனித்துக் கொண்டுள்ளீர்கள், மேலும் இன்னும் கூடுதலான ஏதோவொன்றை நீங்கள் நாடுகிறீர்கள். இந்த “இன்னும் கூடுதலான ஏதோவொன்று” என்பதை வரையறை செய்ய முற்படாதீர்கள், அது நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கும் அதே விஷயமாகத்தான் இருக்கமுடியும்.
நீங்கள் தேடுவது உடல்நிலையிலான, மனநிலையிலான, உணர்ச்சியளவிலான, சமூகநிலையிலான அல்லது பொருளாதாரரீதியான பிழைப்பாக இருந்தாலும், அதன் முக்கியமான அம்சம் பிழைப்புதான். நாம் அதனை அதிக சிக்கலாக்கிக் கொண்டிருக்கலாம், ஆனால் அடிப்படையில், அது வெறும் பிழைப்புதான். பிழைப்பு கடந்து வாழ்வது என்றால், நீங்கள் இங்கே அமர்ந்துகொண்டு – உங்களுக்கு யாரும் அல்லது எதுவும் தேவையில்லாத நிலையில், நன்றாக வாழ்ந்திருப்பது. ஆனால் ஒவ்வொரு உயிருக்குள்ளும், இன்னும் அதிகமாக வேண்டும் என்ற ஒரு பேராவல் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. இந்தப் பேராவல்தான் பரிணாமத்தின் வடிவில் வெளிப்பட்டுள்ளது.
நாம் யாராக இருக்கிறோமோ அந்த உயிருக்கு, இன்னும் சற்று அதிகமாகவேண்டும் என்ற இந்தப் பேராவல், உள்ளார்ந்த இயல்பாக உள்ளது. அதை நீங்கள் விழிப்புணர்வாக்கினால், அதற்கான செயல்முறையை நீங்கள் விரைவுபடுத்துவீர்கள். அது என்னவாக இருந்தாலும், இங்கிருந்து அடுத்த சாத்தியத்துக்கு நகர்வதற்கு ஒரு பத்து இலட்சம் ஆண்டுகள் எடுக்கக்கூடாது. அவ்வளவு நீண்ட காலம் நீங்கள் இங்கு இருக்கமாட்டீர்கள்.
உயிரானது எங்கு செல்வதற்கு இயற்கையாகவே பேராவல் கொண்டுள்ளதோ, அந்த செயல்முறையை நாம் விரைவுபடுத்துவதற்கு விரும்புகிறோம். அது எளிதாகவும், ஆனந்தமாகவும் நிகழும்வகையில், எல்லாத் தடைகளையும் நீக்குவதற்கு நாம் விரும்புகிறோம். மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட நிலையிலான அறிதலையும், விழிப்புணர்வையும் அடைந்துள்ளோம்; இந்த பூமியில் நாம் பரிமாணத்தின் உச்சத்தை எட்டியுள்ளோம். ஆதலால், இங்கிருந்து, நமது பரிணாம வளர்ச்சி என்பது முழுமையான விழிப்புணர்வுதான்.
இந்த செயல்முறை வலி மிகுந்ததாக இருக்கவேண்டியது இல்லை. நீங்கள் விருப்பத்துடன் இருந்தால், உங்களுக்குள் எது நிகழவேண்டும் என்று நீங்கள் விரும்பினாலும், அது சிரமமில்லாமல் நிகழும். நீங்கள் விருப்பமில்லாமல் இருந்தால், அதே விஷயம் வலி மிகுந்ததாக இருக்கிறது; இது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்துக்கும் பொருந்துகிறது. ஒரு புனித யாத்திரையிலும், வாழ்க்கையிலும் உங்களுக்கு இருக்கும் தேர்ந்தெடுத்தல் அனைத்துமே இதுமட்டும்தான்: நீங்கள் அதை பரவசத்துடனோ அல்லது வலியுடனோ நிகழச் செய்யலாம்.