சத்குரு எக்ஸ்குளூசிவ்

மரணத்துக்குப் பிறகு என்ன நிகழ்கிறது? வெவ்வேறு கலாச்சாரங்களிலும் நிகழும் இறுதிப் பயணம்

இது மரணம் கடந்த உயிரின் ஒரு ஆர்வமூட்டும் தேடல் பயணம். அமெரிக்க கிரேக்க, ரோமானிய, ஜப்பானிய, மற்றும் யோகக் கலாச்சார பூர்வக்குடிகளின் பல்வேறு புராணங்களைச் சார்ந்து, சத்குரு விண்ணுலக நதிகளின் உருவகங்களை ஆய்வுசெய்து, மனித இருத்தலியல் அச்சுறுத்தலின் ஆழத்தை மதிப்பீடு செய்து, முக்திக்கான உச்சபட்ச நாட்டத்தை வெளிப்படுத்துகிறார். வாழ்வுக்குப் பிறகான வாழ்வுக்குள் ஆழமாக ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு ஆயத்தமாகுங்கள்.

சத்குரு: சில குறிப்பிட்ட அமெரிக்க பூர்வக்குடி கலாச்சாரங்களில், இறந்தவர்களின் ஆன்மாக்கள் வெள்ளை நதியாகிய பால்வெளியின் வழியில் ஒரு பயணம் மேற்கொள்வதாக அவர்கள் நம்புகின்றனர். பிற்காலத்தில் ‘மூளையை எடுப்பவர்’ என்று அழைக்கப்பட்ட ஒரு உயிரால் காக்கப்பட்ட நதியில், ஒரு நீண்ட மரத்துண்டு மீது கடந்து செல்வதுதான் இதற்கான ஒரே பாதையாக உள்ளது. சூட்சும உடல் நகர்வதற்கு முயற்சிக்கும்பொழுது தோன்றும் இந்த நதியின் உருவகம் பூமியின் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இருக்கிறது.

ஒரு ஆத்மா அல்லது இறந்துவிட்டவர் பால்வெளியைக் கடப்பதற்கு முயற்சிக்கும்பொழுது, ஒரு பெண் தெய்வமானது நாய் ஒன்றின் குரைப்பொலியினால் எச்சரிக்கப்பட்ட பிறகு, அவள் ஆன்மாவைத் தேடிக்கொண்டு செல்வதாக அவர்கள் கூறுகின்றனர். இதைச் செய்து முடிப்பதற்கு, அவள் ஒரு கைத்தடியைக்கொண்டு தலையிலுள்ள ஒரு துவாரத்தைத் தட்டக்கூடும். ஏற்கனவே தலையில் உள்ள ஒரு துவாரம் பலவகையிலும் பிராணமய கோஷத்தைப் பிணைக்கும் முடிச்சாக செயல்படுகிறது. இந்த திருவுருவம் தலையில் தட்டுவது முக்திக்காகத்தானே தவிர, தீங்கு ஏற்படுத்த அல்ல. இருப்பினும், பலரும் விடுதலை குறித்து அஞ்சுவது ஏனென்றால், அது இல்லாமல் போவதற்கு இணையானது.

இருத்தல் இல்லாமைதான் விடுதலைக்கான ஒரே வழியாக உள்ளது, ஏனென்றால் இருத்தல்தான் எல்லா பிணைப்புக்கும் ஆதாரமாக உள்ளது. பரு உடலில் இருந்தாலும் அல்லது சூட்சும உடலில் இருந்தாலும் அது கடினமான ஓடாகவும், பிணைப்பின் வடிவமாகவும் உள்ளது. ஆதலால் இருத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் விடுதலை. இது மக்களிடத்தில் அச்சத்தைத் தூண்டுகிறது, இந்தக் காரணத்தினால்தான் அந்தக் குறிப்பிட்ட திருவுருவத்தினால் அவர்கள் அச்சத்துக்கு ஆளாகிறார்கள். அவர்களை அவள் விடுவிப்பதற்கு முனையும்போதிலும், மக்கள் அஞ்சும்படியாக விடுதலை என்பது, நிரந்தரமான அழித்தலாகவும் பார்க்கப்படுகிறது.

.ஒருவர் இதன் வழியே பயணித்து, இந்த நதியை எப்படிக் கடக்கமுடியும்? கலாச்சாரரீதியாக, ஒரு நதி மற்றும் ஒரு நாய் என்கிற இந்தக் கருத்தாக்கம், யோகக் கலாச்சாரம் உள்ளிட்ட எல்லாக் கலாச்சாரங்களிலும் பரவலாக உள்ளது. நான் எனது சொந்த அனுபவத்திலிருந்து பேசியபிறகு பல்வேறு கலாச்சாரங்களை விவாதிக்கமாட்டேன்.

என் சொந்த அனுபவத்தில், உடலை நீங்கும்பொழுது, நீங்கள் இருக்கும் பரிணாம நிலையைப்பொறுத்தும், உங்கள் வெளிப்புற ஓடு எவ்வளவு மெல்லியதாக அல்லது அடர்த்தியாக இருக்கிறது என்பதற்கு ஏற்பவும் விஷயங்கள் நிகழும். உங்கள் ஓடு அல்லது உங்களது குமிழி மிகவும் அடர்த்தியாக இருந்தால், அது உடையமுடியாமல், நதியிலிருந்து மீண்டும் திரும்பிவிடும். நதி என்பது என்ன? இந்த புராணம் சார்ந்த நதி என்பது, வாழ்வும் இல்லாத மரணமும் இல்லாத முற்றிலும் வித்தியாசமான ஒரு சக்தியாக உள்ளது. அதனை விளக்குவதற்கு போதுமான வார்த்தை இல்லாமையால், அது உங்களைப் பாதுகாத்து, கரைத்திடும் ஒருவிதமான சக்தி என்று நாம் கூறலாம்.

இந்த சக்தி ஓட்டம் ஒரு உருவக வெளிப்பாடாக இருக்கிறது, அது ஒரு பருப்பொருளான நதியல்ல. யோகப் பாரம்பரியத்தில் இது வைதாரணி என்று அழைக்கப்படுகிறது. உடலை நீங்கியபிறகு, ஒவ்வொரு உயிரும் இயற்கையாகவே இந்த நதியை நோக்கி நகர்கிறது. சில உயிர்கள் திரும்பிவிடும், சில உயிர்கள் அதில் நனையும், சில உயிர்கள் அதை எளிதில் கடந்துவிடும், மற்றும் சில அங்கேயே கரைந்துவிடுகின்றன. இது பல்வேறு அம்சங்களைச் சார்ந்திருக்கிறது. அதைப்பற்றிய விளக்கங்களுக்குள் நான் செல்லமாட்டேன். ஏனென்றால் எல்லா கலாச்சாரங்களும் அதை எப்படி ஒரேவிதமாக நோக்கின என்பதை நாம் காண விரும்புகிறோம்.

புராணங்களில் விவரிக்கப்படும் இந்த நதி, உயிராகவும் இல்லாத மரணமாகவும் இல்லாத முற்றிலும் மாறுபட்ட ஒரு சக்தியின் ஓடை.

ஒவ்வொரு கலாச்சாரத்திலும், அதனைஅனுபவித்துணர்ந்த தனிமனிதர்கள் இருந்தனர், மற்றும்அந்த அனுபவம் குறித்த விளக்கங்கள் பல்வேறு வழிகளில் கட்டமைக்கப்பட்டன. சிலஅமெரிக்க பாரம்பரியங்களில், நீங்கள் நிரந்தரமாக அழிக்கப்படும் விதத்தில்அல்லது விடுவிக்கப்படும் விதத்தில், ஒரு பெண் தெய்வமானது உங்கள் தலையில் ஒரு துவாரத்தைஉருவாக்குவதற்கு முயற்சிப்பதாக இருக்கிறது.

ஜப்பானிய புராணக்கதையில், புதிதாகஇறந்த ஆன்மாக்கள் ஸான்சு நதி அல்லது மூன்று குறுக்குவெட்டுகளின் நதியைக்கடப்பதற்கு முயற்சிக்கின்றன. வாழ்க்கையில் நல்ல விஷயங்களைச் செய்த ஆன்மாக்களுக்கு அங்கேஒரு பாலம் இருப்பதாக புராணம் கூறுகிறது – அவர்கள் நதியைக் கடப்பதற்கு நடந்துசெல்ல முடியும். ஓரளவுக்குநல்லவர்களாக இருந்தவர்களுக்கு அங்கே ஒரு படகு இருக்கிறது – அவர்கள்படகில் செல்லலாம் அல்லது நதியின் ஆழமற்ற இடங்களில் சற்று சிரமத்துடன் நடந்துசெல்லமுடியும்.

மோசமாக வாழ்ந்திருந்தமக்கள் ஆடைகள் அகற்றப்பட்டு, சர்ப்பம் நெளியும் ஆழமான நீரில் நீந்திச் சென்று கடப்பதற்குகட்டாயப்படுத்தப்பட்டனர். அந்த உயிரானது நதியைக் கடந்துவிட்டால், ஒருஅரூபியானது, ஆன்மாவின்அனைத்தையும் நீக்கிவிடுகிறது. ஆடைகளின் அல்லது சேகரிக்கப்பட்ட குவியல்களின் சுமை என்பதுஅவர்கள் செய்திருந்த மோசமான செயல்களின் அளவை பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது. உண்மையில்இது நல்லது, கெட்டதுகுறித்த கேள்வி அல்ல, அது கர்மவினைக் குவியலின் அளவு எனப்படுகிறது.

தொழில்நுட்பரீதியாககூறவேண்டுமென்றால், கர்ம உடலின் வலிமை அல்லது அளவுதான் இதனைத் தீர்மானிப்பதாகஉள்ளது.கிரேக்க மற்றும் ரோமானிய புராணக்கதையில், புதிதாக இறப்பெய்திய ஆன்மாக்கள் ஸ்டைக்ஸ் நதியைக்கடப்பதற்கு படகில் அழைத்துச் செல்லப்படுவதாகவும், இந்தநதியானது வாழ்ந்துகொண்டிருப்போரின் உலகையும், இறந்தவர்களின்உலகையும் பிரிப்பதாகக் கூறப்படுகிறது.

எகிப்து கலாச்சாரத்திலும்இதேபோன்ற நம்பிக்கைகளைக் காணமுடிகிறது. இந்தக் கருத்தாக்கங்கள் எல்லாக் கலாச்சாரங்களிலும்இருக்கும் காரணத்தால், அப்படிப்பட்ட அனுபவங்கள் வாய்த்திருந்த யாரோ ஒருவர்எப்போதும் அங்கு இருப்பார். இந்தத்தனிமனிதர்கள் அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்பொழுது, எப்போதும்மற்றவர்கள் எளிமையான தீர்மானங்களைச் செய்துகொண்டு, அவர்களுடையசொந்த பொருள்விளக்கங்களை உருவாக்குகின்றனர்.

இதில் முக்கியமான விஷயம்என்னவென்றால், நீங்கள்ஒரு தட்டுதலுக்கு ஆளானால், உங்களால் விடுதலை பெறமுடியும் என்பதை கலாச்சாரம் தெளிவாகஅறிந்திருந்தது. விடுதலை, நிர்வாணா, அல்லது முக்தியைப் போன்றே அது நிரந்தரமான அழித்தலாக விவரிக்கப்படுகிறது.உங்களுக்கு தட்டுதல் கிடைத்தால், நீங்கள் விடுதலை அடைகிறீர்கள், நீங்கள்நிர்வாணம் எய்துகிறீர்கள். நிர்வாணா என்றால் உங்களது இருத்தல் முடிவடைகிறது. முக்திஎன்றால், இருத்தலின்பிடிப்புகளிலிருந்தே நீங்கள் முழுமையாக விடுபடுகிறீர்கள்.

நிர்வாணா என்றால் உங்களது இருத்தல் முடிவடைகிறது. முக்திஎன்றால், இருத்தலின்பிடிப்புகளிலிருந்தே நீங்கள் முழுமையாக விடுபடுகிறீர்கள்.

பல அமெரிக்க பூர்வக்குடிகளின்மயானங்களில், இறந்தஉடல்கள் மரங்களில் அல்லது சாரக்கட்டுகளில் வைக்கப்பட்டன. இந்தஇடங்களில் யாரும் நடப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. உறுதியாக, சிலகுறிப்பிட்ட உயிர்களை நேர்மறைச் செயல்களுக்குப் பயன்படுத்துவதற்காக, அவற்றைஅவர்கள் பராமரிக்கின்றனர். பல்வேறு பலியிடல்களுக்கும், ஆரோக்கியம், வளம்மற்றும் ஆன்மீக நல்வாழ்வு போன்றவைகளை ஊக்குவிப்பதற்காகவும் வெவ்வேறு விதமானபணிகளுக்கு இந்த சக்திகள் பயன்படுத்தப்பட முடியும்.

அத்தகைய விஷயங்கள்மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டதில் காசி ஒரு இடமாக இருந்தது, ஆனால்அங்குகூட, ஒவ்வொன்றுக்கும்அரசாங்க அனுமதி தேவைப்பட்டது. பௌதிக உடல் தாண்டிய சூட்சுமமான இந்த எல்லா செயல்முறைகளும், கலைகளும், அல்லதுஅறிவியல்களும், பருப்பொருள்முக்கியமில்லாத எந்த ஒரு விஷயமும், ஒரு அறிவியலாகக் கருதப்படாதது துரதிருஷ்டவசமானது.

ஏதோ ஒரு விஷயம் அறிவியல்என்று கருதப்பட வேண்டுமென்றால், அது Aகூட்டல் B என்பதுC ஆகஇருக்கவேண்டும் என்பதைப்போன்ற ஒரு இடத்திற்கு நாம் உலகத்தைக் கொண்டுவந்துநிறுத்தியுள்ளோம். A மற்றும் Bயை கூட்டமுடியாதென்றால், அல்லது A மற்றும் B யின் கூட்டுத்தொகை ஒரு பெரிய Aஎன்றுதான் ஆகிறது என்றால், அது இன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால்அதுதான் இருத்தலின் இயற்கையாக உள்ளது என்பதுடன் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்தஅளவுக்கு உயிரின் ஆராய்ச்சி நிகழ்ந்துள்ளதைக் காண்பதற்கு அற்புதமாக உள்ளது.