நான் கடக்கும் நிலங்களிலும்
நான் சந்தித்து உறவாடும்
மனிதர்களிலும்
உயிரின் உற்சாகம், அதன்
மகிழ்ச்சியிலும் அன்பிலும், அசிங்கத்திலும் நறுமணத்திலும்
அழகிலும் தாராளத்திலும் உள்ளது.
புனிதமான மண்ணிற்கு,
அதன் பலவித உயிர்களுக்கும் சாத்தியங்களுக்கும்
பந்தங்களின் இனிமைக்கும்,
கட்டிப்போடும் பிணைப்புகளுக்கும் தலைவணங்குகிறேன்.
நீங்களும் நானும் இதற்குமுன் வந்துபோன
கோடானுகோடி மனிதர்களுக்கும்
இன்னும் இருக்க வேண்டியவர்களுக்கும்
இந்த தொடர்கதை
செழிக்க - மண்தான்
ஒரே மூலம்.