நடப்புகள்

காட்டெருமை

‘மண்காக்கும் இலக்கை அடைய சீறிப்பாயும்
காட்டெருமை நான்’ என அவர் சொல்கிறார்
நானும் அத்தகைய காட்டெருமைதான்,
அவரை நோக்கி சீரிப்பாய்கிறேன்.

அவரோ, “இந்தப்பக்கமல்ல, அந்தப்பக்கம்!” என்கிறார்

எனக்குத் தெரிந்தமட்டில், அது எனக்குக் கேட்கவில்லை.

என் பாதையை இடைமறிக்கும் பாறைகளும் மரங்களும் இருக்கலாம்,

ஆனால் எனக்கெப்படித் தெரியும்?

என் கண்களுமல்லவா மூடியிருக்கிறது

நான் என் இதயத்தைப் பின்தொடர்கிறேன்

நான் பாய்ந்து ஒரு மலைமேல் மோதலாம்

அல்லது பள்ளத்தில் விழுந்திடலாம்

பூமியின் முகட்டிலிருந்தேகூட விழுந்திடலாம்
என்னவாகுமெனத் தெரியாது
ஆனால் ஆனந்தமான எருமையாக நான் இறப்பேன்,
ஏனென்றால் அவரை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறேன்.

-    மௌஷுமி சென் ஷர்மா, ஈஷா தன்னார்வலர், முனீச், ஜெர்மனி