ஈஷா சமையல்

சிறந்த ஆரோக்கியமான காலை உணவான ‘ஸ்மூதி’

தேவையான பொருட்கள்

½ கப் ப்ளூ பெர்ரி அல்லது மாதுளம்பழம் விதைகள் அல்லது திராட்சை (அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு பழம்)

1 வாழைப்பழம் (அல்லது 1 சிறிய சுரைக்காய் (ஜுக்கினி) தோலுரித்தது

½ கப் பாதாம் பால்

1 மேஜைக்கரண்டி பாதாம் வெண்ணெய்

1 தேக்கரண்டி சியா விதைகள்

1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்

¼ தேக்கரண்டி இலவங்கப்பொடி

செய்முறை

எல்லாப் பொருட்களையும் ஒரு மிக்சியில் போட்டு மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கிளாசில் விட்டு பரிமாறவும்.

டிப்ஸ்

ஸ்மூதியில் இயற்கையான சர்க்கரை அளவை குறைக்க வேண்டுமென்றால், வாழைப்பழத்திற்கு பதிலாக தோலுரித்த சுரைக்காயை (ஜுக்கினி) பயன்படுத்தலாம்.

ஸ்மூதி ஜில்லென்று இருக்க வேண்டுமென்றால், மிக்சியில் எல்லாப் பொருட்களையும் அரைக்கும் முன், வாழைப்பழம்/ஜுக்கினியை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

உங்களுக்கு தெரியுமா?

ப்ளூ பெர்ரி ஆக்சிஜனேற்றிகளின் ஒரு சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இது அறிவாற்றல், நினைவாற்றல் மற்றும் மனதிற்கும் ஆதரவாக இருக்கிறது.

பாதாம் வெண்ணெய், சியா விதைகள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை நல்ல ஆரோக்கியமான கொழுப்புச் சத்தைக் கொடுத்து, காலை முழுவதும், முழுமையான சக்தியுடன் உங்களை வைத்துக்கொள்ள உதவும்.

சியா விதைகளில் நார்சத்து மிகவும் அதிகமாக உள்ளதால், அது எடை குறைப்பிற்கும், இரத்த சர்க்கரை அளவு அதிகமாவதை தடுப்பதற்கும் உதவும். மேலும், இதில் ஒமேகா-3 அதிகமாக உள்ளது.