மண் காப்போம்

சத்குரு அவர்களின் மண் காப்போம் பயணம்
புக்காரெஸ்ட்டிலிருந்து அபிட்ஜான் வரை

#மண் காப்பதற்காக, சத்குரு அவர்கள் தனி ஒருவராகமோட்டார் சைக்கிளில் ஐரோப்பாவிலிருந்து, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு தேசங்களுக்குப்பயணித்த முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பு

புக்காரெஸ்ட், ருமேனியா

தலைமை நிர்வாக அதிகாரிகள் கிளப்பில் (CEO Club) சத்குரு உரை நிகழ்த்துகிறார் (20 ஏப்ரல்)

ஆர்வத்துடன் கலந்துகொண்ட தலைமை நிர்வாக அதிகாரிகளின் குழுவில்  உரையாற்றிய சத்குரு அவர்கள், உலகத்தில் ஊட்டமிழந்துவிட்ட மண்ணை மீட்க வேண்டிய கடமை மற்றும் பொறுப்பு குறித்துப் பேசினார். மேலும் அவர், ஒருவரது மனதை எப்படி நிர்வகிப்பது மற்றும் நம்மைச் சுற்றிலும் இருக்கும் இரைச்சலில் இருந்து எப்படி பாதிப்படையாமல் இருப்பது என்பது குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் சத்குரு அவர்களின் உரை (21 ஏப்ரல்)

ராகுல் ஸ்ரீவஸ்தவா, ருமேனியாவிற்கான இந்தியத் தூதர், மண் காப்போம் இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்த ஒரு தெளிவான சக்திவாய்ந்த உரையுடன் நிகழ்வைத் துவக்கிவைத்தார். அதன் பிறகு மேடையேறிய சத்குரு அவர்கள் ஆன்மீகம், சூழலியல் ஆகிய இரண்டைப் பற்றியும் பேசியபோது, பார்வையாளர்கள் தங்களை மறந்த பரவசத்துடன் செவிமடுத்தனர்.

ருமேனியா அரசாங்கம் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவளிக்கிறது (21 ஏப்ரல்)

ருமேனியாவின் வேளாண் அமைச்சர் ஆட்ரியன்-அயோனுட் செஸ்னோயுடன் மற்றும் வேறொருநிகழ்வில் ருமேனியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளருடன் மண் காப்போம் இயக்கம் பற்றி சத்குரு பயனுள்ள கலந்துரையாடல்களை  மேற்கொண்டார்.

ருமேனிய கல்வி அமைச்சர் சத்குருவை சந்திக்கிறார்
(22 ஏப்ரல்)

திரு. சோரின் மிஹை சிம்பியனு, ருமேனியாவின் கல்வி அமைச்சர் அவர்களும், சத்குரு அவர்களும் மேற்கொண்ட உரையாடலில், கல்வியில் சூழலியலின் முக்கியத்துவம் மற்றும் மண் அழிவின் நெருக்கடியை உலக மக்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை விவாதித்தனர்.

இஸ்தான்புல், துருக்கி

ஹாலிக் காங்கிரஸ் மையத்தில் ஒரு பொது நிகழ்வு
(23 ஏப்ரல்)

மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த அரங்கில், பெரும்பாலான நிலப்பரப்புகள் உழப்பட்டதால் அல்லது கட்டாந்தரையாக்கப்பட்டதன் விளைவாக பூமியில் நடைபெறும் ஒளிச்சேர்க்கை (ஃபோட்டோ சிந்தஸிஸ்) அபாயகரமான அளவுக்கு குறைந்துவிட்டதைக் குறித்து சத்குரு அவர்கள் பேசினார்.

ஒரு சூஃபி சுழல் நடன நிகழ்வில் சத்குரு கலந்து கொள்கிறார்

டபலீஸி, ஜார்ஜியா

டபலீஸியில் பெருங்கூட்டத்தை ஈர்த்த ஒரு பொது நிகழ்ச்சி (26 ஏப்ரல்)

ஜார்ஜியாவில், இந்தியத் தூதரகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நிகழ்வில், ஜார்ஜியாவுக்கும், ஆர்மேனியாவுக்குமான இந்தியத் தூதர் திரு. கே.டி.தேவால், சத்குரு அவர்களை சந்தித்தார்.

நிகழ்ச்சி நடைபெற்ற ஒட்டுமொத்த இடத்தையும் துடித்தெழச் செய்த அதியற்புதமான பாரம்பரிய பண்பாட்டு நடனத்துக்குப் பிறகு, சத்குரு அவர்கள், அவரை காண்பதற்காக ஜார்ஜியாவில் இருந்து வந்திருந்த மண் காப்போம் இயக்கத்தின் உற்சாகம் மிக்க ஆதரவாளர்கள் மற்றும் ஆர்வமான பொதுமக்கள் நிறைந்திருந்த அரங்கத்தில் உரையாற்றினார். பல வேறுபட்ட தலைப்புகளாகிய யோகா, மகிழ்ச்சி, பஞ்சபூதங்கள் மற்றும் சில பத்தாண்டு கால முயற்சிக்குப் பின்னர் மண் காப்போம் இயக்கம் எப்படி உருவானது ஆகியவற்றைக் குறித்துப் பேசினார்.

சத்குருவுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பு (27 ஏப்ரல்)

பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பில், மண்ணில் கரிம வளத்தை அதிகரிப்பதற்கு, விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக மூன்று நிலைகளில் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து சத்குரு அவர்கள் பேசினார்.

  1. விவசாயிகளுக்கு அவர்களது மண்ணில் இருக்கும் கரிம வளத்தின் அடிப்படையில் ஊக்கத்தொகைகளை அரசாங்கங்கள் உருவாக்கவேண்டும்.
  2. விவசாயிகளை அவர்களது மண்ணில் கரிம வளத்தை அதிகமாக்குவதை ஊக்கப்படுத்த, கார்பன் வரவினங்களுக்கான தொகையை தொழிற்சாலைகள் வழங்கலாம்.
  3. உற்பத்திப் பொருட்களின் முத்திரையில் மண்ணின் கரிமச்சத்தினை குறிப்பிடப்பட்டு, உயர்ந்த கரிமச்சத்திற்கு அதிக விலை முடிவு செய்யப்பட வேண்டும்.

ஜார்ஜிய மண் காப்போம் தன்னார்வலர்களை சத்குரு சந்திக்கிறார் (27 ஏப்ரல்)

டபலீஸியில் தன்னார்வலர்களுடன் சத்குரு அவர்கள் உரை நிகழ்த்தினார். மண் காப்போம் எவருக்கும் எதிரான ஒரு கிளர்ச்சியோ அல்லது இயக்கமோ அல்ல, நமது வாழ்வுக்கும், நம்மைச் சுற்றியுள்ள உயிர்களுக்கும், நமக்குப் பிறகு வரவிருக்கும் உயிர்களுக்கும் நமது அன்பையும், பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துவதற்கான ஒன்று என்பதை வலியுறுத்தினார்.

யோகாவுக்கும் ஜார்ஜியாவுக்கும் உள்ள தொடர்பை சத்குரு வெளிப்படுத்தினார்

பாக்கூ, அசர்பைஜான்

மண் காப்போம் பயணத்தில் ஈஷா சம்ஸ்கிருதி இணைந்துகொள்கிறது (29 ஏப்ரல்)

அசர்பைஜானின் தலைநகர் பாக்கூ, மண் காப்போம் பயணத்தின் அடுத்த நிறுத்தமாக இருந்தது. இங்கு ஈஷா சம்ஸ்கிருதி, மண் காப்போம் பயணத்தில் இணைந்தது.

பாக்கூ நகரில் நடைபெற்ற மண் காப்போம் இயக்கத்தின் ஒரு பொது நிகழ்வில், ஈஷா சம்ஸ்கிருதியின் நிகழ்ச்சி வியப்பில் ஆழ்த்துகிறது (29 ஏப்ரல்)

ஈஷா சம்ஸ்கிருதி நிகழ்த்திய வசீகரிக்கும் பாரம்பரிய நடனமும், களரிப்பயட்டும், ஹெய்டர் அலியேவ் மையத்தில் ஒரு அற்புதமான மாலை நேரத்துக்கு வண்ணம் சேர்த்தது. அசர்பைஜானுக்கான இந்தியத்தூதர், B. வான்லல்வாவ்னா, தனது முகவுரையில் அசர்பைஜானில் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், இயக்கத்தில் இணைவதற்கும் அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து, நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான தூரல் அஸடோவ், சத்குரு அவர்களை மேடைக்கு வருமாறு அழைத்தார்.

சத்குரு அவர்கள் தன் உரையின்போது, நமது விவசாய நிலங்களில் கரிமச்சத்தினைப் பாதுகாப்பதன் வாயிலாக, தீவிரமான செயல் நிகழ்வதற்கு ஏதுவாக அரசின் கொள்கையில் அதற்கான உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

மண் காப்போம் இயக்கத்துடன், அசர்பைஜான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது

தனது மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் தேசத்தின் உறுதியினை வலிமைப்படுத்தும் விதமாக, அசர்பைஜானுக்கும், மண் காப்போம் இயக்கத்துக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. லெய்லா தகியெவா, அசர்பைஜானின் சர்வதேச கூட்டுறவுத்துறையின் தலைவர், தேசத்திற்கு சத்குரு அவர்கள் வருகை தந்தமைக்கு புகழாரம் சூட்டியதுடன், அவருடன் சர்வன் ஜஃபரோவ், துணை விவசாய அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஜோர்டான்

இந்தப் பட்டியலில் அடுத்ததாக ஜோர்டானின் ஹஷெமிட் இராஜ்ஜியம் இணைந்தது. சத்குரு, அக்வோபா சென்றடைந்ததும், தூதர் ஹெச்.இ.அன்வர் ஹலீம், சத்குரு அவர்களை அன்புடன் வரவேற்றார். அவர் மண் காப்போம் இயக்கத்துக்கும், அனைவரின் நல்வாழ்வுக்காக செயல்படும் சத்குரு அவர்களுக்கும் தன் ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

அம்மானில் இருக்கும் இந்தியத் தூதரகத்தில் சத்குரு ஒரு உரை வழங்குகிறார் (3 மே)

இந்திய வம்சாவழியினர் மற்றும் முக்கியஸ்தர்களிடம் சத்குரு அவர்கள் உரை நிகழ்த்தினார். இந்தியாவின் தனித்துவம் குறித்துப் பேசிய அவர், பெரும்பாலான தேசங்கள் ஒரே இனம், மதம், மொழி என்ற அடித்தளத்தில் உருவாகியிருக்கும் நிலையில், வாழ்வின் ஒரு ஆழமான புரிதலின் அடிப்படையில் பாரதம் நிறுவப்பட்டதை விளக்கினார்.

ஐயத் அபுமோக்லி, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் Faith4Earth என்ற முன்னெடுப்பின் நிறுவனர் மற்றும் இயக்குனர், சத்குருவை சந்திக்கிறார் (4 மே)

மாட்சிமை பொருந்திய இளவரசர் எல் ஹஸன் பின் தலல், சத்குரு அவர்களை சந்தித்து மண் காப்போம் இயக்கம் பற்றியும் ஜோர்டான் எப்படி அதன் ஒரு பகுதியாக இருக்கமுடியும் என்பதையும் கலந்தாலோசித்தார்.

பாலஸ்தீனம்

பயணப்பாதையின் பாலஸ்தீன நிறுத்தத்தில், சத்குரு அவர்கள் புவிசார் அரசியல் பிரச்சனைகள் மற்றும் சச்சரவுகள் காரணமாக கடந்த சில பத்தாண்டுகளில் வீழ்ச்சியடைந்த விவசாயம் குறித்து பேசினார்.

டெல் அவிவ், இஸ்ரேல் (7 மே)

சத்குருவுடன் பொது நிகழ்ச்சி (7 மே)

கடற்கரையோர டெல் அவிவ் நகரத்தில், சார்லஸ் ப்ரோன்மேன் ஆடிட்டோரியத்தில் அரங்கு நிறைந்த 4500 பார்வையாளர்களை சத்குரு அவர்கள் சந்தித்து உரை நிகழ்த்தினார். இஸ்ரேலின் வேளாண் முறைகள் மற்றும் புதுமையான செயல்முறைகளில் இருந்து உலகம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது என்பதை குறிப்பிட்டுப் பேசினார். உலகின் மற்ற பகுதிகள் வளமான மண்ணை, மணலாக்கிக் கொண்டிருக்கையில், இஸ்ரேல் மணலை, வளமான மண்ணாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்றார். மேலும், அவர் தொடர்ந்து, வேளாண் தொழில்நுட்பத்தில் புதுமைகளை வழி நடத்தியவாறு, தனக்கான 99% உணவை சுயமாக உற்பத்தி செய்வதையும் பாராட்டிப் பேசினார். Dr.ரான் மல்கா, இஸ்ரேலின் பொருளாதார மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் பொது இயக்குனர், மற்றும் திரு. ராஜீவ் போட்வாடே, தூதுக்குழு துணைத்தலைவர், இஸ்ரேலின் இந்தியத்தூதரகம், இருவரும் தங்களின் ஆர்வமூட்டும் உரையினால் நிகழ்வைச் சிறப்பித்தனர்.

அபிட்ஜான், ஐவரி கோஸ்ட்

UNCCD COP15 மாநாட்டில் சத்குருவின் உரை (10 மே)