நடப்புகள்

மண் காப்போம் இயக்கத்துக்காக சத்குருவுடன் பயணிப்பது எப்படி இருக்கிறது

சத்குரு தன்னந்தனியாக மோட்டார் சைக்கிளில், 100 நாட்கள், 30,000 கிமீ பயணத்தில் இருக்கிறார். மண் அழிவைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், உலக மக்களின் ஆதரவைத் திரட்டுவதுடன், மண்ணை மீட்டெடுப்பதற்கான அரசாங்கக் கொள்கை சீர்திருத்தங்களை முன்னெடுப்பதும் இந்தப் பயணத்தின் நோக்கங்களாக இருக்கிறது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் அரசுப் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் அந்த மக்களின் இதயங்கள் மற்றும் மனங்களிலும், மண் காப்போம் இயக்கம் ஏற்கனவே வேர் பிடித்துவிட்டது. சத்குருவுடன் பயணம் செய்யும் தன்னார்வத் தொண்டர்களிடம் இருந்து நேரடியாக, மண் காப்போம் இயக்கத்தின் பின்புலக்காட்சிகளின் அரிதான பார்வைகள் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்படுகிறது.

சத்குரு செல்லுமிடம் எங்கும் உற்சாகமூட்டும் வரவேற்பு

மண் ஆரோக்கியமாக இருக்கவேண்டியதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மண் காப்போம் இயக்கத்துக்கு அவர்களின் ஆதரவைத் திரட்டியவாறு, மோட்டார் சைக்கிளில் தேசங்கள் மற்றும் கண்டங்களின் குறுக்கே சத்குரு பயணிக்கும் நிலையில், உலகெங்கும் மண் காப்போம் இயக்கத்துக்கு ஆதரவான மக்களின் குரல் பிரமிக்கவைக்கும் அளவில் உரத்து ஒலித்தவாறு உள்ளது.

சத்குருவுடன், உறுதுணையாக தொடர்ந்து செல்லும் சிறு குழுவின் ஒரு பாகமாக செயல்படும் நத்தாலி, பகிர்ந்துகொள்கிறார்,” மக்களின் வரவேற்பு அற்புதமாகவும், இதயம் தொடுவதாகவும் இருந்துவருகிறது. ஒவ்வொரு கூட்டமும் பெரிதாகிக்கொண்டிருப்பதுடன், வெவ்வேறு மதங்கள், நம்பிக்கைகள், இனங்கள் மற்றும் கலாச்சாரப் பின்னணி கொண்ட மக்கள் பிரதிபலித்த விதம் மகிழ்ச்சியாக இருக்கிறது. பல தருணங்களில், மக்கள் கூட்டத்தையும், என்ன நிகழ்கிறது என்றும் பார்ப்பதிலேயே, என் கண்களில் ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சியின் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. வெறுமனே மக்கள் கூட்டத்தைப் பார்ப்பதிலேயே இதைப்போல் நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை.”

கேமரா கண்களின் வழியே: பொதுவான தளம் தென்படல்

ஜஸ்டின், கேமராமேனாகவும், பைலட் காரின் ஓட்டுனராகவும் இரட்டை பணிகளையும் கையாள்பவர், இயக்கத்திற்கு பெருகிவரும் ஏறுமுகமான ஆதரவையும், மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அதற்கு இருக்கும் பிரம்மாண்டமான தாக்கத்தையும் நேரடியாக அருகிலிருந்து காணும் வாய்ப்பைப் பெற்றவராக இருக்கிறார். “மக்களின் இந்த உணர்ச்சி பொங்கும், உற்சாகமான கணங்களைக் கைப்பற்றமுடிவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்துவருகிறது. பெரும்பாலான மக்கள் சத்குருவை முதன்முறையாக பார்க்கின்றனர். மண் காப்போம் இயக்கம் குறித்து அறிந்துகொள்ள அவர்கள் பெருத்த ஆர்வம் காண்பிக்கின்றனர்”, என்று கூறுகிறார்.

“மக்களின் முகங்களைப் பார்க்கும்போது, தேசங்கள் வெவ்வேறாக இருப்பினும், அத்தனை முகங்களிலும் ஒரே உணர்ச்சிதான் இருக்கிறது. உண்மையாகவே அவர்கள் இந்த இயக்கம் குறித்து ஆர்வத்துடன், ஏதோவொன்று செய்ய விரும்புகின்றனர். இந்த எளிய, சக்திமிக்க செய்தியால் அவர்கள் தொடப்படுகின்றனர். கேமராவுக்குப் பின் இருந்துகொண்டு, அதன் கண்கள் வழியாக இந்த உணர்ச்சி ததும்பும் முகங்களைப் பார்ப்பது பிரமிப்பூட்டும் ஒரு அனுபவமாக உள்ளது.”

ஒரு பைலட் கார் ஒட்டுனராக, ஜஸ்டினுடைய நாள் வெகு சீக்கிரமாகவே தொடங்குகிறது. அந்த நாளின் பயணத்துக்காக அனைத்தும் ஒழுங்காக இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்வதற்காக அவர் காரை பரிசோதிக்கிறார். பிறகு அவர் வரைபடத்தை சரிபார்க்கிறார், வானிலை அறிக்கையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மற்ற குழுவினருடன் அந்த நாளின் பயணப்பாதையை விவாதிக்கிறார். இதனால் ஒருவரும் வழி தவறாமல் இருப்பதும், குறித்த நேரத்திற்கு செல்வதும் உறுதிப்படுத்தப்படுகிறது.

மிக சீரியஸான விஷயங்களை எப்படி ஒரு கொண்டாட்டமான வழியில் தீர்க்கமுடிகிறது

ல லலே ல லே ல லே…… மண் காப்பதற்கான அவசியம் குறித்து சத்குரு விழிப்புணர்வு எழுப்பியவாறு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயணித்தபோது, பல்வேறு இடங்களிலும் மண் காப்போம் பாடல் எதிரொலித்துக் கொண்டுள்ளது. பயணம் நீண்டதாகவும், கடினமாகவும் இருக்கும் நிலையிலும், ஒரு நெருப்பின் வேகத்துடன், இடைவெளியற்ற அட்டவணை அமைத்துக்கொண்டு, ஒவ்வொரு நிகழ்வுக்கும், கூட்டத்துக்கும் குறித்த நேரம் தவறாமல் செல்வதில் தன்னையே முடிவில்லாமல் உந்தித்தள்ளுகிறார்.

பாதையெங்கும் பல சவால்கள் இருக்கின்றன, ஆனால் சத்குரு அத்தனை தடைகளையும் கடந்து செல்கிறார். கிரிஸ்டோபர், துணைக் குழுவினரில் ஒருவர். அவர் கூறுகிறார், “நாங்கள் ஸ்விட்சர்லாந்தில் இருந்து பாரீஸ் சென்றுகொண்டிருந்தபோது, பலத்த மழையுடன் மணிக்கு 40கிமீ வேகத்தில் சுழற்றியடித்த காற்றையும் எதிர்கொண்டோம். 15-20 மீட்டர் தூரம் மட்டுமே பார்க்கமுடிந்தது; அபாய விளக்குகளை எரிய விட்டுக்கொண்டு, மெதுவாக செல்லவேண்டியிருந்தது. மண் காப்போம் இயக்கத்துக்காக, சத்குரு எந்த அளவுக்கு தன் உயிரைப் பணயம் வைக்கிறார் என்பது திகைப்பாக இருக்கிறது. நிச்சயமாக இதனை அவர் தனக்காக செய்யவில்லை - அவர் இதை நமக்காக செய்கிறார், நமக்கு என்ன தேவைப்படுகிறதோ அதற்காக செய்கிறார், எதிர்காலத் தலைமுறைகளுக்காக செய்கிறார். அதனால்தான், இது ஒரு ஜாலியான பயணமாக இல்லையென்றாலும், அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பேரலை எழுப்பும் ஒரு சின்னஞ்சிறு குழு

மண்ணுக்கான நெருக்கடி குறித்த விழிப்புணர்வு மென்மேலும் வளர்வதற்கு இணையாக, வாழ்வின் வெவ்வேறு தரப்பிலிருந்தும் மக்கள் கரங்கள் கோர்த்து, மைய ஆற்றலில் மண் நண்பர்களாக இணைகின்றனர். சத்குருவின் 30,000 கிமீ பயணத்தில் இணைந்திருக்கும், சிறிய - ஆனால் தீவிரமான மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலர்களுடன், மண் நண்பர்களின் உற்சாகக் குரலும் விண்ணை முட்டி எதிரொலிக்கிறது. சத்குருவைப் போலவே, உணவு, உறக்கம் மற்றும் உடலின் சௌகரியங்கள் எதுவும் தன்னார்வலர்களுக்கு முதன்மையிடத்தில் இல்லை. பாதையில் எதிர்ப்படும் எந்த சவால்களுக்கும் அயராமல், அவர்களது முனைப்பும், உற்சாகமும் உச்சத்திலேயே இருக்கின்றது.

தற்போது பொறுப்பேற்றிருக்கும் மாபெரும் சாதனையுடன் ஒப்பிடும்பொழுது, உணவு, தங்கல் உள்ளிட்ட பயண நிர்வாகம் மற்றும் மண் காப்போம் நிகழ்வுகள் மற்றும் நேர்காணல்களின் ஒருங்கிணைப்பு அம்சங்களை நிர்வகிக்கும் ஒரு குழு சிறு துரும்பாகத் தோன்றுகிறது. ஆனால் அருளோடு இணைந்த இந்தக் குழுப்பணியானது, ஒரு கனவை நனவாக்குகிறது.

கே, உதவிக் குழுவினரில் ஒருவர், அவர் பகிர்கிறார், "உண்மையில் நாங்கள் ஒரு சிறு குழுவாக இருந்துகொண்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொன்றையும் செய்கிறோம் என்பதுடன், நாங்கள் எங்களையே மென்மேலும் நீட்டித்துக்கொள்கிறோம். நாங்கள் தற்போது செய்துவரும் பணிகளில் எங்களுக்கு பயிற்சி ஏதுமில்லை, ஆனால் அனைவருடனும் இணைந்து எல்லாவிதமான பணிகளையும் செய்வது எங்களை கௌரவிப்பதாக இருக்கிறது. இந்த இயக்கத்துக்கு இசைவாக விஷயங்களை நகர்த்துவதில் மிகுந்த ஒற்றுமையுடனும், அளவற்ற முனைப்புடனும் செயல்படும் இந்தளவுக்கான நல்ல இதயம் கொண்ட மக்களுடன் நான் ஒருபோதும் வேலை செய்ததில்லை. இது பல விதங்களிலும் கற்றல் அனுபவமாகவும், நேர்மறை செயல்முறையாகவும் இருக்கிறது."

சத்குரு மற்றும் அவரது குழுவினருக்கு, மக்கள் அளிக்கும் வரவேற்பு கட்டுக்கடங்காததாக இருக்கிறது. கே கூறுவதைப்போல், பெல்க்ரேட், செர்பியா போன்று அவர்கள் செல்லுமிடமெங்கும் காணும் காட்சிகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன, “சில மணி நேரங்களுக்குள், நகரமக்கள் அனைவரும் மண் காப்போம் இயக்கம் குறித்து அறிந்துகொண்டதாகத் தோன்றியது. சத்குரு சாலையில் இறங்கி நடந்துகொண்டிருக்கும்போது, மக்கள் அவரை நாடி வந்து பேசுவதுண்டு. உண்மையிலேயே இது அற்புதமாக இருக்கிறது.”

கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி ‘Bio Bubbles’

மண் காப்போம் இயக்கத்துக்கான பயணத்தில் இருக்கும் தன்னார்வலர்கள் வெவ்வேறு Bio bubbles களாகப் பிரிக்கப்பட்டுள்ளதால், யாரேனும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருந்தால், அந்த நபர் அல்லது அந்தக் குழு மற்ற குழுக்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட முடியும். இந்த Bio bubbles  குழுக்கள்தான், பயணத்தின் போக்கில் இடம்பெறும் எல்லா நிகழ்வுகள் மற்றும் உரையாடல்களை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்கின்றன.

கே பகிர்கிறார், “நாங்கள் பயணப்பாதை எங்கும், நிகழ்வுகளையும், உரையாடல்களையும் ஒருங்கிணைக்கிறோம். சத்குருவுடன் பயணம் செய்து, அவர் செயல்படுவதைக் காண்பதே ஒரு ஆனந்தமான அனுபவம்தான். இதற்கு மிக அதிகமான முன்னேற்பாடு தேவைப்படுகிறது, ஆனால் இப்படிப்பட்ட ஒரு bio bubble-ல் இருப்பதுகூட வேடிக்கையாக இருக்கிறது. எங்களது  bio bubbles  ஏற்பாடு மிக முக்கியமானது ஏனென்றால், மண் காப்போம் இயக்கத்தை வழி நடத்தும் சத்குருவுடன் நாங்கள் நெருக்கமாக உரையாடுகிறோம். நாங்கள் கடுமையான வழிகாட்டல்களை பின்பற்றுவதுடன், பொது நிகழ்வுகளுக்கு செல்லும்போதும் அல்லது ஆதரவாளர்களிடம் பேசும்போதுகூட, முகக்கவசம் அணிகிறோம்.”

மழையில் பாடிக்கொண்டும், பயணவழியில் விளையாடிக்கொண்டும் செல்லும் ஆனந்தம்

மண் காப்போம் ஆதரவாளர்களை ஒன்றிணைப்பதும், கடுமையான வானிலை மற்றும் நிலப்பரப்புகளில் வாகனத்தை ஓட்டிச் செல்வதும், இணையற்ற ஈடுபாடு கொண்ட தன்னார்வலர்களின் ஆனந்தத்தை சிறிதும் குறைக்கவில்லை.

சத்குருவைத் தொடர்ந்து செல்லும் வாகனத்தை ஓட்டும் கிரிஸ்டோபர் பகிர்ந்துகொள்கிறார், "மழை மற்றும் காற்றினூடே ஓட்டிச் செல்லும்போது, பயணம் கடுமையாகும் தருணங்களில், சத்குரு பாடுவதை எங்களால் கேட்க முடிகிறது. சவாலான கணங்களிலும் உற்சாகமடைந்து, ஆனந்தம் அனுபவிப்பது எனக்கு மிகவும் வியப்புக்குரிய, என்றென்றும் என் நினைவில் நிற்கக்கூடிய கணங்கள். சத்குரு ஒரு இடைவெளி எடுத்துக்கொள்ள முடிவெடுக்கும்பொழுது, அவருடன் எங்களால் ஃபிரிஸ்பீ கூட விளையாட முடிந்தது. நாங்கள் அனைவரும் சேர்ந்து கால்பந்தாட்டமும் விளையாடினோம். வேடிக்கையாக பேசிக்கொண்டு, ஒன்றாக விளையாடியது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.”

எந்தவித எதிர்பாராத நிகழ்வுகளின்போதும், திகைப்போ அல்லது வருத்தமோ கொள்ளாமல் சவால்களை இலகுவாகக் கையாளும் சத்குருவைத்தான் குழுவினர் தங்களுக்கான ஊக்கசக்தியாகப் பார்க்கின்றனர். “இரவில் சுமார் மூன்று மணி நேரங்கள் மட்டுமே உறங்கினாலும், அவர் எங்கிருந்து சக்தி பெறுகிறார் என்பதே எனக்குத் தெரியவில்லை,” என்று மேலும் கூறுகிறார் கிரிஸ்டோபர்.

சுழலும் சக்கரங்களின் மீது சத்சங்கம்

சத்குருவுடன் பயணம் செய்துகொண்டு, உற்சாகமான மண் காப்போம் ஆதரவாளர்கள், ஈஷா தியான அன்பர்கள் மற்றும் சத்குருவின் வழி நடப்பவர்களைச் சந்திப்பது என்பது, தன்னார்வலர்களுக்கான முன்னேற்றமளிக்கும் ஒரு அனுபவமாக உள்ளது. அது மட்டுமல்லாமல், சுய-தேடலுக்கும், சாதனா மற்றும் சத்சங்கத்துக்கும் இது ஒரு வாய்ப்பாக இருந்துள்ளது.

வெளித்தொடர்புகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பராமரிப்பு பொறுப்பில் இருக்கும் ஒரு தன்னார்வலர் கண்ணன், பகிர்கிறார், “எனக்கு ஒரு குறிப்பான பணி இருந்தது - சத்குரு பேசுவதைக் கவனிப்பது. இதைவிட அதிகமாக வேறு எதை நான் கேட்டுவிட முடியும்? நான் ஹெட்போனை எப்போதும் அணிந்துகொண்டிருந்தேன். நான் அதிகம் பேசவில்லை. எப்போதெல்லாம் சத்குரு கேட்கிறாரோ, அவருக்குத் தேவையான தகவலை நான் அளித்தேன். மற்ற நேரங்கள் ஒரு விதமான சாதனாவாக இருந்தது; நான் மௌனத்தில் இருந்தேன், சத்குருவின் குரலையும், அவரது தலைக்கவசத்தில் இருந்து காற்று புகுந்து, வெளியேறுவதையும் மட்டும் உற்றுக்கேட்டுக்கொண்டு இருந்தேன். அவரது கண்ணோட்டத்தையும், ஒரு வாகன ஓட்டியாக அவர் எப்படி உணர்கிறார் என்பதையும் என்னால் அனுபவித்து உணரமுடிந்தது. இது மிக அழகாக இருக்கிறது; அவ்வளவு மந்திரஜாலமாகவும், எனக்கு நம்பமுடியாததாகவும் இருக்கிறது. சுழலும் சக்கரங்களின் மீது ஒரு சத்சங்கம் நிகழ்வதை போல் இருக்கிறது.”

குழுவில் இருந்த மற்றவர்களுக்கும், இந்தப் பயணம் விலைமதிக்க இயலாத வளர்ச்சிப் படிப்பினைகளையும், மாற்றத்தையும் அளித்துள்ளது. கிரிஸ்டோபர் கூறுகிறார், “நீண்ட நேரங்கள் கார் ஓட்டுவதும், வழியெங்கும் பல பொது நிகழ்வுகளுமாக, சில நாட்கள் மிகவும் கடினமாக இருந்தன. சோஃபியாவிலிருந்து புக்காரெஸ்ட் செல்லும்போது, அதிக எண்ணிக்கையில் பொது நிகழ்வுகள் இருந்தன; வானிலை மிக மோசமாக இருந்தது; பல இடங்களில் பனி பொழிந்துகொண்டிருந்தது, நானும் சோர்வின் உச்சத்தில் இருந்தேன். என் பொறுமை குறைந்துகொண்டிருந்தது. எப்பொழுதும் போல், சத்குரு அதனை முதலில் உணர்ந்துவிட்டார். அவர் என்னிடம் வந்து, திறந்த நிலையில் இருக்குமாறும், அமைதியாக இருக்கும்படியும் கூறினார்.”

சத்குரு: நிகரற்ற அர்ப்பணிப்பும், உறுதியும் ஒருங்கே உருவானவர்

தேசம் விட்டு தேசம், எந்த விதமான வானிலையிலும், வண்டி ஓட்டிச்செல்லும் சத்குருவின் தளர்வில்லாத உறுதியானது, தன்னார்வலர்களுக்கும், உலக மக்களுக்கும் உந்துசக்திக்கான ஒரு ஆதாரமாகியுள்ளது. நத்தாலி கூறும்போது பல தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்களின் உணர்வை அப்படியே பிரதிபலிக்கிறார், “மோட்டார்சைக்கிள் ஓட்டிச்செல்கையில், பலத்த காற்று, மிதமிஞ்சிய வெப்பம், மழை மற்றும் பனி போன்ற இயற்கைக்கூறுகளை அவர் எதிர்கொள்கிறார்.” இருப்பினும், அவர் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களைச் சென்றடையும்பொழுது, முழுமையாக சக்தி நிரம்பியவராக, அவர் மண் நண்பர்களுடன் நடனமாடிக்கொண்டும், மண் காப்போம் பாடலைப் பாடிக்கொண்டும் மற்றும் அனைவரையும் ஊக்கப்படுத்திக்கொண்டும் இருக்கிறார்.

“நாள் முழுவதும் வாகனம் ஓட்டியபிறகும், இரவில் வீடியோ மற்றும் ஜூம் அழைப்புகளில் பங்கேற்றுக்கொண்டு, அவற்றுள் சில அழைப்புகள் இரவு முழுவதுமாக நீடித்த நிலையில், அப்போதுகூட அவர் பிஸியாக இருக்கிறார். அவரால் எத்தனை விஷயங்களை ஒரே நேரத்தில் கையாளமுடியும் என்பது நம்பமுடியாத அதிசயமாக இருக்கிறது. எங்களுக்கு மிகக் கடினமாக இருக்கும் பிரச்சனைகள் அவரிடம் கொண்டுசெல்லப்படுகின்றன, அதற்கான தீர்வுகளை எப்போதும் அவர் கூறுகிறார். அத்தனை விஷயங்களையும் ஒரே நேரத்தில் அநாயாசமாகவும், அழகாகவும், இலகுவாகவும் கையாளக்கூடிய வேறு எவரையும் நான் கண்டது கிடையாது. ஒவ்வொரு கணமும், நமது எல்லைகளையும், அடையாளங்களையும் உடைத்து, நம் சாத்தியத்தின் உச்சத்தில் நம்மைக் கொண்டு செலுத்துவதற்கு அவர் உந்துசக்தியாக இருக்கிறார். இந்தப் பயணம், என் ஆதாரசக்தியின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது,” என்று மேலும் கூறினார்.


சத்குருவின் மண் காப்போம் பயண நிகழ்வுகளை பின்தொடர
SaveSoil.org/events