நடப்புகள்

சத்குருவைத் தொடருங்கள்

கடந்த சில வாரங்களின் கண்ணோட்டம்

ஆன்லைனில், சத்குருவுடன் எரிக் சோலெம் உரையாடல்

19
ஜனவரி

ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் முன்னாள் இயக்குனராகவும் தற்போது, நீடித்த பூமிக்கான உலகளாவிய கூட்டமைப்பு, உலக வளங்கள் மையம் மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் பணிபுரிந்து வருபவர், எரிக் சோலெம். இவர் சத்குருவுடன் ஆன்லைனில் கலந்துரையாடினார். மண்ணின் வெவ்வேறு அம்சங்கள் மற்றும் மண் காப்போம் செய்தியைப் பரப்புவது என்று இருவரது உரையாடலும் ஒரு மிகப் பரந்த அளவிலான விஷயங்களைத் தொட்டுச்சென்றது. மண்ணை ஒரு இரசாயனக் குவியலாகவோ அல்லது அழுக்கான தூசி என்றோ புரிந்துகொள்வதிலிருந்து, அதனை ஒரு வாழும் உயிராகப் பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய அவசரத்தேவை குறித்து ஆலோசித்தனர்.

அழைப்புக்குப் பிறகு, எரிக் சோல்ஹெய்ம் ட்வீட் செய்தார்: “@SadhguruJV உடனான உற்சாகமிக்க அழைப்பு இப்போதுதான் முடிந்தது. உலகின் கவனத்தை மண் மீது கொண்டு வர, மார்ச் 21ம் தேதி லண்டனிலிருந்து இந்தியாவிற்கு சத்குரு தனி ஆளாக பயணத்தை தொடங்குகிறார். உயிருள்ள நம் மண்ணைப் பற்றி 30 லட்சம் மக்களைப் பேச வைப்பதே அவர் நோக்கம். பிராவோ!"

பாடகர் க்ரைம்ஸ் சத்குருவுடன் ஆன்லைனில் பேசுகிறார்

1
பிப்ரவரி

கனடா நாட்டின் பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசை அமைப்பாளராகிய க்ரைம்ஸ், சத்குருவுடன் மண் காப்போம் இயக்கம் குறித்துப் பேசினார். இயக்கத்தில் பங்கேற்கும் ஆர்வத்தில், பெரும்பாலான சூழலியல் உரையாடல்களில் இடம்பெறத் தவறும் மண் குறித்த இந்த அறிவை எப்படி பரப்புவது என்று க்ரைம்ஸ் பல கேள்விகள் கேட்டார். உயிரற்ற பொருட்களை உள்வாங்கி, அதிலிருந்து உயிரோட்டமானதை வெளியிடும் ஒரே இடமாக மண் இருப்பது எப்படி என்பதைப் பற்றி சத்குரு ஆழமாகப் பேசினார். மண்ணுக்குத் தேவையான கரிமச்சத்து, உயிருள்ள பொருட்களிலிருந்து மட்டுமே கிடைக்குமேயன்றி, புதிய செயற்கைப் பொருட்களிலிருந்து அல்ல என்பதை அழுத்தமாகக் கூறினார்.

ஈஷா யோக மையத்துக்கு
ஜூஹி சாவ்லாவின் வருகை

1
பிப்ரவரி

இந்தி நடிகை ஜூஹிசாவ்லா, ஈஷா யோக மையத்தில் பசுமைப் பண்ணைகளை நிர்வகிக்கும் ஈஷா தன்னார்வலர்களைச் சந்தித்தார். சத்குருவை அவர் சந்தித்தபொழுது, மண் காப்போம் இயக்கம் பற்றியும், மண்ணைப் பாதுகாக்கவும், மண்ணுக்கு புத்துயிரூட்டவும் ஒரு விரிவாக மண் கொள்கை எப்படி மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது என்று சத்குரு பேசினார். நமக்கு முதன்மையான விஷயங்களுக்கு குரலும், வாக்கும் அளிப்பதற்கான ஒரு ஜனநாயகக் குடிமகனின் மிக முக்கியமான பொறுப்புணர்வு குறித்தும் அவர் எடுத்துக் கூறினார்.

கரீபிய அரசின் தலைவர்களுடன் உரையாடல்

2, 4
பிப்ரவரி

மார்ச் மாதத்தில் கரீபியனுக்கு செல்ல இருப்பதற்கு முன்னதாக, மண் காப்போம் இயக்கம் பற்றியும், அவர்களது தேசங்களுக்கு அது எவ்வளவு முக்கியம் என்பதையும், கரீபியன் அரசின் தலைவர்களுடன் சத்குரு பேசினார். பெலிஸ் நாட்டின் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சர், பார்புடா நாட்டின் பிரதமர், அன்டிகுஆ நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் விவசாய அமைச்சர்கள் மற்றும் கிரெனடாவின் பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மண் காப்போம் உரையாடலில் இணைந்தனர்.

கிரிக்கெட் வீரர்கள் ட்வைன் ‘DJ’ ப்ராவோ மற்றும் டாரென் ப்ராவோ

3
பிப்ரவரி

கரீபியன் கிரிக்கெட் வீரர்கள் ட்வைன் ‘DJ’ ப்ராவோ மற்றும் டாரென் ப்ராவோ, இவர்களுடன் சத்குரு உரையாடியபொழுது மண் மற்றும் விளையாட்டு அவர்களது பேச்சில் இடம்பெற்றது. மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்களுக்கு இடையில் பிரமிக்கத்தக்க வகையில் நிகழும் சிக்கலான, நுணுக்கமான ஊட்டச்சத்துக்களின் பரிமாற்றத்தை சத்குரு விவரித்தார். மண்ணின் நுணுக்கங்களுக்கு நேர்மாறாக, விளையாட்டு நுட்பங்கள் குறித்தும் பேசினார்கள். கிரிக்கெட்டை எளிய முறையில் அணுகி, பந்து மட்டுமே ஒற்றைக் குறியாக இருப்பதைப் பற்றி பேசினார்கள். பார்வையாளர்களுக்கு ஸ்கோர் முக்கியமாக இருக்கலாம், ஆனால் விளையாடுபவர், பந்தை சிறப்பாக அடிப்பதில் உள்ள ஆனந்தத்தை உணர்கிறார் என்றால், அப்போது வேறு எதைக் குறித்தும் அவர்களுக்கு வருத்தம் இல்லை.

‘பிரபஞ்ச நாயகன்’ கிரிஸ் கேல் – சத்குருவிடம் பேசுகிறார்

4
பிப்ரவரி

கிரிஸ் கேல், மிகவும் விரும்பப்படும் ஜமாய்க்கா நாட்டு கிரிக்கெட் வீரர், சத்குருவுடன் மண் குறித்தும், சமீபத்திய கிரிக்கெட் நிகழ்வுகள் குறித்தும் உரையாடினார். மண் காப்போம் இயக்கம் பற்றி சத்குரு விளக்கினார். எல்லாவற்றுக்கும் பொருந்தக்கூடிய ஒரு தீர்வு என்பது இல்லை, ஆனால் சுற்றுச்சூழல் மற்றும் அதன் தனித்துவமான நிலவரங்களைப் பொறுத்து எண்ணற்ற வழிகளில் மண்ணுக்குப் புத்துயிரூட்ட முடியும் என்றார். காவிரி டெல்டா போன்ற சுற்றுச்சூழல் கொண்ட பகுதிகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் காவேரி கூக்குரல் எப்படி ஒரு வெற்றிகரமான உதாரணமாக இருக்கிறது என்பதைப் பற்றி சத்குரு பேசினார். அறிமுகப்படுத்தப்படும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முன்னணியில் இருக்கும் விவசாயிகளின் பொருளாதார நலனை ஊக்குவிப்பதற்கான ஒரு மாதிரிவடிவமாக காவேரி கூக்குரல் குறிப்பாக முக்கியத்துவம் பெறுகிறது.

டென்னிஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரெங்க்காவின் உரையாடல் – மண் காப்போம் இயக்கம், விளையாட்டு, பெற்றோராக இருப்பது

4
பிப்ரவரி

பெலாரஸ் டென்னிஸ் வீராங்கனை விக்டோரியா அசரெங்க்கா முன்னாள் ஒற்றையர் பிரிவில் உலகில் முதலிடம் வகித்தவராகவும், முதன்முறையாக 30 ஜனவரி 2012ல் தரவரிசையின் முன்னணியிலும் இருந்துள்ளார். இவர் சத்குருவுடன், மண் காப்போம் இயக்கம் மற்றும் விளையாட்டுடன், பெற்றோராக இருப்பதிலும் வெற்றி பெறுவது குறித்து ஆன்லைனில் உரையாடினார். பெற்றோராக இருப்பதைப் பற்றி பேசும்போது, குழந்தைகள் நமது கருத்துகளின் அடிப்படையில் வளர்க்கப்படாமல், அக்கறையும், அன்பும் இணைந்த ஒரு சூழலில் இயல்பாக வளர்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை சத்குரு விளக்கினார். நமக்கு வயது அதிகரிக்கும்போது, வெறும் உடல் வலிமையை விட, அனுபவமும், திறமையும் எப்படி அதிக முக்கியமாகிறது என்பதைக் குறித்தும் சுருக்கமாக சத்குரு பேசினார்.

ராப் பாடகர் பிக் சீன் சத்குருவுடன் மண் குறித்து அளவளாவுகிறார்

6
பிப்ரவரி

முந்தைய சந்திப்பின் போது சத்குருவுடன் பிக் ஸீன்

அமெரிக்க ராப் பாடகர் பிக் ஸீன், சமூக ஊடகங்களில் இலட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களுடன், உலகெங்கும் மிகவும் விரும்பப்படுபவராகவும் இருக்கிறார். மண் காப்போம் இயக்கத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி உரையாடுவதற்கு, சத்குருவை அவர் ஆன்லைனில் சந்தித்தார். பிக் ஸீன், இந்த இயக்கத்தின் அவசரம் குறித்தும், எப்படி அது எதிர்காலத்தில் நிகழவிருக்கும் ஏதோ ஒரு விஷயமாக இல்லாமல், இப்போது நிகழ்ந்துகொண்டு அழிவை ஏற்படுத்தும் ஒரு சூழலாக இருக்கிறது என்றும் பேசினார். மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்கள் எப்படி நமது வயிற்றில் இருக்கும் மைக்ரோபையோமுடன் தொடர்புடையதாகவும், நாம் உணவை எப்படி ஜீரணிக்கிறோம், நமது மனதின் சமநிலை மற்றும் உணர்ச்சிகளின் ஸ்திரத்தன்மை போன்ற பல விஷயங்களை எப்படி அது பாதிக்கிறது என்றும் சத்குரு விளக்கினார்.

ரலைன் ஷா, சத்குருவுடன் உணவு பாதுகாப்பு மற்றும் மண் காப்போம் இயக்கம் குறித்து உரையாடுகிறார்

8
பிப்ரவரி

பிரபல இந்தோனேசிய நடிகை ரலைன் ஷாவும், சத்குருவும் ஆன்லைனில் மண் காப்போம் இயக்கம் குறித்து உரையாடினர். உணவு தட்டுப்பாட்டின் அபாயம் மற்றும் உணவு பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி சத்குரு பேசினார். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட நாகரிகங்களை, உணவு தட்டுப்பாடானது சில நாட்களில், சில வாரங்களிலேயே அழித்துவிட முடியும் என்கிற உண்மையை முன்னிலைப்படுத்தினார். இறக்குமதிகளைச் சார்ந்திருக்கும் தேவையில்லாமல், அந்தந்த நாடுகள் தாங்களாகவே அடிப்படைத் தேவையான உணவை உற்பத்தி செய்வதை உணவு பாதுகாப்பு நிர்வாகம் உறுதி செய்கிறது. குறுகிய அடையாளங்களின் எல்லைகளைக் கடந்து வாழ்வை உணர்வதற்கான நமது திறனைக் குறித்தும் சத்குரு பேசினார்.

Conscious Planet – சத்குருவுடன் அருந்ததி பட்டாச்சார்யாவின் ஆன்லைன் உரையாடல்

14
பிப்ரவரி

பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யாவுடன் சத்குரு மேற்கொண்ட ஆன்லைன் உரையாடலில், பூமியின் நுட்பமான உயிர்களின் அடிப்படையாக இருக்கும் ஒளிச்சேர்க்கையின் செயல்முறை குறித்துப் பேசினார். இந்த செயல்முறையின் தொடர் பரிமாற்றங்களின் வாயிலாகத்தான், பூமியின் மீதுள்ள அனைத்து உயிர்களும், முக்கியமாக நாம், நீடித்திருப்பதை விளக்கினார். அதுதான் மண்ணில் கார்பனைத் தக்கவைத்திருக்கிறதே தவிர, நாம் தற்போது எதிர்கொண்டிருக்கும் சூழலியல் பிரச்சனைகளை உருவாக்கக்கூடிய காற்று மண்டலத்தில் இல்லை என்று விரிவாக எடுத்துரைத்தார்.

அவர் ஒரு சூழலியல் போராளி என்ற மற்றவர்களின் கண்ணோட்டத்தை மாற்றும்வகையில், இயற்கையாகவே எல்லா உயிர்களிடமும் தான் ஆழமான காதல் வயப்பட்ட நிலையில் செயல்படுவதாக, ஒரு தன்னிலை விளக்கமும் வழங்கினார்.

பெங்களூருவில் புதியதொரு
ஈஷா யோக மையம் அமைப்பதற்கான பூமி பூஜை

16
பிப்ரவரி

பெங்களூருவில் வரவிருக்கும் ஈஷா யோக மையத்துக்கான அடிக்கல்நாட்டு விழாவில், சத்குரு பூமி பூஜை நடத்தினார். இந்த எழுச்சியூட்டும் சாத்தியத்தைக் குறித்துப் பேசுகையில், நல்ல முன்னேற்றமடைந்த இடத்துக்குள் செல்வதைக் காட்டிலும், ஒரு யோக மையத்தை ஆரம்பத்திலிருந்து கட்டமைப்பதில் ஈடுபட்டிருப்பது முற்றிலும் எவ்வளவு வித்தியாசமான அனுபவம் என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்த செயல்முறையில் ஒவ்வொருவரும் பங்கேற்பதற்கு உற்சாகமூட்டினார்.