ஈஷா ரெசிபி

காலை உணவுக்கு ஃப்ரூட் சியா பழக்கிண்ணம்

தேவையான பொருட்கள்

சியா புட்டிங்

1½ கப் தேங்காய் பால் (பால் அதிக கெட்டியாக, புட்டிங் அதிக கிரீமியாக)

½ கப் சியா விதைகள்

1-2 டேபிள் ஸ்பூன் இயற்கையான தேன் (சுவைக்காக)

1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை (விரும்பினால்)

8 பெரிய பேரீச்சம்பழங்கள் (ஊறவைத்தவை; விரும்பினால்)

பழங்கள் டாப்பிங்ஸ்

திராட்சை, அன்னாசி, வாழைப்பழம், மாதுளை மற்றும் ஆப்பிள் போன்ற புதிய சீசன் பழங்கள் 4 கப்

செய்முறை

1. ஒரு கிண்ணத்தில் தேங்காய் பால், சியா விதைகள், தேன் மற்றும் இலவங்கப்பட்டையை (விரும்பினால்) சேர்த்து ஒன்றாக கலந்துகொள்ளுங்கள்.

2. பேரீச்சம்பழத்தை (விரும்பினால்) சிறிய துண்டுகளாக வெட்டி, சியா தேங்காய் பால் கலவையில் சேர்க்கவும்.

3. ஒரு இரவு முழுக்க (அல்லது குறைந்தது 6 மணிநேரம்) மூடியபடி குளிர்சாதனப் பெட்டியில் வையுங்கள். சியா புட்டிங் கெட்டியாகவும் கிரீமியாகவும் இருக்க வேண்டும். தேவைப்பட்டால், மேலும் சியா விதைகளைச் சேர்த்து கிளறி, மேலும் ஒரு மணிநேரத்திற்கு மீண்டும் குளிரூட்டுங்கள்.

4. பழங்களை கனசதுரங்களாக வெட்டுங்கள்.

5. தனித்தனி கிண்ணங்களில் புட்டிங்கை பரிமாறுங்கல். மேற்புறங்களில் வெட்டி வைத்த பழத்துண்டுகளை அடுக்குங்கள்.