நடப்புகள்

சத்குருவை தொடருங்கள்

கடந்த சில வாரங்களின் கண்ணோட்டம்

விவசாய விஞ்ஞானிகளுடன் சத்குரு ஆன்லைனில் கலந்துரையாடினார்

26
நவம்பர்

ஐந்தாவது சர்வதேச வேளாண் மாநாட்டில், பேராசிரியர் ஜெய்சங்கர் தெலுங்கானா மாநில விவசாய பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு துறை தலைவரான டாக்டர். அனிதா வோடுர் சத்குருவை பேட்டி எடுத்தார். டாக்டர். அனிதா, மாற்றம் ஏற்படுத்துவதற்காக பெரும் எண்ணிக்கையில் மக்கள் குழுவை திரட்டுவது எப்படி என்பது குறித்து கேட்டார். கடந்த 25 ஆண்டுகளாக சுற்றுச்சூழலை முன்னிறுத்தி ஈஷா மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகளும் இயக்கங்களும் நம் அனைவரின் நல்வாழ்வை உள்ளடக்கி இருப்பதே இதன் தனிச்சிறப்பு என்பதை சத்குரு அப்போது பகிர்ந்து கொண்டார். நமது மண்ணை காப்பதை நமது தலையாய கடமையாக இப்போது நாம் ஏன் முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து பேசுகையில், இதுவே எல்லா பருவநிலை பிரச்சனைகளுக்கும் அடிப்படையான தீர்வாகவும், அனைத்து உயிர்களுக்கும் சம்பந்தமானதாகவும் இருக்கிறது என்று பெரும் அக்கறையுடனும் தெளிவாகவும் விளக்கினார் சத்குரு.

சத்குருவுடன் The Black Eyed Peas இசைக்குழுவினர் உரையாடல்

3
டிசம்பர்

அமெரிக்காவைச் சேர்ந்த The Black Eyed Peas இசைக்குழுவின் பல்திறன் மிக்க இசைக்கலைஞர்களை சத்குரு சந்தித்து விழிப்புணர்வான உலகம் இயக்கம் பற்றியும், நமது மண்ணுக்கு புத்துயிர் அளிக்க நாம் எடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். உற்சாகம் ததும்ப பங்கேற்பாளர்கள் மேலும் பல கேள்விகளை எழுப்பி சத்குருவிடம் இருந்து தெளிவு பெற்றதுடன் பல்வேறு வழிகளிலும் தங்கள் ஆதரவை வழங்க முன்வந்தனர். சுற்றுச்சூழலியல் என்பது தேர்தல் வாக்குறுதியாக மாறும் வரை தேவையான செயல் நடக்காது என்று பகிர்ந்த சத்குரு, ஜனநாயக நாட்டின் பொறுப்பான குடிமக்களாக நமக்கு சுற்றுச்சூழலியல் எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்பதை நமது அரசாங்கத்திடம் நாம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

சத்குருவுடன் 'Let's Go' வலையொலி நிகழ்ச்சியில் டாம் ப்ரேடி கலந்துரையாடல்

7
டிசம்பர்

புகழ்பெற்ற அமெரிக்க கால்பந்தாட்ட வீரரான டாம் ப்ரேடி தமது வலையொலி நிகழ்ச்சியில் பங்கேற்க சத்குருவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர்களுடன் விளையாட்டு போட்டி வர்ணனையாளரான ஜிம் கேரி இணைய, சுவாரஸ்யமான விவாதம் துவங்கியது. தமது ரசிகர்களுக்கு சத்குரு ஏதும் அறிவுரை வழங்க விரும்புகிறாரா என உரையாடலை துவங்கினார் டாம். "அடுத்தவர்களின் அறிவுரையை கேட்காதீர்கள்" என அதிரடியாக துவங்கினார் சத்குரு. அறிவுரை கேட்க துவங்குகையில், ஒருவர் மற்றொருவரை பின்பற்ற துவங்குகிறார் என சுட்டிக்காட்டிய சத்குரு, உலகில் உள்ள அனைத்தையும், குறிப்பாக தங்கள் சொந்த உடலை மக்கள் செவிமடுக்க வேண்டும் என யோசனை வழங்கினார். உரையாடலின் போது, இலக்கின் மீதே அதீதமாக பார்வையை பதித்திடாமல் செயல்முறையோடு ஈடுபாடாக இருப்பது பற்றியும் பேசினார் சத்குரு.

சத்குருவுடன் அமெரிக்க நடிகர் ஜெசி வில்லியம்ஸ் கலந்துரையாடல்

8
டிசம்பர்

மண்ணின் வளம் குன்றுவதில் துவங்கிய உரையாடலில், வேகமாக அதிகரித்து வரும் மக்கள்தொகை, உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் அவதியுறும் ஆப்பிரிக்கா பற்றி, குறிப்பாக 45% அளவிற்கு அங்கு மண் பாலைவனமாகியிருக்கும் நிலையை குறித்து அமைந்திருந்தது.

இருவரும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வரலாறு மற்றும் அவர்கள் தற்போது சந்திக்கும் சவால்கள் குறித்தும் பேசினார்கள். கடந்த காலத்தின் வலியையும் காயங்களையும் இன்றைக்கான விவேகமாக மாற்றிக்கொண்டு, கற்பனைக்கெட்டாத அனுபவங்களை சந்திக்க தேர்ந்தவர்களை கௌரவிக்க வேண்டும்‌ என்று தெரிவித்த சத்குரு, குழுக்களுக்கு இடையேயான போராட்டங்களை ஒரு போராக பாவிப்பதால் உருவாகும் கோபமும் விரோதமும் இன்னும் தடைகளையே ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும் என்றும் தெரிவித்தார். அதற்கு பதிலாக, அவைகளை தன்னிலை மாற்றம் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கான வாய்ப்புகளாவும் பார்க்கலாம் என்று ஆலோசனை வழங்கினார் சத்குரு.

ஈராக் அமெரிக்கர் ஜைனப் சால்பி-யின் 'Redefined' வலையொலி நிகழ்ச்சியில் சத்குரு

8
டிசம்பர்

எழுத்தாளர்,‌ பேச்சாளர், சமூக ஆர்வலர் என பன்முக அடையாளம் கொண்ட ஈராக் அமெரிக்கர் ஜைனப் சால்பி தமது 'Redefined' வலையொலி நிகழ்ச்சியில் சத்குருவை பேட்டி எடுத்தார். கர்மா புத்தகம் பற்றி அவர்கள் கலந்துரையாடுகையில், ஒருவர் தனது வாழ்வுக்கும் அனுபவத்திற்கும் பொறுப்பு எடுப்பது என்றால் என்ன - ஒருவர் ஆனந்தமாக இருப்பதை எப்படி தமது இயல்பாக கொள்வது என்பது பற்றி சத்குரு பேசினார். சத்குருவின் தெளிவுக்கான மூலம் பற்றி ஜைனப் கேட்க, தான் சந்திக்க நேரும் அனைத்தையும் எந்த முன்முடிவும் இன்றி, முழுமையாக கவனம் செலுத்துவதே என பகிர்ந்து கொண்டார் சத்குரு.

மார்க் பெனியாஃப் மற்றும் சத்குருவுடன் விழிப்புணர்வான உலகம்

10
டிசம்பர்

மேக கணியியல் (cloud-based) தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட உலகின் பெரும் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce) நிறுவனத்தின் நிறுவனர், சேர்மன். தலைமை நிர்வாக அதிகாரி மார்க் பெனியாஃப். சுற்றுச்சூழல் மீது தீரா ஆர்வம் கொண்டவரான மார்க், சத்குருவை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததுடன், இந்த மண்ணையும் பூமியையும் காத்திடுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இருவருக்கும் இடையேயான கலந்துரையாடலுக்கு பிறகு, சத்குரு இவ்வாறு டிவீட் செய்திருந்தார்:

புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலய வளாகம் பற்றி டைமஸ் தொலைக்காட்சிக்கு சத்குரு பேட்டி

13
டிசம்பர்

புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தின் திறப்பு விழாவின் போது டைம்ஸ் நௌவ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சத்குரு, காசியின் அளப்பரிய முக்கியத்துவம், மனிதகுலத்திற்கு காசி வழங்கும் சாத்தியம், அதன் வரலாற்று முக்கியத்துவம், எதிர்காலத்திற்கு காசி கொண்டிருக்கும் ஆற்றல் பற்றி பேசினார். இந்தியாவின் ஆன்மீக கலாச்சாரம் வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் செலுத்திய ஜாக்கிரதையான கவனம் பற்றி, அதிலும் குறிப்பாக மனித உடல் இயங்கும் விதம் மற்றும் அகநிலையில் மனித அனுபவங்கள் பற்றி செலுத்தப்பட்ட கவனம் குறித்தும் விளக்கினார் சத்குரு. காசியின் புணரமைப்புக்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளை மெச்சிய சத்குரு, இந்த கலாச்சாரத்தின் மிகச் சிறந்தவற்றை எதிர்காலத்திற்கு வழங்குவதன் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டு பேசினார்.

குறிப்பிடத்தக்க நிகழ்வாக...

சென்னையில் இருந்து 70 கிமீ தொலைவில் திருக்கழுகுன்றத்தில் அமைந்துள்ள பண்டைய குமரேஸ்வரர் ஆலயம் பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்திருந்த நிலையில், சமீபத்தில் ஆலய புணரமைப்பு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் கோவிலுக்கு புத்துயிர் ஊட்டப்பட்டுள்ளது. ஈஷா பிரம்மச்சாரிகளும் நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களும் கும்பாபிஷேக திருப்பணியில் பங்கேற்று சக்திமிக்க யோகேஷ்வராய மந்திர உச்சாடனம் செய்து, சத்குரு பிரதிஷ்டை செய்த யந்திரத்தை கலசத்தில் சேர்த்தனர். இதை தொடர்ந்து, தலைமுறைகளை கடந்து ஆன்மீகத்தை உயிரோட்டமான செயல்முறையாக பரிமாறிய நம் குருமார்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குருபூஜை நடைபெற்றது.

பராமரிப்பின்றி அழிந்து வரும் ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் இந்த மண்ணில் ஊறியிருக்கும் ஆன்மீக செயல்முறையை அதன் முழு துடிப்போடு மீட்டெடுத்திடுவதற்கு, சிறியதாக இருந்தாலும் முக்கியமான படியாக இந்த ஆலய புணரமைப்பு திருப்பணி அமைகிறது.