ஈஷா சமையல்

அதிரசம்

தேவையான பொருட்கள்:

2 கிலோ அரிசி

1 கிலோ வெல்லம்

200 மிலி தண்ணீர்

150 கிராம் நெய்

100 கிராம் எள்ளு (150 கிராம் மேலே தூவ வேண்டுமானால்)

1 ஸ்பூன் ஏலக்காய் பொடி

500 கிராம் எண்ணெய்; 500 கிராம் நெய் (பொரிப்பதற்கு)


செய்முறை:

அரிசி மாவு தயார் செய்யும் முறை

1. அரிசியை நன்றாக ஊற வைக்கவும்.

2. பின்னர் நன்றாக கழுவி வடிகட்டிக் கொள்ளவும்.

3. 10 - 15 நிமிடத்திற்கு அரிசியை வடிகட்டியிலேயே விட்டு வைக்கவும்.

4. பிறகு அரிசியை சிறுக சிறுக மிக்சரில் போட்டு நன்கு மாவாக அரைத்து ஜல்லடையில் சலித்து  வைத்துக் கொள்ளவும்.

வெல்லப்பாகு செய்யும் முறை:

  1. 1. வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு, 40-50 மில்லி நீர் சேர்த்து கரைய விடவும்.
  1. 2. இந்த கலவையை அடுப்பில் ஏற்றி நன்றாக கொதிக்க விடவும்.
  2. 3. கொதித்து, நன்றாக கொப்பளிக்கும் போது, ஒரு ஸ்பூனில் அந்த பாகை சிறிது எடுத்து, ஒரு சிறிய கப்பில் தண்ணீர் விட்டு அதில் இந்த பாகை ஊற்றவும்.
  3. 4. தண்ணீரில் கரையாமல், பாகு சேர்ந்து வந்தால் பாகு சரியான பதத்தில் உள்ளது.
  4. 5. நெய், ஏலக்காய்பொடி இரண்டையும் சேர்த்து நன்றாக பாகை கிளறி விடவும்.
  5. 6. அடுப்பை அணைத்து விட்டு பாகை தனியே வைக்கவும்.
  6. அதிரசம் தட்டி பொரித்து எடுப்பது:
  7. 1. வாணலியில் எண்ணையும் நெய்யும் சேர்த்து, வாணலியை மிதமாக தீயில் வைக்கவும்.
  8. 2. எலுமிச்சம்பழ அளவில் மாவை பிரித்து உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  9. 3. ஒவ்வொரு உருண்டை மேலும் தேவையானால் சிறிதளவு எள்ளு தூவிக்கொள்ளலாம்.
  10. 4. விரல்களிலும், ஒரு சிறு வாழை இலை ஏட்டிலோ அல்லது பிளாஸ்டிக் பேப்பரிலும் நெய் தடவிக் கொள்ளுங்கள். இது மாவு ஒட்டாமல் இருக்க உதவும்.
  11. 5. ஒரு உருண்டையை எடுத்து இலை மேல் வைத்து பூரி அளவிற்கு தட்டி வைக்கவும்.
  12. 6. மெதுவாக இந்த தட்டி வைத்த அதிரசத்தை வாணலியில் சேர்த்து, அது மேலே மிதந்து வரும் வரை காத்திருக்கவும்.
  13. 7. மேலே வந்தவுடன் அதை திருப்பி மறுபக்கத்தை தங்க நிறம் வரும் வரை பொறிக்கவும்.
  14. 8. நன்றாக பொரிந்து வந்தவுடன், அதிரசத்தை எண்ணெயிலிருந்து வெளியே எடுத்து, எண்ணெய் சுத்தமாக வடியும் வரை வடிகட்டியில் வைக்கவும்.
  15. பாரம்பரியமான இந்த பலகாரத்திற்கு தெலுங்கில் அரிசியாலு என்று பெயர். தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு பலகாரம். ருசியில் மட்டுமல்ல, அளவோடு உண்டால், உடல் ஆரோகியத்திற்கும் நல்லது. வெல்லத்தில் இரும்பு சத்து இருப்பதால் சுலபமாக செரிமானம் ஆகும். இருமல், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு பரிகாரம். வெல்லம் ரத்தத்தில் சர்க்கரையை குறைக்கும் என்பார்கள். எள்ளு குளிர் காலத்தில் உடலுக்கு சூட்டை அளிக்கும்.