பகிர்வுகள்

பக்தி சாதனா: லிங்கபைரவியில், பக்தியின் மென்மையான வல்லமை

ஒவ்வொரு இரவும் லிங்கபைரவிக்கு அருகில், சாதகர்கள் தங்கள் சாதனாவை இணைந்து தொடங்குவதற்கு முன், உள்ளெழுச்சிப் பாடலை உரத்த குரலில் உச்சாடணம் செய்வதைக் கேட்கமுடியும். முப்பது நிமிடங்களுக்குள், சாதனா முடிவடையும் உள்ளெழுச்சிப் பாடல், இப்போது காதோடு இரகசியமாக ஏறக்குறைய மெல்லிய இழையாகிவிடுகிறது. ஒரு சூட்சுமமான செயல்முறை, அவர்களது வாழ்க்கைக்குள்,  பெண்தன்மையின் பரிமாணத்திற்கு வல்லமை அளித்துள்ளது.

பக்தி ததும்பும் இரவுகள்

கடந்த இரண்டு மாதங்களில், ஈஷா யோக மையத்தில் ஏதோ ஒன்று, மௌனமாக சிற்றலைகளை எழுப்பிக்கொண்டுள்ளது. தினமும் இரவு 9 மணிக்கு, ஆசிரமவாசிகளும், தன்னார்வலர்களும், விருந்தினர்களும் மற்றும் சாதனா பாதை பங்கேற்பாளர்களும் லிங்கபைரவியை நோக்கி சாரைசாரையாக முன்னேறுகின்றனர். சுமார் முப்பது நிமிடங்கள் கழித்து, மாற்றத்திற்கான ஒரு கருவியால் ஆழமாகத் தொடப்பட்டு, அவர்கள் கலைந்து செல்கின்றனர். பக்தி சாதனா தன் இருப்பை, சத்தமில்லாமல் உணரச் செய்துகொண்டிருக்கிறது.

ஆன்மீக செயல்முறையின் ஒரு முக்கியமான பெண்தன்மையின் அம்சமாகிய பக்தியை தியான அன்பர்களின் வாழ்க்கைக்குள், இந்த சாதனா அனுமதிக்கிறது. பல பங்கேற்பாளர்களுக்கு, பக்தியின் ஆற்றல், அவர்களது ஆன்மீக மாற்றத்தை துரிதப்படுத்துதல் போன்றவை ஒரு புதிய வெளிப்பாடாக இருக்கிறது.

பக்தி சாதனா உங்களை எப்படி மாற்றத்துக்கு உள்ளாக்குகிறது?

சத்குரு விவரிப்பதைப் போல், “உங்களது உணர்ச்சியானது எதிர்மறைத் தன்மையில் இருந்து, அதிகபட்ச இனிமைக்கு மாற்றமடைவதற்கு பக்தி யோகா ஒரு வழியாக இருக்கிறது.” இங்கே உணர்ச்சியின் தீவிரம் கண்கூடாகத் தெரிகிறது; அமர்வுகள் முடிவடைந்த பிறகும்கூட, பக்தி சாதனா நடைபெற்ற இடத்தில், தியான அன்பர்கள் கண்கள் மூடியிருக்க, கன்னங்களில் கண்ணீர்த் துளிகள் உருண்டோடுவதைக் காணமுடியும்.

பங்கேற்பாளர்களுக்கு அந்த சாதனா எளிமையானதாகத் தோன்றலாம், ஆனால் அது கவனமுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தேவி சாதகர்களுக்காக பதினைந்து நாள் சுழற்சியாக அந்த செயல்முறை நிகழ்வதுடன், ஒவ்வொரு மாலை நேரமும் ஒரு வித்தியாசமான தன்மையைக் கொண்டுள்ளது.

இந்தப் பன்முகத்தை ஒரு சாதனா பாதை பங்கேற்பாளரின் அனுபவம் எடுத்துக்காட்டுகிறது: முதல் நாளின் இரவில், எனது உடலுக்கும், என் சுற்றுப்புறத்துக்கும் இடையில் இருக்கின்ற ஆழமான தொடர்பினை அது தூண்டிவிட்டது. இரண்டுமே, எங்கும் பரவியிருக்கும் ஐம்பூதங்களின் உருவாக்கங்களாக இருப்பதை உணரமுடிந்தது. அடுத்த இரவு, என்னைச் சுற்றிலுமுள்ள அனைத்து படைப்புகளின் தூய வெளிப்பாடாக இருக்கும் ஆதாரசக்தியை வணங்குவதைத் தவிர வேறு எதுவுமில்லை என்ற உணர்வு மேலோங்கியது. புதிய தேவி சேவா குழுவினர் எல்லா அமர்வுகளிலும் பங்கேற்கின்றனர்; இருப்பினும், ஆசிரம விருந்தினர்களும், தன்னார்வலர்களும் கூட அவர்கள் விரும்பும் எந்த அமர்விலும் இணைந்துகொள்ள முடியும்.

பக்தி சாதனாவின் விளைவுகள் வியத்தகு சூழல்களில் வெளிப்படுகிறது. ஹர்ஷாஜல்லா என்ற பெயருடைய ஒரு தன்னார்வலர், ஒரு காலை வேளையில் தனக்கு நிகழ்ந்ததை நினைவுகூர்கிறார். தற்செயலாக ஒரு ஆசிரம விருந்தினர் வாஷ் பேசினில் இவரது கையைத் தட்டியபோது, ஹர்ஷா தன்னைத்தானே வியந்துகொள்ளும் வகையில், தன்னிச்சையான எதிர்வினையாற்றாமல், வெறுமனே அந்த விருந்தினரைப் பார்த்து புன்முறுவல் செய்யமுடிந்தது. “சரியான முறையில் பதிலாற்றுவதற்கு, பக்தி சாதனா உதவி செய்வதால், சூழல்களைக் கையாள முயற்சிப்பதற்கு முன்னால், நான் என்னையே சரிசெய்துகொள்கிறேன்.”

[1] தேவி சேவா என்பது தன்னார்வலர்கள் தேவியின் அருள் இருப்பில் இருந்திடவும், லிங்கபைரவியில் சேவை செய்திடவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

நாள்தோறும் இனிமையின் இழை

சத்குருவின் வார்த்தைகளை ஆழமாகப் பார்க்கும்போது, லிங்கபைரவிக்கு சேவை செய்பவர்களுக்கு ஏன் முக்கியமாக பக்தி சாதனா பலனளிக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். “பக்தி உங்கள் இதயத்தை உருகச் செய்திருந்தால், உங்களால் புரிந்துகொள்ள முடியாத பல்வேறு வழிகளில் தேவி உங்களுக்கு உவந்தருளுவாள்.”

தேவி சேவா தொடங்குவதற்கு, ஒவ்வொரு தேவி சேவகரும், மூன்று நாட்கள் மௌனமும், அதற்கான வழிகாட்டுதலும் கடைபிடிப்பது சிலருக்கு அச்சமூட்டுவதாக இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, தற்போதைய வழிமுறைப்படி, பக்தி சாதனா தொடங்கிவிட்டால், தன்னார்வலர்கள் விரைவிலேயே அவர்களது புதிய சேவைக்கு இணக்கமாகிவிடுவதை தேவி சேவா ஒருங்கிணைப்பாளர்கள் கவனித்துள்ளனர். “விருந்தினர்களை வணங்குவதிலேயே அதன் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது – லிங்கபைரவி பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்திற்குள் நுழையும் ஒவ்வொரு நபருக்குள் இருக்கும் உயிருக்கும், ஆழமான பக்தி உணர்வுடன் நமஸ்காரம் செலுத்தப்படுகிறது” என்கிறார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மயூர்.

“பக்தி சாதனாவில் தவறாமல் பங்கேற்பவர்களின் உணர்ச்சிகள், அவர்களது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்குவதுடன், சாதனாவின்போது அவர்கள் உணர்ந்த இனிமையான உணர்ச்சியை, அந்த நாளின் மற்ற தருணங்களுக்குள்ளும் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றனர்,” என்று அவர் விளக்கமளிக்கிறார். சாதனா நிகழ்வை வழி நடத்திச் செல்வதில் மயூர் கவனம் செலுத்தவேண்டிய நிலையில், சாதனாவின் முடிவில் பங்கேற்பாளர்களின் கண்ணீரைப் பார்க்கும்போது, அவரையும் ஒரு உணர்ச்சி அலை மூழ்கடிக்கிறது. தேவி சாதகர்கள் பாட்ச் முடிவடைந்த பிறகும்கூட, பல பங்கேற்பாளர்களும் ஒவ்வொரு இரவும் பக்தி சாதனாவின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக, அவர்களுடன் மேலும் அதிகமான நபர்களை அழைத்து வருவதை அவர் பார்க்கிறார்.

தேவி சேவகர்களைத் தவிர்த்து மற்றவர்களாலும் இதே விதமான அனுபவத்தை உணரமுடிகிறது. சாதனா பாதை குழுவினரின் சந்திப்பு ஒன்றில், ஒரு பங்கேற்பாளர் பகிர்ந்துகொண்டார். அவர் தனக்குள்ளும், வெளிச்சூழல்களிலும் எப்போதும் போராட்டமாக இருந்துள்ளார். பக்தி சாதனாவில் பங்கேற்றபோது, ஒரே ஒரு கணம் உண்மையாக ஏதோ ஒன்றுக்குத் தலை வணங்கி நின்ற அந்தத் தருணத்தில், அவருக்குள் இருந்த தடைகள் நொறுங்கிப்போயின என்கிறார். அப்போது முதல், அவர் தனக்குள் அமைதியை உணர்வதாக பகிர்ந்துகொண்டார். அவரது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்குப் பிறகு, ஏறக்கூறைய 60 புதிய பங்கேற்பாளர்கள் பக்தி சாதனாவுக்கு வருகை தந்தனர். பலருக்கும், அவர்களது உணர்ச்சிகள் வெடித்தெழுந்த விதத்தை, பாவ ஸ்பந்தனாவில் அவர்கள் உணர்ந்த அந்த அனுபவத்துடன் ஒப்பிட முடிந்தது.

"இது தர்க்கத்துக்கான ஒரு இடமல்ல – அது மாயாஜாலத்துக்கான ஒரு இடம்"

கடந்த ஒரு வருட காலத்துக்கு முன்பு, தேவியின் அருளைப் பெறுவதற்கான பக்தி ததும்பும் பயிற்சியாகிய, பைரவி சாதனா பயிற்சியை, ஜெய்னெப் ஆன்லைனில் தொடங்கினார். இருப்பினும், ஒரு ஜோடி காலணிகளைப் போன்ற மிகச் சாதாரணமான ஏதோ ஒன்றைக்கூட, அவரைக்காட்டிலும் உயர்ந்ததாகப் பார்ப்பதில் இருந்த தர்க்கரீதியான தடையை அவரால் கடந்துசெல்ல முடியவில்லை. அவர் ஒரு முறை யோகா மையத்துக்கு வந்து பக்தி சாதனாவைப் பயிற்சி செய்தவுடன், பக்தியின் உண்மையான உணர்தல் அவருக்குள் எழுந்தது. முன்னதாக ஆன்லைனில் அவரது பயிற்சியாளர் கூறியிருந்ததை அவர் புரிந்துகொண்டார்,” இது தர்க்கத்துக்கான ஒரு இடமல்ல – இது மாயாஜாலத்துக்கான ஒரு இடம்.”

அவரது நாளின் கணந்தோரும் பரவியிருக்கும் தேவியுடனான ஆழமான தொடர்பைக் கண்டுணர்வதற்கும் பக்தி சாதனா உதவியது. ஆண்தன்மையை மட்டுமே வழிபடும் நோக்கம் கொண்ட ஒரு துருக்கிய கலாச்சாரத்திலிருந்து வந்திருப்பவருக்கு, பெண்தன்மையின் தெய்வீகத்தைக் கொண்டாடுவது புதியதொரு கருத்தாக இருந்தது. மேலும், லிங்கபைரவியிடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தினால் நெகிழ்ந்தவராக, அவரின் தேவி சேவையின்போது ஒரு கவிதை எழுதினார்:

தேவி

நான் முதலில் கண்டது தீயை

நீ பிறகு எரித்த அது, என் மாயை

நிதர்சனம் வந்தது முடிவில் நீ

உணர்த்தினாய் மௌனத்தின் மடியில்:

“ஒரு பக்தருக்கு தயக்கம் இல்லை”

என் தேவிக்கு நன்றி கூறுவதெங்கனம்

அனைத்தும் அவள் கருணையின்

ஊற்றாகப் பெருகும்போது

ஓ தேவி, காணும் எல்லா வழிகளிலும்

நின்னைச் சரண் புகுதலே எளிது

நிறுத்தமில்லா நிச்சயமே

தூய அன்பே, முடிவில்லா அருளே

ஓ தேவி

நான் இல்லாமையை

ஒருபோதும் நான் இருந்திராததை

நீ அனைத்தையும் எரிக்கும்போது

நிலையாய் இருப்பது நீ மட்டுமே

உன் அக்னியே வெளிச்சமாக

தேவிக்கு தன்னையே அர்ப்பணித்ததால், ஜெய்னெப்பின் புரிதல் மாறியுள்ளதை அவர் உணர்கிறார். மேலும் வாழ்வின் ஆண்தன்மை, பெண்தன்மையின் பரிமாணங்கள் ஒன்றுக்கொன்று இணையாகவும், சமமாகவும் இருப்பதை இப்போது அவர் காண்கிறார்.

இடையிடையே, லிங்கபைரவியில் தன்னார்வத் தொண்டு செய்துவரும் அபினவ் கூறுகிறார், அவர் ஆன்மீகத் தேடலில் எவ்வளவு சீரியஸாக இருந்தாரென்றால், சமூகத் தொடர்புடையவைகள் மற்றும் அன்றாட வெளிஉலக விஷயங்களை அவர் முற்றிலும் ஒதுக்கி வந்ததாகக் கூறுகிறார். அவரது தேவி சேவை அனுபவம் அவர் வாழ்க்கைக்குள் பெண்தன்மையின் சக்தியை திரும்பக் கொண்டு வந்துள்ளது. இதனால் அவரது ஆன்மீகத் தேடுதலில் கருணையுடன் கூடிய சமநோக்கத்துடன், அவரைச் சுற்றிலுமுள்ள மக்கள் குறித்து அதிக விழிப்புணர்வுடையவராக உருவாக்கியுள்ளது. “நான் மற்றவர்களை நமஸ்கரிக்கும் தன்மையே மாற்றமடைந்துள்ளது. நான் மகிழ்ச்சியாக உணர்வதால், அது இயல்பான வெளிப்பாடு காண்கிறது,” என்று கூறுகிறார். அவர் ஆடை அணியும் தன்மைகூட புதியதாக, உள்நிலையைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. “நான் வழக்கமாக கருப்பு மற்றும் நீல நிற ஆடைகளைத்தான் அணிவேன், ஆனால் இப்போது நான் ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் மற்றும் பிங்க் நிறங்களிலும் கூட ஆடை அணிகிறேன்,” என்று அபினவ் ஆமோதிக்கிறார்.

வாழ்க்கைக்கான ஒரு புதிய பார்வை

பக்தி சாதனா, ஒவ்வொரு நாளையும் முடிவுக்குக் கொண்டுவரும் மிக அழகானதொரு வழியாக இருக்கிறது. அந்த நாளில் நீங்கள் சந்திப்பது இனிமையாக இருப்பினும் அல்லது இனிமையில்லாமல் இருப்பினும், உங்களது எல்லா அடையாளங்களையும், சேகரிப்புகளையும் ஒதுக்கிவிட்டு, உங்களைச் சுற்றியுள்ள அனைத்துடனும் தொடர்பு கொள்வதற்கு இங்கே ஒரு வாய்ப்பு இருக்கிறது. படைப்பை, புதிய பார்வை கொண்டு பார்ப்பதன் மூலம், அது எப்படி உள்ளதோ அப்படியே பார்த்து – உங்களைக் காட்டிலும் மிகப் பெரியதாக - மற்றும் எல்லாவற்றுக்கும் இயல்பாகத் தலை வணங்குவதால், உணர்ச்சியின் இனிமையும், பக்தி உணர்வும் இயற்கையாகவே மேலெழுகிறது. ஆசிரமவாசியாகிய அமித், இதனை அவரது கவிதை வரிகளில் வெளிப்படுத்துகிறார்:

பைரவி (பாதம் பணிந்து)

பாதம் பார்த்து

தலைவணங்குவது தவிர

மற்றதெல்லாம் முட்டாள்தனம்தான்

முகங்கள் பார்ப்பதும், சுருக்குவதும்

முடிவில்லா கருத்துகளும் இந்த

என்னை வறண்ட நிலமாக்கிவிட்டதுவே

எச்சரிக்கை கொள்ளும் நேரமிது

புத்தியுடன் செயல்படுவதற்கு

ஓ என் தாயே கைகொடு எனக்கு

இப்படி இருக்க, இப்படியே நீடித்திருக்க!