ஈஷா சமையல்

பஞ்சாமிர்தம் - சத்குரு ஸ்டைல்

தேவையான பொருட்கள்

நறுக்கிய வாழைப்பழம் - பெரியது 1 அல்லது சிறியது 2

பொடித்த வெல்லம் அல்லது பனஞ்சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி

தேன் - 1 தேக்கரண்டி

புளிக்காத புதிய தயிர் - 1 தேக்கரண்டி

நெய் - 1 தேக்கரண்டி

துருவிய தேங்காய் - 1 மேஜைக்கரண்டி

நறுக்கிய உலர் திராட்சை - 7-8  

ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

நறுக்கிய முந்திரி பருப்பு - 7-8

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்துக் கலக்கவும்.

தன்னுடைய சமையல் குறிப்பைக் குறித்து சத்குருவின் விளக்கம்  

பஞ்சாமிர்தம் 5 பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், வாழ்க்கையின் அமுதமாகக் கருதப்படுகின்றது. இது ஒரு எளிய இந்திய வித்தை – வாழைப்பழங்களை நறுக்கி, அதனுடன் சிறிது தேன், நெய், வெல்லம் மற்றும் தயிர் சேர்க்க வேண்டும். உங்களுக்கு எப்படி வேண்டுமோ, அப்படி வாழைப்பழங்களை நறுக்கவும். குழைவாக வேண்டுமென்றால், மெலிதாக நறுக்கவும்; அல்லது பெரியதாக நறுக்கலாம். ஐந்து பொருட்களும் சமநிலையில் உள்ள பஞ்சாமிர்தத்தை உண்டால், தைராய்டை சமநிலைக்கு கொண்டுவர மிகவும் நல்லது என்று கூறுவார்கள். இந்த தைராய்டு ஒரு மனிதனின் உடல், மனம் மற்றும் ஒட்டுமொத்த நலனுக்கும் முக்கியமான ஒன்றாகும்.  

நான் தனிமையில் பண்ணையில் வசித்திருக்கிறேன். அப்பொழுது எனது உணவு கடலை அல்லது தேங்காய்தான். ஒரு காலத்தில், ஊறவைத்த கடலைகளையும், வாழைப்பழங்களையும் மட்டுமே உண்டு, நான் பல மாதங்கள் வாழ்ந்திருக்கிறேன். வாழைப்பழங்கள் ஒரு ஏழை மனிதனின் உணவு. நான் அதை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்திருக்கிறேன்.

இந்த பஞ்சாமிர்தம் இப்பொழுது ஒரு ஆடம்பர தின்பண்டமாகிறது, ஏனென்றால் இதுதான் இரவு வரைக்கும் எனது ஒரே உணவு. சாதாரணமாக இதில் ஐந்து பொருட்கள்தான், ஆனால் நான் இன்னும் சில பொருட்களை சேர்த்துள்ளேன் - வாழைப்பழங்கள், தேங்காய், தேன், பனஞ்சர்க்கரை, நெய், சிறிது தயிர் மற்றும் சில உலர்பழங்கள்.