நடப்புகள்

சத்குருவை தொடருங்கள்

கடந்த சில வாரங்களின் நிகழ்வுகள் குறித்த ஒரு கண்ணோட்டம்

சத்குருவுடன், அலி வென்ட்வொர்த் உரையாடுகிறார்

23 ஏப்ரல்
2021

அலி வென்ட்வொர்த், ஒரு அமெரிக்க நடிகை, நகைச்சுவையாளர், புத்தக ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டவர். அவரது “அலியிடம் கேளுங்கள்” என்ற தலைப்புடைய வீடியோ நிகழ்வில் பேசுவதற்கு, சத்குருவை அழைத்திருந்தார். அவர்களது உரையாடலில், கர்மா, ஒருவரை மற்றவருடன் ஒப்பிடுவது மற்றும் ஒருவரது வாழ்வின் போக்கை எப்படி தீர்மானிப்பது போன்ற தலைப்புகள் இடம் பெற்றன. “யாரோ ஒருவர் அவரது காரை, என் கார் மீது இடித்தால், அதற்கு என்னுடைய கெட்ட கர்மாதான் காரணமா?" என்பதைப் போன்ற கேள்விகளுடன், சத்குருவுடன் இணைந்து கர்மாவின் அடிப்படைகள் பற்றி ஆழங்காண முயற்சித்தார், அலி.

சத்குரு சத்சங்கம் முழு நிலவில் அருள் மடியில்

26 ஏப்ரல்
2021

முழு நிலவில் அருள் மடியில் சத்சங்க தொடரின் முதலாவது பௌர்ணமி சத்சங்கத்தின் போது, இந்தியாவில் கோவிட்-19 இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும் ஆழமான வலி மற்றும் இழப்பு குறித்து சத்குரு பேசினார். ஈஷாவின் கோவிட் அவுட்ரீச் தொடர்பான செயல்பாடுகளை தீவிரப்படுத்துதல் மற்றும் அவற்றின் விரிவாக்கம் குறித்தும், எதிர்வரும் வருடங்களில் தீவிரமான ஆன்மீகம் மற்றும் மறைஞானம் தொடர்பான செயல்பாடுகளில் தமது கவனத்தை மீண்டும் திருப்பவிருக்கும் திட்டங்கள் குறித்தும் அறிவித்தார்.

FOX 5 தொலைகாட்சியின், குட் டே நியூயார்க் நிகழ்ச்சியில் சத்குரு

27 ஏப்ரல்
2021

தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் ரோசன்னா ஸ்கோட்டொ மற்றும் லோரி ஸ்டோக்ஸ் இருவரும், முழு அடைப்பு குறித்து சத்குருவின் அனுபவத்தைக் கேட்டதுடன், அவரது புதிய புத்தகமாகிய, 'கர்மா' குறித்தும் கேள்விகள் எழுப்பினர். கர்மா என்பது ஒரு தனிமனிதர் ஒவ்வொரு கணமும் அவரது வாழ்க்கையில் நிகழ்த்தும் செயல்தானே தவிர, பொதுவாக சித்தரிக்கப்படுவதைப்போல், அது ஒரு தண்டனையோ அல்லது வெகுமதியோ அல்ல என்பதை சத்குரு தெளிவுபடுத்தினார். பேச்சினூடே விளையாட்டாக, சத்குருவுடன் மோட்டார் சைக்கிளில் பயணிக்க அவர்கள் விருப்பம் தெரிவித்தபோது, “அதிவேகத்தை உங்களால் தாக்குப்பிடிக்க முடியும் என்றால் வரலாம்” என்றார் சத்குரு.

முன்னணி விளையாட்டுத்துறை தொழில்முனைவர் டேவிட் மெட்சர், சத்குருவுடன் உரையாடினார்

27 ஏப்ரல்
2021

தொழில் முனைவோருக்கு உத்வேகமூட்டும் 'The Playbook' நிகழ்ச்சியின் தொகுப்பாளர், எழுத்தாளர், தொழில் முனைவர் என பன்முக அடையாளம் கொண்டவர் டேவிட் மெட்சர். சத்குருவின் பணிகளுக்காக டேவிட் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். மேலும் தனது உரையாடலில், ஒரு யோகியாக இருப்பதன் அர்த்தம் என்ன, யோகாவை தினசரி வாழ்க்கையின் ஒரு பாகமாக எப்படி இணைத்துக்கொள்வது என்ற கேள்விகளுடன், ஒருவர் தனது விதியை தானே உருவாக்கிக்கொள்வது எப்படி என்றும் கேட்டறிந்தார்.

Clubhouse-ல் சத்குருவுடன் உரையாடல்

28 ஏப்ரல்
2021

"ஷெர்பா" எனும் பிராண்டு மூலம் நுகர் பொருள் பிராண்டுகள், முகவர், நிதியம் ஆகிய பிரிவுகளில் ஆலோசகர், முதலீட்டாளர், தலைமைபண்பு என பன்முக அடையாளம் கொண்டவர் கேட் கோல். சமூக ஊடகங்களில் கலந்துரையாடலை ஊக்குவிக்கும் சமீபத்திய வரவான Clubhouse-ல் இவர் சத்குருவுடன் உரையாடினார். இக்கணத்தின் கர்மாவை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்வது, சமநிலை, இக்கணத்தில் வாழ்ந்திருப்பது, இன்றைய சமூகத்தில் உணர்ச்சிபூர்வமாக இருப்பது ஏன் குறைவாகப் பார்க்கப்படுகிறது, மற்றும் விடுதலையின் உண்மையான அர்த்தம் போன்ற மிகப் பரவலான வெவ்வேறு கேள்விகளுக்கும் சத்குரு இதில் பதிலளித்தார்.

சத்குருவுடன் சத்சங்கம் - ஈஷா கோவிட் செயல்பாடு

29 ஏப்ரல்
2021

இணையதளம் மூலம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு சத்சங்கத்தில், இந்தியாவில் கோவிட்-19 இரண்டாவது அலை குறித்துப் பேசிய சத்குரு, முன்களப் பணியாளர்கள், மருத்துவமனைகள், மயானங்கள் மற்றும் பொதுமக்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கான ஈஷாவின் வெவ்வேறு வழிமுறைகள் பற்றி எடுத்துரைத்தார். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பயிற்சிகளை இயன்ற அளவுக்கு அதிகமான மக்களுக்கு வழங்குமாறு ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்தியதுடன், இந்த சவாலான சூழலைக் கடந்து முன்னேறுவதற்கு, விழிப்புணர்வுடனும் பொறுப்போடும் நடந்துகொள்வதுதான் ஒரே வழி என்பதை மீண்டும் வலியுறுத்தினார்,

விருது வென்ற புத்தக ஆசிரியர் ஜோனாதன் ஃபீல்ட்ஸ், சத்குருவுடன் உரையாடல்

30 ஏப்ரல்
2021

விருது வென்ற எழுத்தாளர், ஊடகத் தயாரிப்பாளர் மற்றும் தொழில் முனைவோர் ஜோனாதன் ஃபீல்ட்ஸ் தொகுத்தளித்த The Good Life Project Podcast என்ற நிகழ்ச்சியில் கர்மா குறித்த படைப்பியல் கேள்விகளுக்குள் ஆழமாகச் சென்றார். ஒரு எழுத்தாளருக்கே உரிய இயல்பான ஆர்வத்துடன், சத்குருவின் வார்த்தைகளை உள்வாங்கியவராக, ஜோனாதன் தான் ஒரு கூர்மையான கவனிப்பாளர் என்பதையும் நிரூபித்தார். சத்குரு தமது ஆரம்பகால வாழ்க்கை, ஞானமடைந்த தருணம் மற்றும் தன்னுடைய பரவச அனுபவத்தை இந்த உலகத்துடன் பகிர்ந்துகொள்ளும் ஏக்கம் குறித்து நிகழ்ச்சியின்போது பகிர்ந்து கொண்டார்.

புகழ்பெற்ற ஆய்வு அறிவியலாளர்கள் சத்குருவுடன் கலந்துரையாடல்

5 மே
2021

Dr. டேவிட் வாகோ, வாண்டர்பில்ட் பல்கலைக் கழகத்தில் இணை ஆராய்ச்சி பேராசியராகவும், ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல்-ல் இணை ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிகிறார். Dr. ஹொராஷியோ டி லா இக்லெசியா, யுனிவர்சிட்டி ஆஃப் வாஷிங்டனில் உயிரியல் துறை பேராசியராகப் பணிபுரிகிறார். அதிநவீன அறிவியல் மற்றும் யோகா என செவிக்கு விருந்தாக அமைந்த இந்த ஆர்வமூட்டும் கலந்துரையாடலில், சத்குருவும் இரு முன்னணி ஆராய்ச்சியாளர்களும், மனித அனுபவத்தில் சந்திரனின் தாக்கம் குறித்து விவாதித்தனர்.

உலகளாவிய பேச்சாளர் வுசி தெம்பெக்வயோ, சத்குருவுடன் உரையாடல்

10 மே
2021

உண்மை எனப்படுவது எப்போதாவது முழுமையாக இருக்க முடியுமா? நமது உண்மையான அடையாளத்தை நாம் எப்படி காண்பது? ஒரு மனிதர் உண்மையில் எதைத் தேடுகிறார்? நீடித்த பூரணத்துவம் என்ற ஒரு விஷயம் இருக்கிறதா? காலத்தால் அழியாத உண்மையைத் தேடும் மனிதனின் தாகம் என சத்குருவிடம் கேட்பதற்காக துளைத்தெடுக்கும் ஒரு கேள்வித் தொகுப்பை தயார்செய்து வந்திருந்தார், தென் அமெரிக்க தொழில்முனைவோரும், உலகளாவிய பேச்சாளரும், சிறப்பாக விற்பனையாகும் புத்தக வரிசை எழுத்தாளருமாகிய வுசி தெம்பேக்வாயோ.

சன் ரைஸ் ஆஸ்திரேலிய தொலைகாட்சி நிகழ்ச்சியில் சத்குருவின் நேர்காணல்

10 மே
2021

டேவிட் கோச் மற்றும் நடாலி பார் இணைந்து தொகுத்தளிக்கும் பிரபலமான ஆஸ்திரேலிய தொலைக்காட்சியின் காலை நேர சன் ரைஸ் நிகழ்ச்சியில், சத்குருவிடம், ஒருவரது கர்மாவை மாற்றத்துக்கு உள்ளாக்குவது குறித்தும் மற்றும் நல்லமுறையில் எப்படி வாழ்வது என்பதற்கான வழிமுறைகளைப் பற்றியும் கேட்டனர். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கேற்ப ஐந்து நிமிட உரையாக இருந்தாலும், சத்குரு ஏற்படுத்திய தாக்கம் அழுத்தமாக இருந்தது.

அமெரிக்க எழுத்தாளர் எட்மை லெட், சத்குருவுடன் உரையாடல்

14 மே
2021

உலகளாவிய பேச்சாளர், சிறப்பாக விற்பனையாகும் புத்தக வரிசை எழுத்தாளர் மற்றும் தொழில்முனைவர் எட் மைலெட் இணையதள உரையாடலில் சத்குருவுடன் இணைந்து, மகிழ்ச்சி தேடல், நிலையாமை, தன்னைத்தானே பெரிதாக எடுத்துக்கொள்வது மற்றும் கர்மா உங்களுக்கு எப்படி வல்லமை தருகிறது என்பது குறித்து விவாதித்தார்.

சுற்றுச்சூழலியல் செயல்பாட்டாளர் டெரி டம்மினென், சத்குருவுடன் உரையாடல்

18 மே
2021

கலிஃபோர்னியா சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் முன்னாள் செயலரும், லியானார்டொ டிகாப்ரோ அறக்கட்டளையின் முன்னாள் தலைமைச் செயலாளருமான, டெரி டமினென் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகக் குரலெழுப்பும் உலகின் மிக முக்கியமானவர்களுள் ஒருவர். சத்குருவுடன் இவர் மேற்கொண்ட உரையாடலில், யாருக்கும் அதிகம் பரிச்சயமில்லாத வழியில் கர்மா மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையிலான தொடர்பு குறித்தவைகள் இனங்காணப்பட்டன.

அமெரிக்க எழுத்தாளர் ஃபிலிப் கோல்ட்பெர்க், சத்குருவுடன் உரையாடல்

21 மே
2021

ஃபிலிப் கோல்ட்பெர்க், பாராட்டுக்குரிய ஒரு எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். கர்மாவின் நிரூபணம் குறித்து கேள்வி எழுப்பிய இவர், சந்தேக பார்வையில் கர்மாவை அணுகும் தன்மையுடன் சத்குருவுடன் தனது கலந்துரையாடலைத் தொடங்கினார். கர்மா குறித்த தவறான புரிதல்கள் குறித்தும், கர்மா என்பது உடலில் ஏற்படும் அழுத்தமாக பதிவு செய்யப்படுகிறதா என்ற கேள்விகளுடன், கர்மா கோல்ஃப் விளையாட்டுக்கு ஒப்பானது போன்ற பல்வேறு ஆர்வமூட்டும் தலைப்புகள் உரையாடலின் போக்கில் இடம் பெற்றன.