ஈஷா ரெசிபி

கமகமக்கும் சைடு டிஷ்
மாங்காய் வேப்பம்பூ பச்சடி

தேவையான பொருட்கள்

பெரிய மாங்காய் - 1

வேப்பம்பூ - 1 கைப்பிடி

புளி - நெல்லிக்காய் அளவு

வெல்லம் - சுவைக்கேற்ப

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

கடுகு - ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

  1. புளியை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்; அதை கரைத்து, பின்னர் சாறை ஒரு சல்லடை மூலம் வடிகட்டி எடுக்கவும். அதை அப்படியே தனியே வைக்கவும்.
  2. மாங்காயை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
  3. ஒரு கடாயை சூடாக்கி, புளிச் சாறு சேர்த்து, அதில் மஞ்சள் தூள் கலந்து கொதிக்க வையுங்கள்.
  4. மாங்காய் துண்டுகளைச் சேர்த்து மென்மையாகும் வரை வேகவைக்கவும். அதில் கொஞ்சம் வெல்லத்தை சேர்த்து கிளறவும்.
  5. சிறிது நேரம் நன்றாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
  6. ஒரு வாணலியில் சிறிது எண்ணெயை சூடாக்கி, அதில் வேப்பம்பூ, உப்பு மற்றும் மிளகாய் தூளை சேர்க்கவும்; மிதமான வெப்பத்தில் வதக்கவும்.
  7. வதக்கிய வேப்பம்பூவை எடுத்து ஆற வைக்கவும். பின்னர் அவற்றை கொரகொரப்பான பதத்தில் பொடியாக அரைக்கவும்.
  8. வேப்பம்பூ பொடியை, வேகவைத்த மாங்காய் மற்றும் புளி கலவையில் சேர்க்கவும்.
  9. ஒரு வாணலியில் எண்ணெயை மிதமான வெப்பத்தில் சூடாக்கவும்; கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  10. தாளித்த கடுகு மற்றும் கறிவேப்பிலையை பச்சடியில் சேர்த்து சுவைகூட்டவும். உப்பு மற்றும் வெல்லத்தை ருசிக்கேற்ப சரிசெய்துகொள்ளுங்கள்.