பிற மொழிகளில் வாசிக்க:
English | Hindi

அடிமையானேன்

மலரின் நறுமணம்
மெல்லிய தென்றலின் குளுமை
இரவின் மகத்தான வான்வெளி
இடைவிடாமல் துடிக்கும் இதயம்
இதமாய் இயங்கும் சுவாசம் -
எளிமையாய் தோன்றும் நிகழ்வுகள்
இவை யாவும் என்னை
தீவிரத் துடிப்போடு வாழும்
உயிராக ஆக்கும்.
எளிமையின் விந்தையின்
இந்த அற்புதக்கலவை
எண்ணமற்ற மனமற்ற
அனைத்துக்கும் அப்பாற்பட்ட
அறிவின் விளைவாய் மட்டுமே
இருக்க முடியும்
அது என் சொந்த வாழ்விலேயே
ஒரு அடிமையென
ஆக்கியது என்னை
அகங்காரமில்லா ஒரு வாழ்க்கை
சுய ஏக்கங்களில்லா ஒரு வாழ்க்கை
எல்லையற்ற ஒன்றின் விருப்பத்தால்
கைப்பற்றப்பட்ட ஒரு வாழ்க்கை
நித்தியமான இந்த ஆலையின்
சாந்தமான நெருப்பு என்னை
சுட்டெரிக்கவில்லை, மாறாக
ஆனந்தத்தில் திளைக்க செய்து
அடிமையென ஆக்கியது

- சத்குரு
பகிருங்கள்