ஈஷா சமையல்

கம்பு ரொட்டி

தேவையான பொருட்கள்:

கம்பு மாவு - 1 கப் (பிசைவதற்கு கூடுதலாக சில மேஜைகரண்டி கம்பு மாவு)

மிளகு பொடி - ½ தேக்கரண்டி

தனியாப் பொடி - ½ தேக்கரண்டி

ஜீரகப் பொடி - ½ தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

உப்பு - சுவைக்கேற்ப

நெய் - தேவையான அளவு

செய்முறை:

 1. ஒரு பாத்திரத்தில் கம்பு மாவை எடுத்துக்கொண்டு, அதனுடன் பொடி வகைகளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 2. ஒரு வாணலியில் 1 கப் தண்ணீருடன் சிறிது உப்பு கலந்து கொதிக்க விடவும்.
 3. பிறகு ஸ்ட்வ்வை குறைவான தீயில் வைத்து, கொதிக்கும் நீரில் கம்பு மாவை சேர்த்து கிளறவும்.
 4. பின்னர் வாணலியை மூடி வைத்து, 1 நிமிடம் வரை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
 5. பிறகு ஸ்டவ்வை அணைத்து விடவும். கம்பு மாவை நன்றாக கலந்து விட்டு, அதனை நன்றாக ஆற வைக்கவும்.
 6. கம்பு மாவு பிசுபிசுப்பாக இருப்பதால், அதனை பிசையும்போது, கைகளில் சிறிது எண்ணெய் தடவிக்கொள்ளுங்கள்.
 7. வாணலியிலிருந்து கம்பு உருண்டையை எடுத்து, கம்பு மாவு பொடி தூவிய ஒரு தட்டையான பாத்திரத்தில் வைத்து, 5-8 நிமிடங்களுக்கு நன்றாக பிசையவும். இது ரொட்டி செய்யும்போது விரிசல் விழாமலும், ரொட்டி மென்மையாக இருக்கவும் உதவும்.
 8. மாவிலிருந்து சிறிதளவு எடுத்து, உருண்டையாக செய்து உள்ளங்கைகளினால் தட்டையாக்கிக் கொள்ளவும்.
 9. மாவு உருண்டையை தட்டையாகத் தட்டி ரொட்டி செய்ய முடியாமல் பிசுபிசுப்பாக இருந்தால், சிறிது கம்பு மாவு பொடியை தூவிக் கொள்ளவும்.
 10. தோசைக் கல்லை சூடாக்கி, பின் மிதமான சூட்டில் வைத்து, சிறிது நெய் விட்டு, இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேகவிடவும். தேவைக்கேற்ப நெய் சேர்த்துக் கொள்ளவும்.
 11. ஒவ்வொரு முறை ரொட்டி செய்யும்போதும், மாவு உருண்டையை நன்றாக பிசைந்து கொள்ளவும். இது ரொட்டி மிருதுவாக இருப்பதற்கு உதவும்.
பிடித்தமான காய்கறி கூட்டுடன் பரிமாறவும்.