பிற மொழிகளில் வாசிக்க:
‍English | Hindi

நானோ ஒருவன் நீங்களோ பல கோடி

நானோ ஒருவன்தான், நீங்களோ பல கோடி
உங்கள் அன்புக்கு நான் எப்படி ஈடுகொடுக்க.
உங்கள் அன்பினால் என் உள்ளம் உருகுகிறது
ஆம், நான் எவரும் இல்லாமலும் நலமாக இருப்பேன்
ஆனால் எவருக்கும் வெளிச்சமாக இல்லாத
ஓர் ஒளிவிளக்காய் இருந்திருப்பேன்.
பறவையும் தேனீயும் கவனிக்காத
ஒரு காட்டுப்பூவாக நான் இருந்திருப்பேன்
எனினும் உயிர் ஒளிர்ந்தபடி நறுமணத்தோடு இருக்கும்.

ஒளிர்ந்து இந்த ஆனந்தத்தையும் அன்பையும்
பரப்புவதால் ஏற்படும் தாங்கமுடியாத மனநிறைவை,
சூரியன் விலகும்போதும் ஒளிரும் நிலவைப்போன்ற
பிரதிபலிப்பை கண்டு பிரமிக்கிறேன்.

நான் உங்களை நேசிக்கிறேன் என்று சொல்லவா - அது போதாது
ஏனெனில் நானோ ஒருவன், நீங்களோ பல கோடி

Share This