
¾ கப் சிவப்பு அரிசி (அல்லது உங்கள் விருப்பப்படி ஏதேனும் தானியம்)
400 கிராம் டோஃபு அல்லது பன்னீர்
200 கிராம் பூசணி, பெரிய சதுர துண்டுகளாக நறுக்கப்பட்டவை
1கப் பச்சை பீன்ஸ், நறுக்கப்பட்டவை
1 முதல் 2 மேசைக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
நிலக்கடலை சாஸுக்காக:
¼ கப் நிலக்கடலை வெண்ணெய்
¼ கப் ஆரஞ்சுப் பழச்சாறு
சிறிதளவு மெல்லிய துண்டுகளாக வெட்டப்பட்ட இஞ்சி
3 மேசைக்கரண்டி நல்லெண்ணெய்
2 மேசைக்கரண்டி சோயா சாஸ் அல்லது திரவ அமினோஸ்
2 முதல் 3 மேசைக்கரண்டி வெல்லப்பாகு அல்லது தேன் (சுவைக்கேற்ப)
½ முதல் 1 தேக்கரண்டி மிளகாய் தூள் (சுவைக்கேற்ப)
¾ தேக்கரண்டி இமயமலை இளஞ்சிவப்பு உப்பு (அல்லது உங்கள் விருப்பப்படி வேறொரு உப்பு)
பச்சை காய்கறிகளுக்காக:
1½ கப் பீட்ரூட், துருவப்பட்டது
1½ கப் முட்டைக்கோஸ், துருவப்பட்டது
1½ கப் கேரட், துருவப்பட்டது
½ கப் முள்ளங்கி, துருவப்பட்டது
1 அவகோடோ, நறுக்கப்பட்டது
50 கிராம் புதிய மைக்ரோகிரீன் கீரைகள் (முள்ளங்கி, கடுகு அல்லது சூரியகாந்தி போன்றவற்றின் கீரைகள்)
குறிப்பு: புதிய மைக்ரோகிரீன் கீரைகள் சுவைக்காக மட்டுமல்லாமல், உங்கள் காய்கறி கிண்ணத்திற்கு ஊட்டச்சத்தையும் அளிக்கின்றன. முள்ளங்கி, கடுகு அல்லது சூரியகாந்தி போன்றவற்றில் முதலில் முளைக்கும் ஒன்றிரெண்டு இலைகள் மைக்ரோகிரீன் எனப்படுகின்றன. இந்த நுண்ணிய கீரைகள் அத்தியாவசிய வைட்டமின்களையும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்களையும் கொண்ட ஆற்றல் மையமாக உள்ளன. மேலும், உங்கள் வீட்டிலேயே இந்த மைக்ரோகிரீன் கீரைகளை நீங்கள் எளிதாக வளர்க்க முடியும். இதன்மூலம் உங்கள் அன்றாட உணவின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த கீரைகளை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.