நடப்புகள்

பாலி மற்றும் கம்போடியாவில் சத்குருவுடன் மிஸ்டிக் ம்யூசிங்ஸ்

தென்கிழக்கு ஆசியாவில் சத்குருவுடன் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் பற்றிய 10 நாட்கள் தேடல் - மிஸ்டிக் மியூசிங்ஸின் முதல் பிரதியின் ஒரு குறுங்காணல் இது. நிகழ்ச்சியின்போது, ​​பங்கேற்பாளர்கள் சத்குருவுடன் நெருக்கமான சத்சங்கங்களில் பங்கேற்கவும், சக்திவாய்ந்த தியானங்களை உணரவும், புனிதமான கோவில்கள் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களை ஆய்ந்து உணரவும் தனித்துவமிக்க வாய்ப்பைப் பெற்றனர்.

மிஸ்டிக் மியூசிங்ஸ் - தென்கிழக்கு ஆசியாவில் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் பற்றிய 10 நாட்கள் தேடல் - இந்நிகழ்ச்சிக்காக பாலியில் தரையிறங்கிய சத்குரு அவர்கள், இந்தோனேசியா குடியரசின் சுற்றுலா மற்றும் ஆக்கப் பொருளாதாரத்துறை அமைச்சர் திரு. சந்தியாகா யூனோ மற்றும் அவரது குழுவினர், இந்தோனேசியாவின் பாலியில் உள்ள இந்திய தூதரக ஜெனரல் டாக்டர். ஷஷாங்க் விக்ரம் ஆகியோரால் மிகவும் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

பங்கேற்பாளர்கள் பாலி மக்களின் பாரம்பரிய வரவேற்பைப் பெறுகிறார்கள்.

சத்குரு அவர்கள் பாலியில் உபுத் நகரை வந்தடைந்ததும் பங்கேற்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் உற்சாகமாக வரவேற்கப்படுகிறார்.

மிஸ்டிக் மியூசிங்ஸ் நிகழ்ச்சி சத்குருவுடன் ஒரு நெருக்கமான சத்சங்கத்துடன் தொடங்குகிறது

சத்குரு தனது உற்சாகமூட்டும் வார்த்தைகளால் முன்னெப்போதும் நிகழ்ந்திராத முதன் முதல் மிஸ்டிக் மியூசிங்ஸ் நிகழ்ச்சிக்கான தொனியை அமைக்கிறார்: “இது உங்கள் நிகழ்ச்சி; இது எனது நிகழ்ச்சி அல்ல. நாம் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடத்தில் இருக்கிறோம்; எங்கு பார்த்தாலும் அழகான கோவில்களும், கலாச்சாரம், பாரம்பரியம், ஆம், கடைத்தெருக்களும் இங்கே நிறைந்துள்ளன. நீங்கள் இங்கே என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும், நான் தயாராக இருக்கிறேன். சிறிய விஷயங்களுக்காக தனது வாழ்க்கையைத் தூக்கி எறியத் தயாராக இருக்கும் ஒருவருடன் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இதைக் கருத்தில் கொண்டு நீங்கள் முடிவு செய்யுங்கள்.”

செழுமையான பாலி இனக் கலாச்சாரத்தைப் பற்றி பேசும்போது சத்குரு இவ்வாறு விளக்கினார்: “பாலி மிகவும் அழகான ஒரு இடம், இயற்கையாக மட்டும் அல்ல, நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இங்கே ஒரு பழமையான கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எப்படி இருந்ததோ அதுபோன்ற ஒரு கலாச்சாரம். ஆனால் அது அதன் சொந்த கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. மொழி தன்னை பாலினீஸ் மொழியாக மாற்றிக்கொண்டது. பல பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் ஒரு கால கட்டத்தில் தங்களை மாற்றிக்கொண்டன. ஆனால் அடிப்படையில், அது இந்திய கலாச்சாரம் அல்லது இந்திய நாகரிகம் தன்னிடத்திலிருந்து விலகி தனக்கென ஒரு சொந்த உருப்பெற்றது. இந்தியாவில் அது பல விதங்களில் கைப்பற்றப்பட்டு, சீரழிக்கப்பட்டு, அதன் நாகரிகத்தின் பல அம்சங்களை இழந்ததைப்போல் அல்லாமல், இங்கே ஒரு தீவில், அது தன்னைப் பாதுகாத்துக்கொண்டு, அதன் சொந்த இயல்பில் பரிணமித்தது, இது மிக மிக அழகானதும் அற்புதமானதும் கூட.

தன்னார்வலர்களும் பங்கேற்பாளர்களும் கிழக்கு பாலியில், அகுங் மலையின் சரிவுகளில் உள்ள பெசாகிஹ் கோவில் வளாகத்தை தரிசிக்கின்றனர்.

பெசாகிஹ் கோவில் வளாகத்தின் உள்ளே

பெசாகிஹ் கோவிலின் மேரு அமைப்பு

பாலியில் முண்டுக் அருகே. தம்பிலிங்கன் ஏரியில் உள்ள புரா தம்லிங்கன் கோவில்

உபுத் அரண்மனை, அதிகாரப்பூர்வமாக பூரி சரேன் அகுங் என்று அழைக்கப்படும் இது, உபுத் அரச குடும்பத்தின் முன்னாள் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.

சத்குரு, ராதே மற்றும் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் உபுத் நகரின் உயிரோட்டமிக்க தெருக்களில் உலாவுகின்றனர்.

பங்கேற்பாளர்கள் புரா காம்புஹான் சலா கோவிலில் பாரம்பரிய சுத்திகரிப்பு சடங்கில் பங்கேற்கின்றனர்.

பாலியின் தென்கோடியான உங்காசனில் சிறப்பான வரவேற்பு காத்திருக்கிறது

சத்குரு மாலை நிகழ்வுக்கு செல்லும் வழியில்

கனவினை ஒத்த தீவிர பாலினீஸ் கெகாக் நெருப்பு நடன அரங்கேற்றம்

சத்குருவும் ஹனுமானாக நடித்த கலைஞரும் நிகழ்ச்சிக்குப் பிறகு பகிர்ந்துகொள்ளும் ஒரு மென்மையான தருணம்

பங்கேற்பாளர்கள் சத்குருவுடன் மனமயக்கும் இசை, தியானம் மற்றும் சக்திமிக்க செயல்முறைகளை உணர்கின்றனர்.

மிஸ்டிக் மியூசிங்ஸ் பங்கேற்பாளர்கள் சத்குருவுடன் சக்திவாய்ந்த தியான செயல்முறையை அனுபவித்து உணர்கின்றனர்

சத்குரு மிஸ்டிக் மியூசிங்ஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு மாற்றங்களைக் கொணரும் ஓர் அனுபவரீதியான செயல்முறையை நிகழ்த்துகிறார்.

பாலியில் இறுதி நாள் - இந்தியப் பெருங்கடலின் அமைதியான கடற்கரையில் சூரிய ஒளியில் நனைந்த வண்ணம் சத்குருவுடன் கூடியிருந்த தருணங்கள்.

கம்போடியாவில், அன்பும் பக்தியும் பெருக சத்குருவை வரவேற்கும் தன்னார்வலர்கள்.

கம்போடியாவின் பிரதமருக்கு சத்குரு தனது நன்றியைத் தெரிவிக்கிறார்: ”கம்போடியாவின் பிரதம மந்திரி ஹன் மானெட் அவர்களே, தங்களின் அழைப்பு கடிதத்திற்கும் வரவேற்பிற்கும் நன்றி. இந்த தேசத்தின் நினைவுச் சின்னங்களும், கலாச்சாரமும் மனித புத்திகூர்மைக்கும் உறுதிப்பாட்டிற்குமான ஒரு பிரமிக்கவைக்கும் அஞ்சலியாக உள்ளன. - சத்குரு

சுற்றுலா அமைச்சர் சத்குருவை கம்போடியா ராஜ்ஜியத்திற்கு வரவேற்கிறார். கலாச்சார ஆய்வு மற்றும் ஆரோக்கியத்திற்கான மையமாகத் திகழ்வதற்கான கம்போடியாவின் திறனை சத்குரு மேற்கோள் காட்டுகிறார்: ”கம்போடியா கலாச்சார ஆய்வு மற்றும் ஆரோக்கியத்திற்கான மையமாக சாத்தியக்கூறுகளால் நிரம்பி உள்ளது. கம்போடியாவில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் சோக் சோகனை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.” - சத்குரு

சத்குருவுடன் மிஸ்டிக் மியூசிங்ஸ் நிகழ்ச்சி கம்போடியாவில் நிகழ்ந்த ஐந்து நாட்களில், பங்கேற்பாளர்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தலமான அங்கோர் உட்பட பல புராதனக் கோவில்களை ஆய்ந்து உணர்கின்றனர்.

கம்போடியாவின் அங்கோர் வளாகத்தில் உள்ள பேயோன் கோவில் அதன் வியப்பூட்டும் சிரிக்கும் கல் முகங்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. கோவிலின் கோபுரங்களை அலங்கரிக்கும் 200 க்கும் மேற்பட்ட இந்த அமைதியான முகங்கள், கலை மற்றும் ஆன்மீகத்தின் குறுக்குவெட்டுகளைப் பிரதிபலிக்கின்றன.

ஒவ்வொரு மாலையும், பங்கேற்பாளர்கள் சத்குருவுடன் சத்சங்கம் மற்றும் தியான செயல்முறைகளால் ஆசீர்வதிக்கப்பட்டனர்.

புராஜெக்ட் சம்ஸ்கிருதி கம்போடிய நடனக் குழுவுடன் இணைந்து ஒரு மனங்கவர் நிகழ்ச்சியை வழங்குகிறது.

கம்போடியாவின் அங்கோர் வளாகத்தில் உள்ள டா ப்ரொஹ்ம் (Ta Prohm) என்ற கோவில், அதன் பழங்கால கல் இடிபாடுகளுடன் பின்னிப் பிணைந்து, இயற்கை மற்றும் வரலாற்றின் மனங்கவர் கலவையை உருவாக்கும் மாபெரும் மர வேர்களுக்குப் புகழ்பெற்றது.

பங்கேற்பாளர்கள் கம்போடியாவில் கடைசி நாளில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

முதன்முதலாக கம்போடியாவில் நிகழ்ந்த மிஸ்டிக் மியூசிங்ஸ் நிகழ்ச்சி, சத்குரு ஒவ்வொரு பங்கேற்பாளரையும் தனித்தனியாக ஆசீர்வதிப்பதுடன் நிறைவு பெறுகிறது.