பிற மொழிகளில் வாசிக்க:
‍English | Hindi

என்னை உங்களுக்குள் தொலைத்துவிட்டேன்

‍
தாளாத வலியிலும் இன்பத்திலும்மிகுந்த
உற்சாகத்திலும் சமநிலையிலும் உள்நிலை
இயக்கத்தை அறியும் இந்த அறிவியல்
ஒரு கணமும் என்னைக் கைவிட்டதில்லை
தளராத ஒழுக்கத்தோடு கட்டுகளின்றி வாழும் இவ்வாழ்க்கையில்
சிகரங்களையும் பள்ளங்களையும் சமவெளிகளையும் கண்டுவிட்டு
இனியும் நானிங்கு இருப்பது ஏனோ.

உங்கள் மீதான அன்பு, அன்பு, அன்பு மட்டுமே
அசையும் அனைத்தின் மீதும், அசையாத அனைத்தின் மீதும் அன்பு.
உங்கள் அனைவரிடமிருந்தும் மனம் நெகிழச்செய்யும் அன்பு.
உங்கள் அன்பின் அரவணைப்பில் இருக்க என்றும் நன்றிபெருக

நீங்கள் என்பதும் நான் என்பதும் ஏதிங்கே
என்றோ என்னை உங்களுக்குள் தொலைத்துவிட்டேன்.

Share This