நடப்புகள்

அவசரகால மூளை அறுவை சிகிச்சையிலிருந்து சத்குருவின் மீட்சி – ஒரு பார்வை

சத்குருவின் மூளை அறுவை சிகிச்சை குறித்த செய்தி வெளியானபோது, உலகம் அனைத்திலும் அவரது பணிகளால் தொடப்பட்ட பல லட்சக்கணக்கானவர்களிடையே கவலையின் அதிர்வலை பரவியது. காத்திருப்பின் மௌனத்துக்கு இடையே சாதகமான செய்திக்கான நம்பிக்கையின் இழையைப் பற்றியவாறு, பூமியின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் அவரைக் குறித்த சமீபத்திய தகவலுக்காகக் காத்திருந்தனர். இந்த அன்பு மற்றும் பக்தியின் பிரவாகம், சத்குருவின் பரவலான தாக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. பின்வரும் விரிவான விளக்கத்தில், அறுவை சிகிச்சையின் அவசரத் தருணத்தில் இருந்து, அமைதி தவழும் ஈஷா யோக மையத்தின் வாசல் வரையில் சத்குரு மேற்கொண்ட பயணத்தின் – சத்குருவின் நீடித்த அர்ப்பணிப்பு, தளராத வேகம், மற்றும் உள்ளார்ந்த வலிமையின் அடையாளமான ஒரு பயணம் – முக்கியமான கட்டங்களை நாம் தொகுத்து வழங்குகிறோம்.

புதுதில்லியில் சத்குரு விரைவான மீட்சியின் பாதையில்

மார்ச் 20

சத்குரு கடந்த நான்கு வாரங்களாகவே கடுமையான ஒரு தலைவலியைப் புறக்கணித்த நிலையில், மஹாசிவராத்திரி உள்ளிட்ட அவரது அயரவைக்கும் தினசரி அலுவல்களில் ஓய்வில்லாமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். மார்ச் 15 அன்று எடுக்கப்பட்ட MRI சோதனையானது, மூளையில் பெருமளவு இரத்தக்கசிவு இருந்ததைக் காண்பித்தது. இருப்பினும், சத்குரு இந்தியா டுடே கான்க்ளேவ்-ல் அவரது அமர்வு உள்ளிட்ட தனது நிகழ்ச்சிகளை ரத்துசெய்ய மறுத்து, வீர்யம் மிகுந்த வலி நிவாரணிகள் மற்றும் அமைதிப்படுத்தும் மருந்துகளின் உதவியுடன் அவற்றில் பங்கேற்றார்.

17 ஆம் தேதி காலையில், சத்குரு மருத்துவமனைக்கு அவசரமாக செல்லும்படி நேர்ந்ததில், அங்கே அவரது மூளையில் உயிருக்கு அச்சுறுத்தலான வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

17 ஆம் தேதியன்று ஒரு அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்குப் பிறகு, இப்போது சத்குரு சீரான முன்னேற்றத்துடன், மிக நன்றாக குணமடைந்து வருகிறார்.

அப்போலோ மருத்துவமனையின் நரம்பியலாளர் மருத்துவர். வினித் சூரி கூறினார், “எங்களால் செய்யமுடிந்ததை நாங்கள் செய்துள்ளோம், ஆனால் நீங்கள் உங்களையே குணப்படுத்திக் கொள்கிறீர்கள் என்று அவருடன் நாங்கள் நகைச்சுவையாகக் கூறினோம். நாங்கள் பார்க்கும் முன்னேற்றத்தின் அளவு எங்கள் எதிர்பார்ப்பையும் மீறியதாக உள்ளது. இப்போது அவர் மிகவும் நலமாக உள்ளார். அவரது மூளை, உடல் மற்றும் முக்கிய அளவுருக்கள் சாதாரணமாக உள்ளதுடன் அவர் சீராக முன்னேறுகிறார்.”

அவசரகால மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகு சத்குரு மருத்துவமனையில் இருந்து வெளியில் அனுப்பி வைக்கப்பட்டார்

மார்ச் 27

சத்குருவின் ஆரோக்கியம் குறித்த தகவல்

17 மார்ச் 2024 அன்று மேற்கொள்ளப்பட்ட அவசரகால மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இன்று சத்குரு மருத்துவமனையில் இருந்து வெளியில் அனுப்பிவைக்கப்பட்டார். இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனை, புதுதில்லியில் செய்துகொண்ட மூளை அறுவை சிகிச்சைக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பிருந்தே அவர் கடும் தலைவலியை அனுபவித்துக்கொண்டு இருந்திருக்கிறார்.

அப்போலோ மருத்துவமனைகள் குழுவின் இணை நிர்வாக இயக்குனர், மருத்துவர். சங்கீதா ரெட்டி, மருத்துவமனையில் சத்குருவைச் சந்தித்த பின்னர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார், “அவரது மீண்டெழுதலும், குணமடைதலும் குறித்து மருத்துவர்கள் திருப்தி வெளியிட்டுள்ளனர். சத்குரு, குணமடைந்து கொண்டிருக்கும் நிலையில்கூட, அதே உற்சாகத்தைத் தக்கவைத்திருக்கிறார். உலகளாவிய நலனுக்கான அவரது அர்ப்பணிப்பு, அவரது கூர்மையான மனம் மற்றும் அவரது நகைச்சுவை உணர்வு அனைத்தும் அப்படியே உள்ளன. அவரது ஆரோக்கியம் குறித்து விசாரித்துக்கொண்டிருக்கும் அனைத்து லட்சக்கணக்கான மக்களுக்கும் இது நல்ல செய்தி என்று நான் எண்ணுகிறேன்.”

Dr.வினீத் சூரி, Dr.ப்ரணவ் குமார், Dr.சுதீர் த்யாகி, Dr.எஸ். சாட்டர்ஜி, மற்றும் அப்போலோ மருத்துவமனைகளின் ஒட்டுமொத்த குழுவுக்கும், அவர்களது பிரத்யேகமான ஆதரவுக்கும், கவனிப்புக்கும், லட்சக்கணக்கான தன்னார்வலர்களும், உலகெங்குமுள்ள மக்களும் வெளிப்படுத்தும் நன்றியுணர்வில், ஈஷா அறக்கட்டளை இணைந்துகொள்கிறது.

இந்தத் தருணத்தில் ஒவ்வொருவரிடம் இருந்தும் சத்குருவின்பால் பொழியப்பட்ட அன்புக்கும், ஆதரவுக்கும் அறக்கட்டளையும் அளவற்ற நன்றி பாராட்டுகிறது.

தில்லியின் அப்போலோ மருத்துவமனையை விட்டு சத்குரு வெளியேறுகையில் அவரைக் காண்பதற்காக அன்பு பெருக்கெடுக்கக் காத்திருந்த கண்கள்

மார்ச் 27

இயற்கையின் மடியில் மீண்டும் சத்குரு

மார்ச் 27

முழுமையாக குணமடைதலுக்கான பாதையில்

மார்ச் 27

சத்குருவின் ஆரோக்கியம் ஏறுமுகத்தில்

மார்ச் 27

உற்சாகத்தின் உச்சத்தில்!

மார்ச் 27

எளிமையான மாலை நேர உணவுடன் சத்குரு ஊட்டம் பெறுகிறார்

மார்ச் 27

சத்குரு ஒரு இதயபூர்வமான காலை உணவை அனுபவிக்கிறார்

மார்ச் 29

சத்குரு கோவை திரும்புகையில் தன்னார்வலர்கள் வீதிகளில் வரிசைகட்டி நிற்கின்றனர்

ஏப்ரல் 1

சத்குரு ஈஷா யோக மையம் திரும்புகிறார்

ஏப்ரல் 1

சத்குரு குணமடைந்ததை ஈஷா யோக மையத்தில் தன்னார்வலர்கள் கொண்டாடுகின்றனர்

ஏப்ரல் 1