தேவையான பொருட்கள்
2 பெரிய மாம்பழங்கள்
1 கப் தேங்காய் பால் (அல்லது பாதாம்/முந்திரி பால், உங்கள் விருப்பத்தைப் பொருத்து)
2 கப் தேங்காய்ப்பால் தயிர் (அல்லது வழக்கமான தயிர்)
2 தேக்கரண்டி தேன் (அல்லது சுவைக்குத் தேவையான அளவுக்கு)
1 கப் வால்நட் துண்டுகள்
¼ கப் வெல்லம் (அல்லது இயற்கையான கரும்பு சர்க்கரை)
1 மேசைக்கரண்டி உப்பு சேர்க்காத வெண்ணெய் (அல்லது நெய்)
1 சிட்டிகை இமயமலை கல் உப்பு (சுவைக்கேற்ப)
:விருப்பத்தைப் பொருத்து டாப்பிங்ஸ்:
1 பேஷன் ஃப்ரூட்
புதிய மாம்பழத் துண்டுகள்
வால்நட் பருப்புகள்
செய்முறை
மாம்பழ மேல் அடுக்கிற்கான செய்முறை:
- மாம்பழங்களை தோலுரித்து நறுக்கவும்.
- பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகளுடன் தேங்காய்ப்பாலை ஒரு பிளண்டரில் போட்டு கலக்கவும்
- இந்த கலவையுடன் தேன் சேர்க்கவும்.
- அனைத்தும் ஒன்றிணைந்து, கலவை மென்மையாகவும் க்ரீமியாகவும் ஆகும் வரை நன்கு கலக்கவும். ஸ்மூதி மிகவும் கெட்டியாக இருந்தால், நீங்கள் விரும்பிய பதத்தை அடையும் வரை சிறிது தேங்காய்ப்பாலை அதில் சேர்க்கவும். ஸ்மூதியை ருசித்துப் பார்த்து, தேவைப்பட்டால், இனிப்பிற்காக மேலும் தேன் சேர்க்கவும்.
கேரமல் செய்யப்பட்ட வால்நட்டிற்கான செய்முறை:
- வால்நட் பருப்புகளை சிறிய துண்டுகளாக உடைக்கவும்.
- அடுப்பை நடுத்தர அளவு தீயில் வைத்து, ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தை சூடாக்கவும். சிறிதளவு தண்ணீருடன் வெல்லத்தை அந்த பாத்திரத்தில் சேர்க்கவும். வெல்லம் கரைவதற்கும், கருகுவதைத் தடுக்கவும் தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்தால் போதுமானது
- வெல்லம் கரையத் தொடங்கியதும் வெண்ணெயையும் மற்றும் வால்நட் பருப்புகளையும் சேர்க்கவும். பருப்புகள் வெல்லப்பாகுடன் சமமாக கலந்து பொன்னிறமாக வறுபட்டிருப்பதை உறுதிசெய்யவும், கருகுவதைத் தடுப்பதற்காகவும் தொடர்ந்து கிளறவும்.
- வால்நட் பருப்புகள் கேரமல் செய்யப்பட்டவுடன், வறுக்கப்பட்ட பருப்புகளை பேக்கிங் பேப்பருக்கு மாற்றவும். கெட்டியாவதைத் தவிர்க்க, அவற்றை ஒரு கரண்டியால் விரைவாகப் பிரிக்கவும்.
- பருப்புகள் வெல்லப் பாகில் ஒட்டிக்கொள்ளும் விதமாக சுமார் 5-7 நிமிடங்கள் கொடுத்து, பருப்புகளை ஆறவைக்கவும்,
தயிர் மேல் அடுக்கிற்கான செய்முறை:
- தயிரில் தேனை ஊற்றிக் கிளறி, மென்மையாகவும் க்ரீமியாகவும் மாறும்வரை கலக்கவும்.
விருப்பப்பட்டால் செய்யும் டாப்பிங்ஸ்:
- பேஷன் ஃப்ரூட்டை பாதியாக நறுக்கி, ஒரு கரண்டியால் விதைகளை எடுத்து, தனியாக எடுத்துவைக்கவும்.
- கூடுதல் மாம்பழத்தை நடுத்தர அளவிலான துண்டுகளாக நறுக்கவும்.
பரிமாறுதல்:
- மாம்பழ ஸ்மூதி, தயிர் மற்றும் கேரமல் செய்யப்பட்ட வால்நட்களை கண்ணாடி குவளையில் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கவும்.
- விருப்பப்பட்டால், பர்ஃபைட்டின் மேல் பேஷன் ஃப்ரூட் விதைகள், மாம்பழத் துண்டுகள் மற்றும் வால்நட் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- சிறந்த கட்டமைப்புடன் சுவைத்திட, இந்த கோடைக்கேற்ற இனிப்பு பதார்த்தத்தை உடனடியாக பரிமாறவும்.