
ஈஷா யோக மையத்தில் 30வது மஹாசிவராத்திரி திருவிழா பக்தி, கலாச்சாரம் மற்றும் பரவசங்கள் நிறைந்த ஒரு அற்புத கொண்டாட்டமாக அமைந்தது. இந்திய ஆன்மீகத் திருவிழாக்களில் மிக முக்கியமான ஒன்றாக விளங்கும் இந்த நிகழ்வில் பங்கேற்க, உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடினர். ஆதியோகியின் ஒப்பற்ற இருப்பால் இந்த இரவு களைகட்டியது. மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர், திரு ஜெக்தீப் தன்கர் அவர்களும் மற்றும் பிற மதிப்பிற்குரிய விருந்தினர்களும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஆதியோகியாம் சிவனுக்காக பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த மகத்தான இரவில், சக்திவாய்ந்த மந்திர உச்சாடனங்களும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் உயிரோட்டமிக்க கொண்டாட்டத்தை அனுபவித்திட வழிவகுத்தன. சத்குரு வழிநடத்திய சக்திவாய்ந்த தியானங்கள் முதல் கலைநயமும் உற்சாகமும் மிக்க இசை மற்றும் நடனங்கள் வரை, ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி 2024ஐ மகத்தான ஒரு உள்நிலை மாற்றத்திற்கான அனுபவமாக மாற்றியமைத்தன.
சத்குருவுடன் மாண்புமிகு இந்திய குடியரசுத் துணைத் தலைவர் திரு.ஜெக்தீப் தன்கர் வருகை புரிகிறார்.
“யோகி ஷிவ மஹாதேவ்” என்ற உச்சாடனத்தின் அதிர்வுகளுக்கு மத்தியில், திரு.ஜெக்தீப் தன்கர் அவர்களும், பிற மதிப்பிற்குரிய விருந்தினர்களும் மஹாசிவராத்திரி 2024ஐ முறைப்படி தொடங்கி வைப்பதற்கு மேடைக்கு வருகிறார்கள்.
மாண்புமிகு இந்திய குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள், ஈஷாவில் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களை அனுபவித்து மகிழ்கிறார்.
சத்குரு தேசிய கீதத்தைப் பாடி நிகழ்வைத் தொடங்க, அனைவரும் அவருடன் இணைகிறார்கள்.
ஈஷா யோக மையத்தில் இரவு முழுவதும் நடைபெற்ற மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின்போது, ஆதியோகியைச் சுற்றியமைக்கப்பட்டிருந்த மேடை அலங்காரங்கள், சிவனின் இருப்பிடங்களில் ஒன்றான காசி நகரத்தைப் போன்று அமைக்கப்பட்டிருந்தன.
உள்நிலை மாற்றத்திற்கான மஹாசிவராத்திரி இரவின் மகத்தான சாத்தியம் பற்றி, சத்குரு இப்படிப் பகிர்கிறார்:
"மனிதர்களின் பரிணாம வளர்ச்சியை வேகப்படுத்துவது தான் பூமியில் இப்போது அவசரமாகத் தேவைப்படுகிறது. மஹாசிவராத்திரி இந்த செயல்முறையை இயல்பாகவே வேகப்படுத்துகிறது. அது வழங்கும் சாத்தியங்களுக்கு நீங்கள் திறந்திருப்பீர்களாக." - சத்குரு
மஹாசிவராத்திரி இரவில் ஆதியோகியின் அருளில் பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் திளைக்கிறார்கள்.
இந்த சக்திவாய்ந்த இரவின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஆழமான பார்வையை சத்குரு பகிர்ந்துகொள்கிறார்:
"மஹாசிவராத்திரி - ஒருவர் தன் எல்லையுள்ள தன்மையைக் கரைத்து, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் விதையாக இருக்கும் படைப்பின் மூலத்தினுடைய எல்லையற்ற தன்மையை உணர்வதற்கான வாய்ப்பு." - சத்குரு
ஹர் ஹர் மஹாதேவ் பாடலுக்கு சத்குரு நடனமாடுகிறார்.
ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களில் நடிகை தமன்னா கலந்துகொள்கிறார்
பக்தர்களுக்கு அன்புடன் மஹா அன்னதானத்தைப் பரிமாறும் தமன்னா.
சோடாஃப் பெய்ரூட் இசைக்குழு லெபனானின் உயிரோட்டத்தை மஹாசிவராத்திரியில் கொண்டுசேர்த்தது. அவர்களின் பாரம்பரிய இசையை வெளிப்படுத்தும் ஓர் உயிர்த்துடிப்புமிக்க இசைநிகழ்ச்சியாக அரங்கேறிய இது, லெபனானின் ஒப்பற்ற கொண்டாட்ட உணர்வை வெளிப்படுத்தியது.
சமகால இசைப் பாணியுடன் இந்திய பாரம்பரிய இசையின் அம்சங்களைக் கோர்ப்பதில் திறமைபெற்ற ஷங்கர் மஹாதேவன் அவர்கள், தனது ஆற்றல்வாய்ந்த மற்றும் உணர்வுப்பூர்வமான குரல்வளத்தை வெளிப்படுத்துகிறார்.
சந்தீப் நாராயண் மற்றும் பிருத்வி கந்தர்வ் ஆகியோர் தங்கள் பாடலுடன் தங்கள் நுட்பமிக்க இசைத்திறத்தால் ஒரு உன்னதமான அழகியலைச் சேர்த்தனர்.
இதயப்பூர்வமான வார்த்தைகளால் சத்குரு தனது ஆழமிக்க ஆசீர்வாதங்களை வெளிப்படுத்துகிறார்:
"சிவனுடைய இந்த மகத்தான இரவு, விழித்தெழும் ஒரு மகத்தான இரவாக உங்களுக்கு அமையவேண்டும் என்பதுதான் என் ஆசையும் ஆசியும், ஏனென்றால் இது மனிதர்கள் மட்டுமே உணரக்கூடிய பேறு." - சத்குரு
நேரில் வருகைதந்துள்ள அனைவருக்கும் மற்றும் நேரலையில் இணைந்திருக்கும் பல லட்சம் மக்களுக்கும் சக்திவாய்ந்த நள்ளிரவு தியானத்தை சத்குரு வழங்குகிறார்.
மஹாசிவராத்திரியின் சாரத்தை தனது ஆழமிக்க நுண்ணறிவின் மூலம் சத்குரு இவ்வாறு வெளிப்படுத்துகிறார்:
"அனைத்து படைப்புக்கும் மூலமான அந்த பரந்த வெறுமையின் அனுபவத்திற்கு உங்களை நீங்களே கொண்டுவருவதற்கான சாத்தியத்தை மஹாசிவராத்திரி வழங்குகிறது." - சத்குரு
சத்குருவுடன் நள்ளிரவு தியானத்திற்குப் பிறகு ஆதியோகிக்கு அக்னி அர்ப்பணமாக நிகழ்த்தப்படும் கண்கவர் மஹாஆரத்தி, இரவு முழுவதும் நடைபெறும் விழாக்களில் மிகவும் பிரமிக்க வைக்கும் ஒரு நிகழ்வாகும். தியானத்தின் ஆழமிக்க அசைவின்மை, நெருப்பு நடனத்தின் உற்சாகத்திற்கு எவ்வித தடையுமின்றி அனுமதிக்கிறது, இது உள்நிலை அமைதியிலிருந்து வாழ்க்கையின் உயிரோட்டமிக்க கொண்டாட்டத்திற்கு மாறும் ஆழமான தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
ஆதியோகியை பிரமிப்புடன் பார்க்கும் பிரபல நடிகை பூஜா ஹெக்டே.
தாராவி ட்ரீம் புராஜெக்ட் குழுவினர் வழங்கிய, மண் காப்போம் குறித்த தமிழ் மற்றும் ஹிந்தி ராப் பாடல்கள் சிவனின் மகத்தான இரவை துள்ளலுடன் கொண்டாடச் செய்ததோடு மட்டுமல்லாமல், அழிந்துவரும் உலக மண் வளத்தை உயிர்ப்பிக்க உறுதிபூண்டுள்ள அனைவருக்கும் உத்வேகமாகவும் அமைந்தன.
ஒரு அற்புதமான நிகழ்ச்சிக்காக புராஜெக்ட் சம்ஸ்கிருதியுடன் Beatboxers ஆர்யன் மற்றும் சந்தன் ஆகியோர் இணைகிறார்கள்
சூஃபி இசையின் நாட்டுப்புற பாடகர் மூரலாலா மர்வாடா, சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவுடன் இணைந்து, உற்சாகமிக்க நாட்டுப்புற பாடல்களை வழங்கி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கிறார்.
சந்தீப் நாராயண் மற்றும் சம்ஸ்கிருதி குழந்தைகள் தங்கள் நுட்பமிக்க இசையின் மூலம் லட்சக்கணக்கான இதயங்களை ஆழமாகத் தொடுகிறார்கள்.
பழம்பெரும் பாடகர் குருதாஸ் மான் இசையமைத்த "பம் போலே" இரவு முழுவதும் நிகழ்ந்த மஹாசிவராத்திரி நேரலையில் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கிறது.
50 லட்சம் ருத்ராட்ச மணிகளை சத்குரு பிரதிஷ்டை செய்கிறார். இதை இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் இலவசமாகப் பெறுவார்கள். இதற்காகப் பதிவு செய்தவர்களுக்கு, சிவனின் அருளை கிரகிக்கும் தன்மையை அதிகரிக்கும் விதமாக, ஒரு எளிய ஆன்மீக செயல்முறைக்கான தீட்சை வழங்கப்படும்.
ஹிப்-ஹாப் கலைஞரான பாரடாக்ஸ், "பாம் லஹ்ரி" என்ற உயிர்த்துடிப்பு மிக்கதொரு நிகழ்ச்சியை வழங்கி, பார்வையாளர்களுக்கு பேரானந்தப் பரவசத்தின் அலைகளை பரப்புகிறார்.
புகழ்பெற்ற MTV Hustle 2.0 நிகழ்ச்சியின் பங்கேற்பாளரான பாரடாக்ஸ், “போலா நாச்சே” பாடலைப் பாடியபோது நடனமாடிய சத்குரு.
Indian Idol வெற்றியாளர் பவன்தீப் ராஜன் அவர்கள் ஆதியோகி பாடலை வழங்கி, அனைவரையும் ஈர்க்கிறார்.
சக்திவாய்ந்த மஹாசிவராத்திரி இரவில் பங்கேற்று அனுபவித்த HRH ஹோட்டல்கள் குழுமத்தின் இயக்குனரான உதய்பூரைச் சேர்ந்த லக்ஷ்யராஜ் சிங் மேவார் அவர்கள், "இந்த புனிதமான இரவில், தெய்வீகத்துடன் நமது ஆன்மாவை இணைத்ததற்காக நன்றி" என சத்குருவுக்கு நன்றி கூறுகிறார்.
தமிழ் இசைப் பாடகர் V.M.மகாலிங்கம் அவர்களில் ஆற்றல் மிக்க இசை அர்ப்பணம், அதிகாலை வேளையில் பார்வையாளர்களை எழுந்து ஆடவைத்தது.
சக்திவாய்ந்த "ஷிவ ஷம்போ" உச்சாடனத்துடன் இரவு முழுக்க நடைபெற்ற கொண்டாட்டத்தை சத்குரு நிறைவுசெய்கிறார்.
இதே இரவில், பெங்களூரு சத்குரு சந்நிதியில் நடைபெற்ற இரண்டாவது மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில், ஆதியோகியின் முன்னிலையில் இரவுமுழுக்க இசை, நடனம், தியானம் மற்றும் பேரானந்தத்தில் பக்தர்கள் திளைத்தனர்.