CONSCIOUS PLANET

சமூக ஊடக செல்வாக்காளர்களுக்கு உலகை மாற்றக்கூடிய வல்லமை எதனால் உள்ளது?

ஈஷா யோக மையத்தில் நிகழ்ந்த ஒரு சந்திப்பின்போது, சமூக ஊடக செல்வாக்காளர்கள் உலகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த தங்கள் தளங்களை பயன்படுத்துவதற்கு சத்குரு அவர்களைச் சந்தித்து ஊக்கமளித்தார். சர்வதேச பார்வையாளர்களைச் சென்றடைந்து, ஒரு விழிப்புணர்வான உலகை உருவாக்க உதவுவதற்கு, மனித வரலாற்றில் இப்போதைய காலகட்டம், ஒரு அசாதாரண வாய்ப்பை ஏன் வழங்குகிறது என்று அவர் விளக்கினார்.

உங்கள் குரலை வலிமையுடன் ஓங்கச்செய்வது

சத்குரு: நமஸ்காரம். உங்கள் அனைவரையும் இங்கு பார்ப்பது அற்புதமாக இருக்கிறது. ஒருவேளை, இது 25 ஆண்டுகளுக்கு முந்தைய காலமாக இருந்தால், நீங்கள் ஏதோ ஒரு அலுவலகத்தில் கடுமையாக வேலை செய்துகொண்டு, நீங்கள் விரும்பிய அல்லது விரும்பாத விஷயங்களைச் செய்துகொண்டு இருந்திருப்பீர்கள். ஒரு சமூக ஊடக செல்வாக்காளராக இருப்பது என்றால் அதன் அர்த்தம் என்ன? மற்றவர்களுக்குக் கூறுவதற்கு புத்திசாலித்தனமான ஏதோ ஒரு விஷயம் நம்மிடத்தில் இருந்தால், அதை உலகமே கேட்குமாறு செய்யக்கூடிய திறன் கொண்ட முதல் தலைமுறையினராக நாம் இருக்கிறோம். இது ஒரு சிறிய விஷயமல்ல. ஒருவர் ஒட்டுமொத்த உலகத்திடமும் பேசுவதற்கு, மனிதகுல வரலாற்றிலேயே இதற்கு முன்பு எப்போதும் சாத்தியப்பட்டதில்லை.

கடந்த காலங்களில் எத்தனையோ மகத்தான மகான்கள் இந்த பூமிக்கு வந்துள்ளனர், ஆனால் அவர்கள் பேசியபொழுது, ஒரு சில மக்கள் மட்டும்தான் அவர்கள் கூறியதைக் கேட்டனர். அவர்களிலும், பாதிப்பேர், தான் கேட்ட விஷயங்களைத் தவறாகப் புரிந்துகொண்டனர், சிலர், அந்த மகான்கள் என்ன கூறுகின்றனர் என்பதையே புரிந்துகொள்ளவில்லை, மற்றும் சொற்பமானவர்கள் மட்டுமே அதை உள்வாங்கியிருக்கலாம். ஆனால் இப்போது, நாம் இங்கே அமர்ந்துகொண்டு, ஒட்டுமொத்த உலகத்திடமும் பேசமுடிவது என்பது மனிதகுல வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை. அந்த சாத்தியத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள். இது ஏதோ ஒரு புதுமையான பாணியையோ அல்லது வேறு ஏதோ ஒரு விஷயத்தைப் பரப்புவதற்கானதோ அல்ல. இது உலகத்தையே மாற்றமடையச் செய்யும் ஒரு சாதனமாக இருக்கிறது.

பூமியில் சொர்க்கத்தை உருவாக்குவது

மாற்றம் என்றால், அனைவரையும் நீங்கள் விரும்பும் விதத்தில் உருவாக்குவது என்று அர்த்தமல்ல. அதை அறிந்துகொள்வது முக்கியம். பெரும்பாலான மனிதர்களும், அவர்கள் இருக்க விரும்பும் விதமாகவே இல்லை. நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அப்படி அவர்கள் உருவானால், அது நல்ல விஷயம் கிடையாது. அது சர்வாதிகார அணுகுமுறை என்று அழைக்கப்படுகிறது. அது மாற்றமும் அல்ல. அவர்கள் இருக்க விரும்பும் விதமாக அவர்கள் உருவாகவேண்டும். இதைப் புரிந்துகொள்வதற்கு உதாரணமாக, உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் பரவசமாக வாழவேண்டுமா அல்லது எப்போதும் துன்பத்தில் இருக்கவேண்டுமா என்ற தேர்வு கொடுக்கப்பட்டால் – எப்படி இருப்பதை நீங்கள் தேர்வு செய்வீர்கள்?

மாற்றம் என்றால், அனைவரையும் நீங்கள் விரும்பும் விதத்தில் உருவாக்குவது என்று அர்த்தமல்ல.

நீங்கள் பரவசமாக இருப்பதைத்தான் தேர்வு செய்வீர்கள். பிரச்சனை என்னவென்றால், இந்தக் கேள்வியை உங்களுக்கு நீங்களே ஒருபோதும் கேட்டுக்கொண்டதில்லை. உங்களுக்கு ஒரு தேர்ந்தெடுத்தல் இருந்தால், உங்களுக்கான அதிகபட்ச இனிமையைத்தான் நீங்கள் தேர்வு செய்வீர்கள், அல்லவா? ஆனால் பூமியின் பெரும்பாலான மக்களும் அந்த சாத்தியத்தையே கைவிட்டுவிட்டனர். இங்கே அது சாத்தியம் இல்லை என்று அவர்கள் எண்ணுகின்றனர். இதனால்தன் சொர்க்கம் என்ற கருத்தாக்கத்தை அவர்கள் உருவாக்கிவிட்டனர். என் மனதில், சொர்க்கம் என்ற கருத்தாக்கமே மனிதகுலத்துக்கு எதிரான பெருங்குற்றம்.

நீங்கள் நன்றாக வாழவேண்டுமென்றால், அதற்கு இதுதான் இடம். இங்கு நன்றாக வாழ்வதற்கு தங்களுக்குத் தாங்களே திறனில்லாமல் செய்துகொண்டு, மற்ற எவரும் நன்றாக வாழமுடியாததை உறுதிசெய்வதற்கும், அவர்களால் இயன்றதைச் செய்பவர்கள்தான், அனைவரும் அற்புதமாக வாழ்வதாகக் கருதப்படுகின்ற வேறொரு இடத்தை உருவாக்கியுள்ளனர். அப்படிப்பட்ட அற்புதமான ஒரு இடம் இருக்கிறது என்றால், அவர்கள் ஏன் அங்கு செல்லாமல் இருக்கின்றனர்? அவர்கள் அங்கு செல்லவில்லை ஏனென்றால் அவர்கள் நீங்கள் செல்லவேண்டுமென விரும்புகின்றனர். இருப்பினும், எந்த ஒரு உணர்வுள்ள, அக்கறையுள்ள மனிதரும் உலகை மாற்றமுடிவதும், மனிதகுல வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.

பூமியைக் காப்பதற்கு நமது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துவது

அதற்கு அதிகாரபலமோ, தேர்வு செய்யப்படுவதோ, அல்லது ஒரு அரசனுக்கு மகனாகப் பிறப்பதோ தேவையில்லை – அவர்களுள் நீங்கள் “யாராகவும் இல்லை” என்றாலும், அப்போதும் உலகை மாற்றக்கூடிய திறன் பெற்றுள்ளீர்கள். இதைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. மனித மாற்றத்தைப் பொறுத்தவரை, நமக்கு எப்போதும் இந்த மகத்தான ஆற்றல் உள்ளது. நீங்கள் அனைவரும் மண் காப்போம் இயக்கம் குறித்து கேள்விப்பட்டுள்ளீர்கள், இது விழிப்புணர்வான உலகம் உருவாக்குவோம் என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்த ஆண்டு, 2023 இல், விழிப்புணர்வான உலகத்தின் தடத்தை மேம்படுத்தும் நமது முயற்சிகளில் கவனம் செலுத்துவோம். விழிப்புணர்வான உலகம் என்பது ஒரு நிறுவனமோ அல்லது ஒரு மக்கள் குழுவோ அல்ல – அது நீங்கள் அனைவரும்தான்.

எந்த ஒரு உணர்வுள்ள, அக்கறையுள்ள மனிதரும் உலகை மாற்றமுடிவதும், மனிதகுல வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.

நாம் ஒவ்வொருவரும் சொந்தமாக ஏதோ ஒன்றை சாதிக்க முயற்சிப்பதில் அர்த்தமில்லை. ஒரு தலைமுறையாக, ஏதோ ஒன்றைச் சாதிப்பதற்கு இணைந்து செயல்பட்டால்தான், நியாயமான பலன்கள் விளையும். உலகத்தில் பல பிரச்சனைகள் உண்டு என்று மக்கள் எண்ணுகின்றனர், ஆனால் உண்மையில் ஒரே ஒரு பிரச்சனைதான் உள்ளது: அதுதான், மனிதன். மனிதன் ஏன் பிரச்சனையாகியுள்ளான்? பரிணாம வளர்ச்சி அறிவியலின்படி, நாம் பரிணாமவளர்ச்சியின் உச்சமாக இருக்கிறோம். மற்ற அனைத்து உயிரினங்களுடன் ஒப்பீட்டளவில் நாம் உலகத்தின் உச்சத்தில் இருக்கிறோம் – பூமியிலேயே நாம் அதிபுத்திசாலித்தனம், திறன், மற்றும் திறமையான உயிரினமாக இருக்கிறோம். உங்களில் சிலர் இதனை மறுக்கலாம், அது பரவாயில்லை.

மனித புத்திசாலித்தனமும், சாத்தியமும் ஒரு பிரச்சனையாகியுள்ளது ஏனென்றால் அவை விழிப்புணர்வின்றி, உந்துதலால், மேலும் நிர்ப்பந்தமாக கையாளப்படும்பொழுது, அது அழிவுக்கு வழிவகுக்கின்றது. இந்த புத்திசாலித்தனமும், திறமையும் விழிப்புணர்வாக வெளிப்பட்டால் மட்டுமே, அது ஒரு தீர்வாகவும், ஒரு பெரும் சாத்தியமாகவும் இருக்கும். இல்லையென்றால், அது ஒரு பேரழிவு. மேன்மேலும் மக்கள் வல்லமை பெறும்பொழுது, அழிவுகள் மிகப்பெரிய அளவில் வெளிப்படும். நீங்களே அறிந்திருப்பீர்கள், மண் சூழலியல் மற்றும் பருவ நிலை மாற்றம் இரண்டும் பேரழிவாக உள்ளன.

விழிப்புணர்வு மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்

மற்றொரு பேரழிவு என்னவென்றால், மனிதர்கள் அவர்களுக்குள் நொறுங்கிக்கொண்டிருக்கின்றனர். இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் நாம் “மனரீதியான நோய்கள்” என்று முத்திரையிடக்கூடும். புறச்சூழலில் நன்றாக, வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கும்கூட, தினசரி அளவில் அவர்களுக்குள் அனுபவிக்கும் மனரீதியான சித்திரவதை நம்பவியலாத அளவுக்கு இருக்கிறது. இதற்கு முக்கியமாக, அவர்கள் தேவையான விழிப்புணர்வு இல்லாமல், தங்களது புத்திசாலித்தனத்தைக் கையாள முயற்சிக்கின்றனர்.

நாம் அதிக விழிப்புணர்வு கொண்ட மக்கள்தொகையாக இருப்பது முக்கியமானது.

நாம் அதிக விழிப்புணர்வு கொண்ட மக்கள்தொகையாக இருப்பது முக்கியமானது. இல்லையென்றால், நமக்கு தீர்வே இருக்காது. பூமியிலேயே மனிதர்களாகிய நாம் ஏற்கெனவே பெரும் பிரச்சனையாகத்தான் இருக்கிறோம். வேறு எந்த உயிரினமும் இப்படிப்பட்ட பிர்ச்சனைகளை ஏற்படுத்துவதில்லை. பூமியின் மிக புத்திசாலித்தனமும், திறனும் கொண்ட உயிரினம் மனித இனம். இது பிரம்மாண்டமான சாத்தியமாக இருக்கிறது. ஆனால் அதுவே ஒரு பிரச்சனையாகியுள்ளது ஏனென்றால் நாம் விழிப்புணர்வாக இல்லாமல் எல்லா விஷயங்களையும் விழிப்புணர்வின்றி கையாளுகிறோம். ஆகவே, அனைத்து மக்களுக்கும் பெரிய அளவில் நாம் விழிப்புணர்வான உலகைக் கொண்டு வருவோம்.

விழிப்புணர்வான தலைமுறையின் ஒருங்கிணைக்கும் சக்தி

தற்போது, ஒரு விழிப்புணர்வான உலகை உருவாக்கும் உறுதிகொண்ட மக்களை அதிகமாகச் சென்றடைவது முக்கியமானது. அதனால், நாம் பேசும்போது, ஒட்டுமொத்த உலகமும் கவனிக்கும். இது சாத்தியமாகியிருப்பது, மனித வரலாற்றில் இதுதான் முதல்முறை. நாம் வாழும் காலத்தில், நம்மால் செய்யமுடிந்ததை நாம் செய்யவில்லை என்றால், அதனை ஒரு பேரழிவாகவே நான் கருதுகிறேன். ஒரு தலைமுறையாக, நாம் ஒரு பேரழிவாக இல்லாதிருப்பதே என் விருப்பமும் நோக்கமும்.