நடப்புகள்

சத்குருவைத் தொடருங்கள்

கடந்த சில வாரங்களின் சத்குரு நிகழ்வுகள் பற்றிய ஒரு தொகுப்பு!

டாக்டர்.சங்கீதா ரெட்டி, அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் JMD, சத்குருவுடன் கலந்துரையாடல்

29 ஜனவரி

அப்பல்லோ மருத்துவமனைகளின் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர்.சங்கீதா ரெட்டி உடனான உரையாடலில், சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் மற்றும் எதிர்கால தொற்றுநோய்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தயார்நிலையில் இருக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றைப் பற்றி சத்குரு பேசினார். ஒருவரின் ஆரோக்கியத்திற்கு பொறுப்பேற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், ஆரோக்கியமாக இருப்பதற்கு உடலியல், உளவியல், இரசாயன நிலை மற்றும் சக்திநிலை செயல்முறைகளை நிர்வகிப்பதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். ஆரோக்கிய பராமரிப்பில் அறிவியலின் முக்கியத்துவத்தை ஒப்புகொண்ட சத்குரு, அதே நேரத்தில், மனித நல்வாழ்வென்பது அறிவியலில் மட்டுமல்ல, நமக்குள் செயல்படும் உயிர் மூலத்திலும் உள்ளது என்பதை பதிவு செய்தார்.

TV9 நெட்வொர்க்கின் CEO, பருண் தாஸின் நேர்காணல்

30 ஜனவரி

இந்தியா தனது உலகளாவிய குறிக்கோள்களை எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்பதையும், இதற்கான வெற்றிப் பயணத்தில் இளைஞர்கள் ஏன் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் சத்குருவும் பருணும் கலந்துரையாடினர். மேலும், இணையம், அலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் 2000ம் ஆண்டிலிருந்து உலகம் எவ்விதத்தில் மாறியுள்ளது என்பதையும் அவர்கள் பேசினர்.

சத்குருவுடன் சம்யமா

1–8 பிப்ரவரி

ஏறத்தாழ ஆயிரம் பங்கேற்பாளர்கள் ஈஷா யோக மையத்தில் 8 நாட்கள் முழுமையான மௌனத்தில் இருந்தனர். வாழ்க்கையை மாற்றும் யோக செயல்முறையான சம்யமா நிகழ்ச்சியை சத்குரு நேரடியாக அவர்களுக்கு வழங்கினார். நீங்கள் உருவாக்கும் இரசாயனத் தடைகள், கர்மச் சுமைகள், முடிவுகள் மற்றும் சுய தடைகளை நீக்கி, உங்கள் சக்தி மண்டலம் தடையின்றி பிரதிபலிக்கும் வகையில் சம்யமா செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சத்குரு விளக்கினார்.

பக்தி தொலைக்காட்சி நேர்காணல்

10 பிப்ரவரி

இந்த சுவாரஸ்ய நேர்காணலில், தங்களைக் கட்டுப்படுத்தியுள்ள எல்லைகளைத் தாண்டிச் செல்வதற்கு மக்களுக்கு என்ன தேவை என்பதையும், இந்த செயல்முறையில் பக்தி ஏன் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கும் என்பதையும் விளக்கினார். மேலும், இந்தியக் கலாச்சாரத்தில் ஆன்மீக செயல்முறை எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பதையும் சத்குரு அவர் விளக்கினார்.

இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் இந்திய சங்கத்தின் (IAGES) 20வது ஆண்டு மாநாட்டில் சத்குரு

11 பிப்ரவரி

கோவையில் நடைபெற்ற இந்த மதிப்புமிக்க கூட்டத்தில் பங்கேற்ற இரைப்பைக் குடலியல் நிபுணர்கள் மத்தியில் உரையாற்றிய சத்குரு, நவீன மருத்துவம் உடலின் இரசாயனத்தை நிர்வகிப்பதில் கவனம் செலுத்தும் நிலையில், யோகிகள் சக்திநிலையிலான ஒத்திசைவின் அடிப்படையில் நல்வாழ்வை அணுகுகிறார்கள் என்று குறிப்பிட்டார். மன அழுத்தத்தைக் கையாள்வது, தானே சுயமாகக் கார் ஓட்டுவதில் எதனால் பெருமிதம், எப்படி ஒருவர் பேரின்பத்தின் வேதியியலை உள்நிலையில் உருவாக்குவது போன்றவை பற்றிய பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் சத்குரு பதிலளித்தார்.

துபாயின் உலக அரசாங்கங்களின் உச்சி மாநாட்டில் சத்குரு

13-15 பிப்ரவரி

The உலக அரசாங்கங்கங்களின் உச்சி மாநாடு என்பது, உலகளாவிய ஆட்சிமுறை மற்றும் எதிர்கால பொதுக் கொள்கை வரையறைகளை ஆராய்வதற்கான ஒரு சர்வதேச மாநாடு. துபாயில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வில், அரசியல் தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் உலகளாவிய வல்லுநர்கள் இணைந்து, முக்கிய பிரச்சனைகளையும் எதிர்கால அரசாங்கங்களை வடிவமைப்பது குறித்தும் விவாதித்தனர்.

இந்த உச்சி மாநாட்டில் உரையாற்ற சத்குரு அழைக்கப்பட்டிருந்தார். சுவாரஸ்யமிக்க வெர்ச்சுவல் நிகழ்வின் போது, க்ரிப்டோகரன்சி - எத்திரீயமின் நிறுவனரான விட்டலிக் புட்டரின் அவர்களும் சத்குருவும் , கிரிப்டோகரன்சி, விழிப்புணர்வு மற்றும் உலகை எவ்வாறு சிறந்த ஓர் இடமாக மாற்றுவது என்பது பற்றி கலந்துரையாடினர்.