ஈஷா சமையல்

அடை தோசை

தேவையான பொருட்கள்

1 கப் அரிசி

¼ கப் கடலை பருப்பு

¼ கப் துவரம் பருப்பு

2 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு

2 மேஜைக்கரண்டி உளுந்து

¼ தேக்கரண்டி வெந்தயம்

½ தேக்கரண்டி சீரகம்

½ தேக்கரண்டி கடுகு

½ தேக்கரண்டி மிளகாய் பொடி

1 தேக்கரண்டி மஞ்சள் பொடி

1-2 பச்சை மிளகாய்

2 மேஜைக்கரண்டி வெட்டிய இஞ்சி

2 மேஜைக்கரண்டி வெட்டிய கறிவேப்பிலை

உப்பு தேவைக்கேற்ப

4 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய்

செய்முறை

மாவு தயாரித்தல்

1) அரிசி, பருப்பு மற்றும் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும்.

2) காலையில், நீரினை வடித்த பிறகு, பொருட்களை மிக்சி அல்லது கிரைண்டரில் நன்றாக மைய அரைத்து கொள்ளவும்.

3) சீரகம், கடுகு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, பச்சை மிளகாய், வெட்டிய இஞ்சி மற்றும் வெட்டிய கறிவேப்பிலை இலைகளை அந்த கெட்டியான மாவில் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, சரியான பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்.

4) தேவைக்கேற்ப உப்பினை சேர்த்து மீண்டும் கலக்கிக்கொள்ளவும்.

அடை தோசை சுட:

1) தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைக்கவும். சிறிது எண்ணெய்விட்டு கல் முழுவதும் பரவும் விதமாக கரண்டியால் தேய்த்துவிடவும்.

2) கல் சூடானதும், ஒரு கரண்டி மாவினைவிட்டு சமமான வட்டமாக பரப்பிவிடவும்.

3) தோசையின் மேல் ஒரு தேக்கரண்டி எண்ணெயை விடவும்.

4) அடிப்பகுதி லேசான பொன்னிறமாக வெந்ததும், தோசையினை திருப்பிபோட்டு அடுத்தபகுதியினை வேகவிடவும்.

5) இரண்டு பக்கமும் வெந்ததும், கல்லில் இருந்து தோசையை எடுத்த பிறகு , இந்த செயல்முறையை மாவு இருக்கும்வரை தொடரவும்.

6) இதனை சூடாக, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அல்லது உங்களுக்கு பிடித்த சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு: சுவையைக் கூட்ட, துருவிய தேங்காய், நன்றாக சிறிது சிறிதாக வெட்டிய காய்கள், மற்றும் புதிய கொத்தமல்லி இலைகளை மாவில் சேர்க்கலாம்.