கலாச்சாரம் & தேசம்

இந்தியாவின் தனிச்சிறப்பு, அதனை உலகத் தலைமையின் பாதையில் நிறுத்தக்கூடுமா?

மனித சாத்தியங்களுக்கான ஆழமான வெளிப்பாடுகளுக்கும், உள்தன்மையின் நல்வாழ்வுக்கும் , இந்தியா காலங்காலமாக மையப்புள்ளியாக இருந்துவந்துள்ளது. உலகத்துக்கே குருவாக மாறுவதற்கான நம் நாட்டின் ஆற்றலைக் குறித்தும், அதன் ஆழ்ந்ததன்மையையும், இணைத்துக்கொள்ளுதலையும் அரவணைப்பதின் மூலம் சர்வதேச கவனத்தை எப்படி ஈர்க்கமுடியும் என்பதையும் சத்குரு இந்தப்பதிவில் எடுத்துரைக்கிறார்.

சத்குரு: ஆயிரக்கணக்கான வருடங்களாக, இந்தக் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தனிச்சிறப்பு (USP) இதுவாகத்தான் இருந்து வந்துள்ளது: வாழ்வின் ஆழமான அம்சங்கள், மனிதரின் இயக்கவியல் நுட்பத்தைப் புரிந்துகொள்ளுதல், நாம் எப்படி உருவாக்கப்படுகிறோம், நமக்குள் இருக்கும் உச்சபட்ச சாத்தியங்கள் என்ன இவற்றை ஒரு மதிப்பீடாக மட்டுமல்லாமல், ஒரு ஆழமான உள்தன்மையின் உணர்தலாக, நமக்குள்ளேயே இருக்கும் மனிதத்தன்மையை வெளிப்படுத்துதல் தொடர்பான எந்த ஒன்றையும் மக்கள் தேடிக்கொண்டிருந்தால், அப்போதைய காலகட்டத்தில் பாரதம் அல்லது இந்துஸ்தானம் என்று அறியப்பட்ட நமது தேசத்தினை நோக்கியே எப்போதும் அவர்கள் வந்துள்ளனர். 25 நூற்றாண்டுகளுக்கும் மேலான காலத்துக்கு முன்பாக, கிரேக்கத்திலிருந்து பிதாகரஸும், பிற்பாடு அப்போலோனியஸும் வந்தபோது, இந்தியா ஒப்பீடு கடந்த தன்மையில் இருப்பதைப்பற்றி, அவர்கள் மிக வலிமையான ஒரு வாக்குமூலத்தை விட்டுச் சென்றனர்.

இன்று, உலக சுகாதார அமைப்பு, மனரீதியான நோய்ப் பெருந்தொற்று நேர்வதற்கான சாத்தியம் குறித்த ஆபத்திற்காக எச்சரிக்கை செய்கிறது. இந்த பூமியிலேயே ஒரு தனித்துவமான உயிரினமாக நம்மை உருவாக்கியுள்ள இரண்டு அம்சங்களை நாம் கவனத்தில் கொள்ளவில்லை.ஒரு மனிதர் உள் நிலையிலிருந்து எப்படி செயல்படுகிறார் என்பதன் இயக்கவியல் நுட்பத்தை நாம் கற்றுக்கொள்ளவுமில்லை, மற்றும் நமது மனம் என்ற கருவியைப் புரிந்துகொள்ளவுமில்லை. இது தொடர்பாக, இந்தியா எப்போதுமே மையப்புள்ளியாக இருந்துவந்துள்ளது.

உலகத்துக்கு ஒரு குருவாக இருப்பதற்கு நீங்கள் விரும்பினால், ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

சர்வதேச யோகா தினத்தை இந்தியா வழி நடத்துவதும், உலகத்துக்கு யோகாவின் இயக்கவியல் நுட்பத்தை பிரதம மந்திரியின் தலைமையின் கீழ் வழங்குவதும், ஐக்கிய நாடுகள் சபை அதைக் கையிலெடுத்து, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளின் பகுதியாகச் செய்ததும் அற்புதமானது. பிழைத்தலின் தேவைகளை அதிக எண்ணிக்கையிலான தேசங்கள் பூர்த்தி செய்துகொண்ட நிலையில், மனிதரின் உள் நிலையின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் இந்தியா தலைமையிடம் வகிக்கமுடியும். ஏனென்றால் நாம் செய்திருப்பதைப்போல் ஆழமாக, வேறு எந்தக் கலாச்சாரமும் அதில் முதலீடு செய்யவில்லை.


உலகமேடையில் உயருகின்ற இந்தியா, உலக குருவாக இருக்கும் கருத்தின் மீதான எனது எண்ணங்களைப்பற்றி என்னிடம் யாரோ ஒருவர் கேட்டார். உலகத்துக்கு ஒரு குருவாக இருப்பதற்கு நீங்கள் விரும்பினால், ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அது ஒரு அதிகாரம் அல்ல, உயர்வதோ, அல்லது வெற்றிகொள்வதோ அல்ல – அது ஒரு அரவணைப்பு. நாம் உலகினை இணைத்துக்கொள்ளப் பார்க்கிறோமேயன்றி, அதை வெற்றிகொள்வது அல்ல. இது நமது வழியாக இருந்து வந்துள்ளது: இந்த நிலப்பரப்புக்கு எந்த விதமான மக்கள் வந்திருந்தாலும், எந்தப் போராட்டமும் இல்லாமல் அவர்கள் அதன் ஒரு பாகமாகியுள்ளனர், ஏனென்றால் இந்தக் கலாச்சாரம் அவர்களை அரவணைத்துள்ளது.

ஒரு குருவாக இருப்பது என்பது ஒரு அதிகாரத்தின் அல்லது செல்வாக்கின் பதவியல்ல, ஆனால் அது அன்பு மற்றும் இணைத்துக்கொள்ளுதலுடன் இருக்கக்கூடியது. நாம் செய்யவேண்டுவது இதுதான். நாம் அதை எப்படி முன்னெடுக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. யோகாவை அல்லது ஆன்மீக செயல்முறையை, இது இந்தியாவுக்குச் சொந்தமானது ஆனால் அவர்கள் வேறு தேசத்தவர்கள் என்று உலகமக்கள் கருதி, அதனை எதிர்க்கக்கூடாது. யோகா மனித குலத்திற்கானது. இது நமது மனிதத்தன்மை. இதனால்தான் ஒவ்வொருவரும் “வசுதைவ குடும்பகம்[1]” அதாவது, “உலகம் ஒரு குடும்பம்” என்று பொருள்படும் சமஸ்கிருத மந்திரத்தை உச்சாடணம் செய்கிறோம். நமது இலக்குகள் மனிதகுலத்துக்கு உரியது, தேசியத்துக்கு மட்டும் உரித்தானது அல்ல என்பது அதன் அடிப்படையான பொருள்.

ஆரோக்கியம் மற்றும் கல்வியில் சிறக்கவேண்டும். அனைத்துக்கும் மேலாக, நமது ஆழ்ந்ததன்மையும், இணைத்துக்கொள்ளுதலும் உலகத்தால் புறக்கணிப்பட முடியாத ஒரு விதத்தில் நாம் வாழவேண்டும்.

நாம் புரிந்துகொள்ளவேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு தேசம் வலிமையாக எழுந்து நிற்பதற்கு, அதனுடைய பலம் ஆதிக்கம் செலுத்துவதற்காக பயன்படுத்தப்படக்கூடாது, ஆனால் மாறாக, அனைவரையும் இணைத்துக்கொண்டு, அதன் ஒரு பாகமாக இருப்பதற்கு அவர்கள் விரும்பும்படி செய்வதற்கான ஆற்றலுடன் இருக்கவேண்டும். நாம் பொருளாதாரரீதியாக வலிமையுடன் இருக்கவேண்டும்; ஆரோக்கியம் மற்றும் கல்வியில் சிறக்கவேண்டும். அனைத்துக்கும் மேலாக, நமது ஆழ்ந்ததன்மையும், இணைத்துக்கொள்ளுதலும் உலகத்தால் புறக்கணிப்பட முடியாத ஒரு விதத்தில் நாம் வாழவேண்டும். கடந்த காலங்களில் நாம் இப்படித்தான் இருந்துள்ளோம் என்பதுடன் அப்படிப்பட்ட ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது.

நம்மை நாமே பறைசாற்றிக்கொள்வதற்கு இதை நாம் செய்யக்கூடாது, ஆனால் மாறாக, நமது இருப்பின் தன்மை உலகத்தின் கவனத்தை இயல்பாகவே ஈர்ப்பதாக இருக்கட்டும். கடந்த காலங்களில் நமது வழியும் அதுவாகத்தான் இருந்துள்ளது மேலும் எதிர்காலத்திலும் அவ்வாறு இருப்பதை நாம் தொடர்ந்திடவேண்டும். தனிப்பட்ட மனிதர்களைக் கட்டமைக்காமல், ஒரு தேசத்தை யாராலும் கட்டமைக்க முடியாது. தனிப்பட்ட மனிதரின் ஆழ்ந்ததன்மையும், நல்வாழ்வும்தான் ஒரு தேசத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது. இந்த அன்புக்குரிய பாரதத்தின் அனைத்து குடிமக்களும் அப்படி ஆகும்பொழுது, பிறகு தேசமும் அந்த வழியில் இருக்கும், அப்போது உலகம் அதைப் புறக்கணிக்கமுடியாது. அதைத்தான் நாம் செய்யவேண்டும்.